Tuesday, May 31, 2016

கொடுத்துப்பார்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

நம் நாடு தான் இந்தோனிசியாவில் புயல் அடிச்சாலும் "இங்கிலாந்துலே சேதம் அடைந்தாலூம் ஓடி போய் உதவுவான், குறிப்பா இங்கிருக்கிற சென்னை வெள்ளத்திற்க்கு கோவையிலிருந்து போட்டி போட்டு உதவுனாங்க!

தப்பில்லை, பாராட்டு, அந்த கருணை மனசு உடனே மறைந்து
உண்மையில் பக்கத்து வீட்டுக்காரன் பசியிலிருந்தால், கஷ்டத்திலிருந்தால் கண்டுக்கமாட்டார்கள்.

கண்ணொதிரே சாப்பாட்டுக்கு வழியில்லாமல் குப்பை தொட்டியில் இருந்து எடுத்து சிலர் சாப்பிடுவார்கள் கண்டுக்கமாட்டான், சிலருக்கு இது ஒருநாள் உணவு என்பதை அறிந்தே அதில் வீணாக வெளியே கொட்டுவான், ஆரம்பத்தில் கொடுக்க மனசு வராது, கெட்டுபோன பின்பு கொடுப்பான்,
கையில் கொடுக்கும் மனசு வராது, ஒரு சிலர் கருணை இல்லத்திற்க்கு கொடுத்து அதிலும் விளம்பரம் தேடிக்கொள்கின்றனர், இருப்பினும் இது
தப்பில்லை நாலு பேருக்கு நன்மை இருந்தால் நல்லது.

விளம்பரத்தால் நாலு பேருக்கு கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் வளரும், எனவே முதலில் தன்னை சுற்றி உள்ளவற்க்கு உதவுங்கள், அவர்களை முதலில் கவனி கவலை கொள்.

 "மனிதநேயம் கானூங்கள்,
பக்கத்து விட்டுக்காரன் நம் கண்ணெதிரே பசியிலிருக்க தான் மட்டும் சாப்பிடுபவன் மனிதனல்ல!

மனிதனை மனிதனாக பார், முடிந்ததை கொடுத்துப்பார், மனதிருப்தி அடைவாய்!

அண்ணதானம் மிக சிறந்தது, கைத்தொழிலுக்கு வழிகாட்டு, கல்விக்கு வழிகாட்டு, நீயும் உன் குடும்பமும் நோயின்றி

சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.
மக்கள் நல்லுறவு

Sunday, May 29, 2016

இரயில் விபத்து

மக்கள் நல்லுறவு பகிர்கிறது
சாலையில் மோட்டார் வாகன விபத்து அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. இந்த விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் தேவையான அளவிற்கு கிடைத்து விடுகின்றன.ஆனால் ரயில் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, அதனைப் பெறும் முறை குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை.

இரண்டு ரயில்கள் மோதிக்கொள்வதோ, அல்லது ஒரு ரயில் தடம்புரள்வதோ ரயில் விபத்து ஆகும். இந்த விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. அதேபோல ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிர் இழப்போருக்கும், உடல் பாகங்களை இழப்போருக்கும்கூட நிவாரணம் வழங்கப்படுகிறது.ஆனால் இந்த செயல் தற்கொலை முயற்சியாகவோ, வேறு காரணங்களுக்காக தானாகவே மேற்கொள்வதாகவோ இருக்கக்கூடாது. இவ்வாறு தவறி விழுவோர் குடிபோதையில் விழுந்திருக்கக்கூடாது. மேலும் சட்டவிரோதமான குற்றச்செயலில் ஈடுபடும்போது தவறி விழுந்தாலும் இழப்பீடு கோரமுடியாது.

இதேபோல ரயில் பயணத்தின்போது நடக்கும் பயங்கரவாத செயல்கள், திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களால் பாதிக்கபோபடுவோரும் இழப்பீடு பெறலாம்.

இதற்காக மாநில அளவில் ரயில் (பயணிகள்) உரிமைத் தீர்ப்பாயம் [Railway Claims Tribunal] இயங்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கான ரயில் பயணிகள் உரிமைத் தீர்ப்பாயம் சென்னையில் இயங்கி வருகிறது.

விபத்து நடந்த ஓராண்டு காலத்திற்குள் இழப்பீடு கோரும் மனுவை பதிவு செய்யலாம்.உயிர் இழப்புக்கு அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வழங்கப்படும். அதேபோல உடல் உறுப்பு இழப்புக்கும் அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வழங்கப்படும். பொருள் இழப்புக்கும், இழப்பின் தன்மைக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படுகிறது.

ரயில் பாதையில் அத்துமீறி பிரவேசித்து, கவனக்குறைவாக நடந்துகொண்டு ஏற்படும் இழப்புகளுக்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது.

பயணச்சீட்டு பெற்று முறைப்படி பயணம் செய்யும் பயணிகளே இந்த நிவாரணங்களை பெற தகுதி உடையவர்கள். அதே போல முறைப்படி ரயில் பெட்டியின் உட்புறத்தில் பயணம் செய்பவர்கள்தான் சட்டரீதியான பயணிகளாக கருதப்படுவார்கள். ரயில் பெட்டியின் கூரைமேல் அமர்ந்து செல்பவர்களுக்கு இந்த நிவாரணங்கள் கிடைக்காது. மேலும் கூரை அமர்ந்து செல்பவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ரயில்வே நிர்வாகம் அளிக்கும் இந்த நிவாரணங்களை முறைகேடாக பெறமுயற்சி செய்பவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் பரிசாக கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

முகவரி:
Railway Claims Tribunal,
"Freshford"
50, McNichols Road,
Chetpet,
Chennai - 600 031

மக்கள் நல்லுறவு

Tuesday, May 10, 2016

வாக்கு உன் விருப்பம்

மக்கள் நல்லுறவு

மக்களுக்கு நல்லதை இவர் செய்வார் என நம்பக்கூடிய நபர்கள் உங்கள் பகுதியில் வேட்பாளர்களாக இருக்கும்பட்சதில் தயங்காமல் வாக்களியுங்கள்!

நீங்கள்  எளிதாக அனுகும் பகுதியில் உள்ளவர்களாக, பழகுவதற்க்கும், செயல்படுவதற்க்கும் சிறந்தவர்களாக இருப்பது அவசியம்.

வாக்கு உங்கள் உரிமை, கடமை,  அதில் வேறுயாரும் தலையிடமுடியாது,
விருப்புரிமைபடி ஆதரவு கொடு.

நல்லவர்களை தேர்ந்தெடுத்து நாட்டுக்கு கொடு!
மனசாட்சிப் படி சிந்தித்து செயல்படு!

100% வாக்கு 100% வெற்றி

மக்கள் நல்லுறவு

பீட்ரூட் நன்மை

மக்கள் நல்லுறவு பகிர்கிறது        

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்
உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றியமையாத உணவுப் பொருட்கள். அனைத்து காய்கறிகளும் ஏராளமான சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது. 

அதில் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ஓர் காய்கறி என்று சொல்லும் போது அனைவரும் பரிந்துரைப்பது பீட்ரூட்டைத் தான். அத்தகைய பீட்ரூட் இனிப்பாக இருப்பதால், அதனை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், ஜூஸ் போட்டுக் குடிக்கலாம்.

அதிலும் பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும் புற்றுநோய் தாக்கம் இந்தியாவில் அதிகம் இருப்பதால், அதனைத் தடுக்க பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வர நல்ல பாதுகாப்பு உடலுக்கு கிடைக்கும். இதுப்போன்று இன்னும் நிறைய நன்மைகள் பீட்ரூட் ஜூஸை தினமும் குடிப்பதன் மூலம் கிடைக்கும்.

கல்லீரல் செயல்பாடு :-
பீட்ரூட் ஜூஸை குடிப்பதன் மூலம், அதில் உள்ள குளுதாதயோன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரல் பாதிப்படைவதில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். மேலும் இந்த ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.

இரத்தணுக்கள் அதிகரிக்கும்:-
பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடித்து வாருங்கள். முக்கியமாக இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும்.

அழற்சியினால் ஏற்படும் வீக்கம் குறையும் :-
கிருமிகளின் தாக்கத்தினால் உடலினுள் அழற்சி ஏற்பட்டு வீங்க ஆரம்பிக்கும். ஆனால் பீட்ரூட் ஜூஸை ஒரு டம்ளர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதனைத் தடுக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும் :-
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று புற்றுநோய செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயைத் தடுக்கும் என்பது. மேலும் ஆய்வுகளிலும் பீட்ருட்டில் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளதால் புற்றுநோய் தடுக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடல் சுத்தமாகும் :-
உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தால் தான் நோய்களின் தாக்கம் அதிகம் இருக்கும். அத்தகைய டாக்ஸின்களை பீட்ரூட்டில் உள்ள பீட்டாலயின் என்னும் பொருள் வெளியேற்றச் செய்யும். உங்களுக்கு உடலை சுத்தம் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் உடல் சுத்தமாகும்.

ஸ்டாமினா அதிகரிக்கும் :-
பீட்ரூட் ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவில் கிடைக்க வழிவகைச் செய்து, உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம் கட்டுப்படும் :-
பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ரைட்ரேட் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய் வராமல் பாதுகாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், தினமும் ஒரு டம்ளர் பீட்ருட் ஜூஸைக் குடித்து வாருங்கள்.

மக்கள் நல்லுறவு

Sunday, May 8, 2016

Scooty

மக்கள் நல்லுறவு தேவை விழிப்புணர்வு,

கற்பனை, சிந்தனை

நிம்மதியாக வாழ்ந்து வந்தேன்
விளம்பரத்தை நம்பி


வண்டி இலவசம் நினைச்சு வாங்கப் போய்  கேட்டால் மானியம் 50% மிதிப்பணம் கட்டவேண்டும் , மிதிப்பணம் கந்து வட்டிக்கு வாங்கி கட்டி வெளிப் பார்வையில் நான் இலவசமாக வாங்கினேன் என்ற  பெயரை சுமந்து வண்டி ஓட்டினால்  ஒட்ட.நல்லரோடு இல்லை, வாகனநெரிசல் பயம், ஆசை வாங்கி விட்டேன்.

இப்போழுது

மிதிப்பணம் மாத தவனை முறையில் கட்ட கையில் காசு இல்லே, பெட்ரோல் போட காசு இல்லே, Tax, insurance கட்ட பணம் இல்லே, License இல்லே, License எடுக்க போதிய ஆவணம் இல்லே,  இருப்பினும் சாமளித்து வண்டி எடுத்தால் எல்லாம் தொல்லை, மேலும் மேலும் கடன் தொல்லை, ஆக மொத்தம் நிம்மதி போச்சு, மானம் போச்சு,  அவமானம் ஆச்சு மரியாதை போச்சு "வாழ்க்கை போச்சு, தேவையா இது,

நிம்மதி நிம்மதி தேடிபார்த்தேன்,

விரைவில்
இலவசம்  என ஆசைப்பட்டு தன்வசம் நிம்மதி இழப்பார்கள் மக்கள்.

கடன் தள்ளுபடி

மக்கள் நல்லுறவு 
சிந்திக்க! 
கடன் தள்ளுபடியினால் சில பாதிப்புகள் :


கடன் தள்ளுபடி செய்வதனால் உழைக்கும் மக்கள் சோம்பேறியாக்கும் முறை,
கடன் வாங்கியது உண்மை, அதை அனுபவித்ததும் உண்மை, திருப்பி செலுத்த வேண்டியது நமது  கடமை, கடன் வாங்கி நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு கஷ்டம், பேரழிவு, சீரழிவு, வறுமை, மழை இல்லாமல் பயிர் அழிந்து விடுதல், போன்ற இயற்கை  பாதிப்புகள் நிகழ்ந்தால் அதை கருத்தில் கொண்டு கடன் தள்ளுபடி செய்தால் நியாயம்.


அல்லது

வாங்கிய கடனுக்கு வட்டியை மட்டும் தள்ளுபடி செய்வது நியாயம், மேலும் அசலை திரும்ப செலுத்த போதிய காலஅவகாசம் அளிப்பது நியாயம், அல்லது உழைக்கும் மக்களுக்கு ஆதரவு மற்றும் ஆறுதல்  உறுதுனையாக, உதவியாக இருக்கவேண்டும் அரசு, ஒரு சிலர் விவசாயம் செய்வதாக ஏதோ  ஒரு தரிசு நிலத்தை கணக்கு காண்பித்து  அதை வருமான வரிக்கு கொண்டு சென்று கணக்கு காட்டி கடன் வாங்கி அதை திரும்ப செலுத்தாமல் இருப்பதும்,  பின்பு அத்தனை கடன் அல்லது வட்டியை அரசு  தள்ளுபடி செய்கிறது.


யாருக்கு இலாபம்? யாருக்கு பயன்?  சிந்தித்து பாருங்கள் இதுவும் இலவசமே!

உண்மையான விவசாயி வறுமை "பட்டினியில் வாடுகிறான், பயனில்லை, ஆனால் இங்கு
ஏமாற்றுபவர்களுக்கு இன்பம் பேரின்பம், அடுத்து இதனால் விவசாயம் செய்ய வங்கிகள் கடன் தர தயங்கும், இதனால் உண்மையான விவசாயி பாதிக்கப்படுவான்.


இப்படி ஒவ்வொரு இலவசத்திற்க்கு பின்னால் நல்லதும், கெட்டதும் கலந்து உள்ளது, 

உழைத்து வாழ்பவன் உண்மையான விவசாயி, 
நேர்மையை விரும்புவன் விவசாயி, 
மக்களின் நண்பன் விவசாயி
தன்மானத் தமிழன் இவண்,

ஆக மொத்தம்
இலவசத்தை விரும்புகிறவன் சோம்பேறி.

மக்கள் நல்லுறவு 

மாத்தியோசி

மக்கள் நல்லுறவு
மாத்தி யோசி,
நம்ப முடியாதபடி 

இலவசங்களையும், சலுகைககளையும், ஆட்சியை பிடிப்பதறக்காக மாறி மாறி வழங்கும் அரசியல் கட்சிகள், மக்களுக்கு ஆசை தூணடி வெற்றி பெற்று ஏதோ ஒரு கட்சி ஆட்சி அமைக்கும்.


ஆனால் உண்மை கஜானா காலி, கடன் சுமை, நிறைவேற்ற முடியாத சலுகை,  நம்பமுடியாத இலவசம், திட்டம் பற்றி ஆறு மாதம் கழித்து மக்களாளும், எதிர்கட்சிகளாலும் ஆட்சி அமைத்த அரசு கொடுத்த வாக்குறுதிகளை பற்றி கேள்விகளாக கேட்கப்படும் போது, நிறைவேற்றுவதாக சொல்லி அறிவிப்பு செய்யும், முடிந்தால் சென்னையில் இலவசத் திட்டத்தை தொடங்கும்.


ஆனால் நிறைவேற்றக் கூடாது என ஆட்களை செட்டப் பண்னி அரசின் மீது வழக்கு போடும், தடை வாங்கும்,  இதனால்  திட்டம்,  சொன்னவாக்குறுதி கிடப்பில் கிடக்கும், வழக்கு நிதிமன்றத்தில் வாய்தா வாங்கிகொண்டு இருக்கும், மக்கள் ஆ! ஆவலில் காத்து இருப்பார்கள்!
அரசு நிதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து இருப்பது போல நான்கு ஆண்டு காத்து இருக்கும், ஆக மொத்தம் மக்கள் ஐந்து ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும், 

இது தான் தப்பிக்க வழி
மாத்தி யோசி
சிந்தித்துப் பார்!
வாழ்க வளமுடன், 
மக்கள் நல்லுறவு

மலரும் நினைவுகள்

மக்கள் நல்லுறவு 
மலரும் நினைவுகளை பகிர்கிறது


சுமார் 25 வருடங்களுக்கு முன் நடந்த பசுமையான நினைவுகள்:

வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் ஊரே அமர்ந்து பார்த்தோம்.

ஞாயிற்றுக்கிழமை மாநிலமொழி திரைப்படம் தமிழில் போடமாட்டார்களா என ஏங்கி கிடந்தோம்.
திங்கள்கிழமை பள்ளியில் அமர்ந்து கொண்டு ஞாயிறன்று பார்த்த படத்தைப்பற்றி விவாதம் செய்தோம்.

தாத்தவையும் பாட்டியையும் ஸ்கூல் லீவு போட அடிக்கடி சாகடித்தோம்.

பெரிய மழை வந்தால் ஸ்கூல் லீவு என சந்தோஷப்பட்டுக் கொண்டோம்.

முழு ஆண்டு விடுமுறையில் மாமா பெரியப்பா பாட்டி வீட்டுக்கு டூர் போனோம்.

ஒரே ஒரு ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டு அன்று முளுவதும் செலவு செய்தோம்.

100ரூபாய் நோட்டை ஆச்சரியத்துடன் கையில் வாங்கி பெருமூச்சு விட்டோம்.

அனைவர் வீட்டிலும் உண்டியல் இருந்தது.

பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக நின்றுகொண்டே படம் முளுவதையும் பார்த்து ரசித்தோம்.

பீரோக்கள் முளுவதும் சக்திமான் ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து அழகு பார்த்தோம்.

ஹார்லிக்ஸ் பாட்டில்களில் மீன்களை வளர்த்தோம்.

பொங்கலுக்கும் தீபாவளிக்கும் கிரிட்டிங் கார்டு வாங்க குவிந்து நின்று தேர்வு செய்தோம்.

10வது 12வது ரிசல்ட் பார்க்க தினந்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்.

15வயதுவரை டவுசர்களையே அணிந்திருந்தோம்.

பழைய மாடல் கேசட்களில் பிலிம் சிக்கிக்கொண்டால் ரெனால்ஸ் பேனாவால் உள்ளே விட்டு சுத்தி சுத்தி அட்ஜஸ்ட் செய்தோம்.

கன்னிப்பெண்கள் அனைவருமே நதியா மாடல் சடை போட்டு அழகுபார்த்தார்கள்.

பணக்கார வீட்டு கன்னிப்பெண்கள் BSA SLR சைக்கிளில் பேஷனாக வலம் வந்தார்கள்.

ஜாமென்ட்ரி பாக்ஸில் காசுகளையும் மிட்டாய்களையும் போட்டு வைத்தோம்.

நம் ஊரில் TVS-50 வைத்திருந்தவர்கள் பணக்காரர்களாக இருந்தார்கள்.

கட்டான கரண்ட் மீண்டும் வந்ததும் மகிழ்ச்சியில் கத்தி ஆராவரப்படுத்தினோம்.

போன் பேச கால் புக் செய்து விட்டு காத்திருந்தோம்.... இறந்த செய்தி யை உறவினர்களுக்கு தெரிவிப்பதற்காக தந்தி ஆபிஸில் வரிசையில் நின்றோம், மைதானத்தில் பொழுதை கழித்தோம்,  விளையாட்டுகளில் அன்பை வளர்த்தோம், அறிவை வளர்த்தோம்.

பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தோம்.

ஆசிரிகளுக்கு மதிப்பை கொடுத்தோம்.


புகை, மது அருந்துவது கொடிய குற்றமாக பார்க்கப்பட்டது.

ஞாபகம் வருதே ஞாபகம் வந்ததே!

மலரும் நினைவுகள்!!! —

மக்கள் நல்லுறவு 

நாக்கை வைத்து நோயை கண்டுபிடிக்கலாம்.

மக்கள் நல்லுறவு பகிர்கிறது


நாக்கில் காலையில் பல்விளக்கும் போது பார்த்தால் இருக்கும் படிவம் உடலின் நிலையை உணர்த்தும்.

கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு.

மஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும்.

பச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும்.

வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி).

நில நிறம் இதய கோளாறு.

பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்.

நாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல் தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப் படவில்லை என்றும், நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு என்றும், நாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு என்று பொருள்.

கை, கால்களில் Reflexology புள்ளிகளை பார்த்தது போல் நாக்கிலும் உடல் உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.

இதை வைத்தும் உடலின் குறைப்பாடுகளை கண்டுபிடிக்கலாம்.


மக்கள் நல்லுறவு 

கடமை

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

என் கடமை
என் தேவையை பூர்த்தி செய்து கொள்ளத்தெரியும், என்னால் உழைத்து சம்பாதித்து கரன்ட்பில் கட்டமுடியும்,வீட்டிலுள்ள பெண்களுக்கு இருசக்கரவாகனம் வாங்கமுடியும்,செல்போன் வாங்கமுடியும்,வாங்கிய கடனை கட்டமுடியும் .இது என் கடமை.


மக்களுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட  நீ,  நாட்டுக்கு செய்ய வேண்டியது உன் கடமை
விலைவாசி கட்டுப்படுத்துவது, தரமான சாலைகள் போடுவது, தட்டுபாடற்ற குடிநீர் வழங்குவது,
பாலங்கள் கட்டுவது, ஊழலை லஞ்சத்தை ஒழிப்பது, தரமான பேரூந்துகள் பராமரிப்பது, தடையில்லா மின் தருவது உற்பத்தி செய்து தருவது, அரசாங்க அலுவலகங்கள் சிறப்பாக இயங்குவது, சிறந்த கல்வி இலவசமாக தருவது, சிறந்த மருத்துவத்தை இலவசமாக வழங்குவது, ஆறுகளை இணைப்பது, ஏரி,குளங்களை தூர்வாருவது, அணைகள் கட்டுவது, காவல்துறையை நவீனப்படுத்துவது, தொழிற்துறைகளுக்கு முதலீடுகள் கவர்வது, தொழிற்துறைக்கு, அடிப்படை கட்டமைப்புக்கள் அமைப்பது, தொழிற்வளர்ச்சிக்கு திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல், மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்றுவது..


இதுபோல் அரசாங்காத்தால் மட்டும் செய்யகூடிய வேலைகள் ஆயிரம் இருக்கிறது.

இதையல்லாம் நம்மால்  செய்யமுடியுமா?

இதையெல்லாம் செய்வதற்கு அரசு  நிதியை பயன்படுத்தாமல்  தேவையில்லாமல் நான் கேட்காமல் எனக்கு  இலவசமா கொடுக்கறாங்களாமா...

என் வேலையை அரசாங்கம் செய்தால், அரசாங்க வேலையை யார் செய்வது?

என் வீட்டுச்செலவுகளை அரசாங்கம் செய்தால், அரசாங்க செலவுகளுக்கு என்ன செய்வார்கள்? கடன் வாங்குவார்களா? இன்னும் அதிகமா வரிவசூல் செய்வார்களா?

அவர்கள் செய்ய வேண்டிய பெரிய கடமைகளை மறைக்க தட்டிக்கழிக்க எனக்கு நல்லதை செய்வதாக கூறி என் கடமையில் தலையிட்டு, என்னை தூங்க வைக்க இலவசம் என்ற போர்வையை போர்த்தி விடுவது சரியா?


வீழித்திடு 

மக்கள் நல்லுறவு

Friday, May 6, 2016

இலவசம் விழிப்புணர்வு

மக்கள் நல்லுறவு

எங்களுக்கு தேவை உலகத்தரம் வாய்ந்த இலவசக் கல்வி! மருத்துவம்  மற்றும் சுத்தமான குடிநீர்.

செல்போன் இலவசமாக கொடுப்பதை விட தொழில் தொடங்க  சொந்தமாக தயாரிக்க கற்று கொடுங்கள் பின் அவர்களே அவகளுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள்.

தயவு செய்து  இலவசங்கள் வேண்டாம்.இவர்களால் வழங்கப்படும் அனைத்து இலவசங்களும் நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகளாகிய

Professional Tax, 
Sales Tax, 
Central Sales Tax, 
Custom Duty, 
Income Tax, 
Service Tax,
Dividend Distribution Tax, 
Excise Duty , 
Municipal & Fire Tax, 
Staff Professional Tax, 
Cash Handling Tax, 
Food & Entertainment Tax, 
Gift Tax, 
Wealth Tax, 
Stamp Duty & Registration Fee, 
Interest & Penalty, 
Road Tax, 
Toll Tax , 
Vat & etc 


போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் பணமே. அதாவது ஒருவர் பயன்பெற மற்றொருவர் தோளில் சுமக்கும் நிலை.


அரசியல் கட்சியின் சொந்த பணம் கிடையாது, அவர்கள் ஏழைகள் அவர்கள் தாக்கல் செய்த வருமான கணக்கு சான்று, மேற்கொண்டு சம்பாதிக்கத்தான் ஆசைப்படுவார்கள்.

நான் எந்த வரியும் செலுத்தவில்லை என உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறாய், உணர்ந்து கொள் முதலில் 

“பசியோடு இருப்பவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது" கல்வியை கொடுப்பது சிறந்தது.


யாரும் இலவசமாய் தரவில்லை என்பதை உணருங்கள்..

சிந்தனை செய்

மக்கள் நல்லுறவு

புகார்

கோவை மக்கள் நல்லூறவு
புகார் பெட்டி


குடியிருப்புக்கு நடுவே குப்பைமேடு என்ற தலைப்பில் கடந்த 8-4-16, 9-4-16 அன்று கோவை கண்ணப்பநகர் To நல்லாம்பாளையரோடு, நேதாஜி நகர் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான பகுதியில் குடியிருப்புக்கு நடுவே குப்பைகள், கட்டிட கழிவுகள், மாமிச கழிவு,  கொட்டப்படுவதும், நெருப்பு பற்ற வைத்து புகைமண்டலம், சமுக விரோதிகள் நடமாட்டம் பற்றி செய்தி, புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது, இது சம்மந்தமாக, மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், காவல் துறை ஆணையாளர், 44/வார்டு Mc அவர்களுக்கும், மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகவல் தரப்பட்டு புகார் மனு அளிக்கப்பட்டு இருந்தது.

இது சம்மந்தமாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மட்டும்  நேரில் பார்த்து விசாரணை செய்தனர், 44 வார்டு மாமன்ற உறுப்பினர் பாலு அவர்கள் தேர்தல் முடிந்து செய்து தருவதாக கூறினார்.


ஏற்கனவே கோவை மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில்  அளித்த புகார் பதியப்பட்டதாக எண் அளிக்கப்பட்டது (54493) 9/4/16.
 
ஆனால் மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இன்று குப்பைகள் அகற்றப்பட்டு விட்டதாகவும், குறை திர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Complaint petition Close 6/5/16 இன்று செய்தார்கள்,(enclosed)  ஆனால் உண்மையில் மாநகராட்சி தரப்பில் எந்த நடவடிக்கை இன்று வரை எடுக்கப்படவில்லை.


நிர்வாகத் திறமை சூப்பர்!!!.

மக்கள் நல்லூறவு

அரசியல்

மக்கள் நல்லுறவு

தொழில் வளர்ச்சி, தொழிற்சாலை முன்னேற்றம், ரியல்எஸ்டேட், ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்ததா, முன்னேற்றம் அடைந்ததா? என்பதை மனசாட்சிப்படி பதில் சொல்லுங்கள், அரசியல் வட்டாரம் அதிக முன்னேற்றம் அடைந்தது உண்மை, மறுப்பவர்கள் உண்டா?

மிண்டும் சிற்றின்பத்திற்க்காக ஜந்து வருடம் கஷ்டம்  அனுபவிக்க ரெடியா?


அம்மா ஆட்சியில் கஷ்டங்கள் உள்ளதை உணர்ந்து தற்போழுது சலுகைகளாக அறிக்கை வெளியிடபட்டுள்ளது,

அதில் 

மின்சாரத்துறை, பதிவுத்துறையில் செய்யப்படும் மாற்றம் ஒரு உதாரணம்,

மேலும் மதுவிலக்கு 
டாஸ்மாக் இருக்குமா?


எப்படியாவது ஆட்சியைபிடித்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது இந்த அறிவிப்பு,
ஆட்சிக்கு வந்த பின் செய்யப்படாவிட்டாலும் மக்களால் ஒன்றுமே செய்ய முடியாது, ஆட்சி அமைந்துவிட்டால் அசைக்கமுடியாது, என்று கருதும் அரசியல்வாதிகள்,

திரும்ப திரும்ப வாக்குகளை அள்ளி வீசுகின்றனர்,

என்ன செய்யப் போகிறாய்?
வாக்குகளை அள்ளித்தருகிறாயா?
கிள்ளித்தருகிறாயா?

நிலக்கடலை

மக்கள் நல்லுறவு பகிர்கிறது


"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்".
தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???
1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது
2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்
3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்
4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது
5. ஆயில் புல்லிங்
6. காம்பிளான் குடித்தால் வளரலாம்
7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா
8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா
9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி
10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்

வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயில்வதால் என்ன பயன் ????

நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின, அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மை விட்டு பிரிந்து சென்றது.

அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்.

அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமையம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச் சென்றது.

பின்விளைவு

பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளி நாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று

சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ண விடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்
பின்விளைவு

அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்து

உண்மையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா மைதா தான்.

சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல்...

டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவ குணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது.

இப்படியே ஒவ்வொன்றையும் இழந்து கொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று உணராமல் இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள், நாளை நம்மையும் இழந்து விடுவோம்.

மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல 
மருத்துவமனைகள்  அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..

படித்தேன்.. பிடித்தது...... பகிர்ந்தேன்.....

மக்கள் நல்லுறவு