Pages

Tuesday, July 12, 2016

அரசிற்க்கு ஒரு வேண்டுகோள்!




அரசிற்க்கு ஒரு வேண்டுகோள்!

எனது கடமை மற்றும் என் தேவையை பூர்த்தி செய்து கொள்ளத்தெரியும், என்னால் உழைத்து சம்பாதித்து கரன்ட்பில் கட்ட முடியும், வீட்டிலுள்ள பெண்களுக்கு தேவைப்பட்டால் இரு சக்கர வாகனம் வாங்கித்தர முடியும், செல்போன் வாங்க முடியும், வாங்கிய கடனையும் கட்டமுடியும் இது என் கடமை!

மக்களுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட  நீங்கள் நாட்டுக்கு செய்ய வேண்டிய  கடமைகள் பல,...

விலைவாசியை கட்டுப்படுத்துவது,
தரமான சாலைகள் போடுவது,
தட்டுபாடற்ற குடிநீர் வழங்குவது,
பாலங்கள் கட்டுவது,
ஊழலை லஞ்சத்தை ஒழிப்பது,
தரமான பேரூந்துகள் பராமரிப்பது,
தடையில்லா மின்சாரம் தருவது உற்பத்தி செய்து தருவது,
அரசாங்க அலுவலகங்கள் சிறப்பாக இயங்குவது,
சிறந்த கல்வி இலவசமாக தருவது,
சிறந்த மருத்துவத்தை இலவசமாக வழங்குவது,
ஆறுகளை இணைப்பது,
ஏரி,குளங்களை தூர்வாருவது,
அணைகள் கட்டுவது, காவல்துறையை நவீனப்படுத்துவது,
தொழிற்துறைகளுக்கு முதலீடுகள் கவர்வது,
தொழிற்துறைக்கு. அடிப்படை கட்டமைப்புக்கள் அமைப்பது,
தொழிற்வளர்ச்சிக்கு திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல்,
மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்றுவது... இதுபோல் அரசாங்காத்தால் மட்டும் செய்யகூடிய வேலைகள் ஆயிரம் இருக்கிறது.

இதையல்லாம் செய்ய நம்மால்  செய்ய முடியுமா?
இதையெல்லாம் செய்வதற்கு அரசு  நிதியை பயன்படுத்தாமல் தேவையில்லாமல் நான் கேட்காமல் எனக்கு எதற்க்கு இலவசமா கொடுக்கிறிர்களே...

உங்கள் வேலை கடமையை செய்யாமல் என்னை, எங்களை திசைதிருப்ப இந்த இலவசதிட்டங்களா?

என் வேலையை அரசாங்கம் செய்தால், அரசாங்க வேலையை யார் செய்வது?

என் வீட்டுச்செலவுகளை அரசாங்கம் செய்தால், அரசாங்க செலவுகளுக்கு என்ன செய்வார்கள்? கடன் வாங்குவார்களா? இன்னும் அதிகமா வரிவசூல் செய்வார்களா?

அவர்கள் செய்ய வேண்டிய பெரிய கடமைகளை மறைக்க தட்டிக்கழிக்க எனக்கு நல்லதை செய்வதாக கூறி என் கடமையில் தலையிட்டு, என்னை தூங்க வைக்க இலவசம் என்ற போர்வையை போர்த்தி தூங்க விடுவது சரியா? அம்மா,எங்களை  சோம்பேறியாக்க வேண்டாம்,

நாங்கள் விழித்துக் கொண்டேன்
விழித்திடு மனிதா!

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எங்கள் சேவையை மட்டும் பார்!

பெயரைக் கேட்டாலே சும்மா அதிரும்!
உள்ளாட்சி தேர்தலில் எங்கள் பணி தொடரும்!


மக்கள் நல்லுறவுமக்கள் பணியில்...

No comments:

Post a Comment