Friday, January 20, 2017

தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க. மறக்க மாட்டோம் கோடிக்கானக்கான தமிழக மக்களை கஷ்டப்படுத்தியதை!

மறக்கமாட்டோம் கோடிக்கானக்கான தமிழக மக்களை இணைத்ததை!

இளைஞர்களின் எழுச்சி, இளைஞர்களின் புரட்சி!
அரசியல்வாதிகளுக்கு மிரட்சி!

இளைஞர்களின் போராட்டம் பல பேருக்கு அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி?

இத்தனை நாளாக தமிழ் வாழ்க! என அரசு அலுவலகத்தில் போர்டை மட்டும் மாட்டி வைத்து தமிழை வளர்த்தார்களா? தன்னை வளர்த்துக் கொண்டார்களா?

ஜல்லிகட்டுப் பிரச்சனையை இளைஞர்கள் கையில் எடுக்காவிட்டால் என்றோ முட்டை கட்டி இருப்பார்கள்.

சிந்தித்து பாருங்கள் மக்களே!

கலாம் கண்ட கனவு நனவாகும் நேரம் வந்துவிட்டது, ஆளும்  அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவோம் வரும் உள்ளாட்சி தேர்தலில், நல்ல மனிதனை, மக்களில் ஒருவனை தேர்ந்தெடுப்போம், கரைவேட்டிகளுக்கு விடை கொடுப்போம்!

தமிழ் வாழ்க!  தமிழன் வாழ்க!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

ஒன்றுபட்டால் உண்டு தீர்வு!

ஒன்றுபடுவோம் நம்மை காக்க!

வேண்டுகோள் :எச்சரிக்கை

மக்களின் போராட்டத்தை அரசியல் சாயம் பூசவேண்டாம்

மக்களின் போராட்டத்தை அரசியலாக்காதே!

மக்களின் போராட்டத்தை மதங்களை கொண்டு பேசாதே! பிரித்து பார்க்காதே! திரித்து பேசாதே!

நீ! நீயே அழிந்துவிடுவாய்! 


இங்கு தமிழன் மட்டுமே தலைவன்

மக்கள் நல்லுறவு

சாதி

மகிழ்ச்சி
சாதிகள் இல்லையடி பாப்பா என படிக்க கண்டேன்!

உண்மையில் அதை தமிழ் நாட்டில் கண்டேன்!

நடைமுறையில் இளைஞர்களிடம் கண்டேன்! இத்தனை நாள் சான்றிதழ் கேட்டு வந்த அரசுக்கு ஒரு வேண்டுகோள்!

இனி ஜாதி சான்றிதழ் வேண்டும் என நீங்கள் கட்டாயப்படுத்தினால் அதில் ஜாதி பெயரோடு தமிழன் என்ற வார்த்தையும் சேர்த்து

ஜாதி  :  Xxxxxxx. / தமிழன்


மக்கள் நல்லுறவு

Thursday, January 12, 2017

சிந்தித்துப்பார்!

நீ பெரியவன், நான் பெரியவன்,
நான் இந்த கட்சிக்காரன், நீ அந்த கட்சி, நீ அந்த நடிகனின் ரசிகன், நான் இந்த நடிகனின் ரசிகன், தொண்டன்னு சொல்லியும், நீ இந்த சாதி, மதம் அப்படின்னு சொல்லி யாரோ வாழ நாம்  பக்கத்திலிருக்கும் மனிதர்களை பகைத்து விரோதத்தை வளர்த்து நாம்  வாழ்ந்து வருகிறோம்,

மனிதனை நேசிப்பதில்லை

உண்மையில் உனக்கு பிரச்சனை, ஆபத்து, விபத்து, கஷ்டம் என்றால் அவசர உதவிக்கு அருகிலிருக்கும் நண்பர்கள், உறவினர்கள் அறிமுகமில்லா மனிதர்கள் கூட உதவுவார்கள்

ஆனால் உன் தலைவன், நடிகன், கட்சி இவர்கலெல்லாம்  வரமாட்டார்கள், காரணம் உன்னை போல் தொண்டன், ரசிகன் முலம் உயர்ந்தவர்கள், உன் தேவைக்கு, அவசரத்திற்க்கு  பயன்படமாட்டார்கள், செத்தபின்பு ஒருவேளை மலர் வளையம் வைக்க வருவார்கள் (விளம்பரம்)

இவர்களுக்காக அருகில் உள்ள மனிதர்களை பகைக்காதே! அது உன் தோல்விக்கு வழிவகுக்கும்,


மனிதனை மனிதனாக மதி, மனிதனை நேசி, மனிதநேயத்துடன் வாழ கற்றுக்கொள், மனநிறைவு பெற்று மன மகிழ்சியுடன் வாழ்வாய்வாழ்க வளமுடன்!