Sunday, April 28, 2019

அரசியல் ஆட்டம்

மக்களாட்சி, மக்களுக்கான ஆட்சி ,மக்களின் தலைவருக்கான தேர்தல், ஒரு விரல் புரட்சி, தேர்தல் ஆணையம், தேர்தல் விதி, Evm, மிரட்சி, சூழ்ச்சி என பல முட்களை கடந்து, 

மக்களின் வரிபணத்தில் தேர்தல் நடத்தி மக்கள் விருப்ப வாக்கு போட்டு மக்களின் 
 பிரதிநிதியாக தேர்தெடுத்து ஒருவரை சட்டசபைக்கு அனுப்பி வைத்தால் 

சட்டசபை உள் விவகாரத்தால் நாம் தேர்ந்தெடுத்த நபர்களை தகுதி நீக்கம் செய்ய மக்களை விட சபாநாயகர் உச்சபட்ச அதிகாரம் கொண்டவராக உள்ளார்,மக்களின் விருப்பம் ஏமாற்றமளிக்கிறது, 

ஆக இவர் தான் முதலமைச்சராக வேண்டும் என்று ஒட்டு மொத்த மக்கள் விருப்ப வாக்களித்தால் அவர் இல்லை, மக்கள் விருப்பமில்லாமல் நூற்று முப்பது பேரை கவனித்தால் முதலமைச்சர் ஆகி விடலாம், என்ற நிலை வந்தது, அதுவும் நடந்தது, 

பணம் இருப்பவன் ஏலம் எடுப்பது போல ஆகிவிட்டது இந்த அரசியல், ஏலம் எடுத்தவர்கள்  சும்மா இருப்பார்களா?

தேர்தெடுத்த மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பது??? 

ஒன்னும் செய்யாதவர்களை தேர்தெடுத்தவர்கள் தூக்கி எறியும் அதிகாரம் உண்டா??? 

மக்கள் பெயரை , லேபிளை வைத்து ஆடும் ஆட்டங்கள், மக்களுக்கு ஒட்டு மொத்த  ஏமாற்றங்கள்... 

Friday, April 26, 2019

செல்லும் பாதை...?


நோக்கம் நல்லது அதனால் பாதிப்பும் உண்டு பலனும் உண்டு!

நாம் செல்லும் பாதையில் ...

நாம் கடக்கும் சாலையில் பள்ளம் உண்டு அதை கண்டும் காணமல்  கடந்து செல்வது பலர், இங்கு குழி ஏற்பட்டதை சொன்னால் தான் தெரியும் என சிலர் அக்கறை கொண்டு பள்ளத்தை பற்றி அதிகாரியிடம் இலாகாவிடம் புகார் தெரிவிப்பார்கள், வரி வாங்கி வசதி செய்யாத என்ன அரசாங்கம் என குறை கூறி புலம்பி செல்வார்கள் சிலர்

இப்படியே நாட்கள் நகர்ந்தது...

அடுத்து ஒருவன் செல்லும் பாதையில் குழி தெரிகிறது, அப்படியே கடந்து செல்லாமல் ஒரு நிமிசம் யோசித்து  தனக்கு பின்னால் வருபவர்களுக்கு குழியால் ஆபத்து விபத்து ஏற்படும் என்று எண்ணி மண்ணை நிரப்பிடலாம் தேடுகிறான் மண் மேடூம் இல்லை, சுரண்டி எடுக்க பொருளும் இல்லை, எனவே இரண்டு கல்லை எடுத்து சாலையில் எச்சரிக்கைக்காக வைத்து விட்டு திருப்தியடைந்து போகிவிடுகிறான்.

அடுத்து வேகமாக வரும் வாகனம் கல் இருப்பதால் ஓரு செகன்ட் நிலை தடுமாறி போகிறது, ஒரு சில வாகனம் முன் எச்சரிக்கையாய் அறிந்து நிதானமாக கடந்து செல்கிறார்கள்.

அடுத்து இதை கடந்த இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஓருவன் கல்லை விட குழியே பராவாயில்லை என நினைத்து கல்லை தூக்கி வீசிவிட்டு செல்கிறான்.

பத்து நிமிசம் கழித்து அந்த இடத்தை கடந்த வண்டி குழியில் இறங்கி  அச்சு முறிந்து விட்டது, ஓரமாக  நிறுத்தினார்கள், நிறுத்தி பார்த்து கொண்டு இருந்த பொழுது அருகில் முனகல் சத்தம் கேட்டது  ஒருவன் ஒரமாக தலையில் அடிபட்டு கிடக்கிறான் அவனை மயக்கத்திலிருந்து எழுப்பி விசாரித்தால் தான் ஓரமாக ஒதுங்கி நின்ற பொழுது யாரோ சாலையில் இருந்து தன் மீது கல்லை வீசி சென்றதாக கூறினான்.

அடுத்து வந்த வாகனத்தில் வந்தவர்கள்  நிறுத்தி விசயத்தை கேட்டு அடிபட்டவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள், சேர்த்த போது அங்கிருந்தவர் ஒருவன் கேட்டார் உங்க வண்டியிலே அடிபட்டவரா இவர்? நல்ல வேலை அடிபட்டவன் சுய நினைவோடு இருந்தார்.

அடுத்து வந்த மண் லாரி அதில் இருந்த நபர்கள் குழிக்கு கொஞ்சம் மண்ணை கொட்டி சென்றார்கள், இப்போ குழி நிரம்பியது, மனசும் நிரம்பியது.

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் எல்லையில் சாலைக்காக, சாலை வசதிக்காக  சுங்கம் வசூலித்து கொண்டு கடமையை செய்து கொண்டும் இருப்பார்கள்!

இங்கு அவரவர் பார்வையில் அந்த நேரத்தில் அவரவர் செய்தது சரியாக தோன்றியது, ஆனால் பின்னால் சிலருக்கு பாதிப்பும் உண்டு, பலருக்கு பயனும் உண்டு,

யாரை குற்றம் சொல்ல! நோக்கம் நல்லது தான்! இதில் நீங்க எந்த ஒருவர்  என்பதை சிந்தித்து பாருங்கள்! வாழ்க்கை பாதையை கடந்து செல்லுங்கள்!