மக்களாட்சி, மக்களுக்கான ஆட்சி ,மக்களின் தலைவருக்கான தேர்தல், ஒரு விரல் புரட்சி, தேர்தல் ஆணையம், தேர்தல் விதி, Evm, மிரட்சி, சூழ்ச்சி என பல முட்களை கடந்து,
மக்களின் வரிபணத்தில் தேர்தல் நடத்தி மக்கள் விருப்ப வாக்கு போட்டு மக்களின்
பிரதிநிதியாக தேர்தெடுத்து ஒருவரை சட்டசபைக்கு அனுப்பி வைத்தால்
சட்டசபை உள் விவகாரத்தால் நாம் தேர்ந்தெடுத்த நபர்களை தகுதி நீக்கம் செய்ய மக்களை விட சபாநாயகர் உச்சபட்ச அதிகாரம் கொண்டவராக உள்ளார்,மக்களின் விருப்பம் ஏமாற்றமளிக்கிறது,
ஆக இவர் தான் முதலமைச்சராக வேண்டும் என்று ஒட்டு மொத்த மக்கள் விருப்ப வாக்களித்தால் அவர் இல்லை, மக்கள் விருப்பமில்லாமல் நூற்று முப்பது பேரை கவனித்தால் முதலமைச்சர் ஆகி விடலாம், என்ற நிலை வந்தது, அதுவும் நடந்தது,
பணம் இருப்பவன் ஏலம் எடுப்பது போல ஆகிவிட்டது இந்த அரசியல், ஏலம் எடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா?
தேர்தெடுத்த மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பது???
ஒன்னும் செய்யாதவர்களை தேர்தெடுத்தவர்கள் தூக்கி எறியும் அதிகாரம் உண்டா???
மக்கள் பெயரை , லேபிளை வைத்து ஆடும் ஆட்டங்கள், மக்களுக்கு ஒட்டு மொத்த ஏமாற்றங்கள்...
No comments:
Post a Comment