Sunday, September 18, 2016

குழந்தைகள் முன்

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சிலவற்றை மக்கள் நல்லுறவு பகிர்கிறது.

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரேஎன்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, “கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதேஎன்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலேபோன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்இருக்க வேண்டும். நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.


மக்கள் நல்லுறவு

நதிகள் இணைப்பை கிடப்பில் போட்டது யாரு?

நதிகள் இணைப்பை கிடப்பில் போட்டது யாரு?

நம் நாட்டு பிரச்சனைகளை அனைத்து மாநில முதல்வர்களை அழைத்து பேசி நதிகள் இணைப்பை துவக்காமல் நாடு நாடாய் சுற்றி நாட்டு மக்களுக்கு என்ன  பயன்?

இந்திய சரித்திரத்தில் இடம் பிடிக்க, நாட்டின் எதிர்காலத்தை வளமாக்க, மக்கள், விவசாயிகள் மனதில் இடம் பிடிக்க இந்த முயற்சியை ஏன் முதலில்  செய்யவில்லை?

இந்தியா வளமான நாடாக மாறிவிடும் என்ற அச்சமா?

வளமான பாரதம் உருவக இதை விட வேறு எதேனும் முயற்சி  உண்டா?

இம் முயற்சிகளை செய்யாத மத்திய மாநில அரசு!
அத்தியாவசிய தேவைகளை, பிரச்சனைகளை வரும் முன் காப்பதில் அக்கறை காட்டுவதில்லை,

திட்டங்கள் போட்டாதாக காகிதத்தில் மட்டும் போடுவது எதற்கு?

இலவசங்களை அள்ளி வீசி மக்களை கவனம் திருப்புவதும், மதுவை தினம்
குடிக்க கொடுத்து மடையர்களாக்கி, சிந்திக்க தெரியாமால் செய்வதும், மெல்ல மெல்ல அழிக்க போடுது திட்டம்!

போடும் திட்டத்தால் மக்கள் மனதை கொள்ளை கொள்ளாமல்  பணத்தை மட்டும் கொள்ளை அடிப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பதும் இலவசத்திற்க்கு கையேந்துவதும் சுய நினைவுடன் செய்யும் செயல்களா?

அத்தைகைய அரசுகளுக்கு மக்கள் வரவேற்பளிப்பார்கள், நமக்காக குரல் கொடுப்பதை காதில் வாங்கமாட்டார்கள், நமக்காக போராடுபவர்களை கண்ணால் காணமாட்டார்கள், எதிர்ப்பை காட்ட தெரியாதவர்கள்

இதையெல்லாம்
நீ உணரமாட்டாய்  போதையில் வாழ்கிறாய்!
நீ இறக்கும் காலத்தை நோக்கி செல்கிறாய்,
நான் எதிர் காலத்தை காண்பிக்கிறேன்,
நல்லதை யார் சொன்னாலும் செய்தாலும்  நாடும்நாட்டு மக்களும் ஏற்க்க மாட்டார்கள்!

காரணம்

விளம்பரம், இலவசம், மது, லஞ்சம்சுயநலம்கண்ணை மறக்கிறது.

Tuesday, September 13, 2016

காவிரி

கர்நாடகத்தில் காவிரி பிரச்சனையில் அப்பாவித் தமிழ் மக்கள் தாக்கப்படுவதை கண்டிக்கவேண்டும்
யார் கண்டிப்பது யாரை கண்டிப்பது

சிந்தித்து பார்!
கலவரத்தை தூண்டுவது யார்?
அதிகமாக இதன் பயனாளிகள் யார்?
கலவரத்தால் யாருக்கு நன்மை?

அரசியல் விளையாட்டால் தான் அப்பாவிகளுக்கு இந்த பாதிப்பா?
தண்ணிர் திறந்து விடுவதை துறைரீதியாக செயல்படுத்தும் செயலை பல ஆண்டுகளுக்கு முன் அரசியாலாக்கி பயன் பெறுபவர்கள், அதை வைத்து பேர் பெற்றவர்கள் யார் என சிந்தித்து பாருங்கள்,
அப்பாவி மக்களை அடிப்பதனால் வாகனத்தை எரித்தால் எல்லாம் சரியாகிவிடுமா?
தண்ணிர் நமக்கு இயற்கை தந்தது அது கர்நாடகம், கேரளம், ஆந்திரத்தின் மாநிலங்களின் சொந்தத் தயாரிப்புகளா? நாம் அதை பறிப்பதற்க்கும் அவர்கள்
உரிமை கொண்டாடுவதற்க்கும் அது யாருடைய சொந்த தயாரிப்பு அல்ல, இயற்கை தந்தது.

இயற்கையை இயற்கையாய் விட இவ்வளவு அரசியலா?
தமிழ்நாட்டில் கட்சி சார்பில்லாமால் பொதுமக்களை பற்றி மனிதநேயம் கொண்டு சிந்தித்து பாருங்கள்,
எந்த கட்சியாய் இருந்தாலும் சரி
ஆளும் கட்சி,  எதிர்கட்சியாக இருந்தாலும் சரி
மக்களுக்கு பாதிப்பு என்றால் ஒருமித்த குரல் ஏன் எழுப்புவதில்லை,

தான் பதவிக்கு வரமட்டும் பகைடைகாயாக மக்களை பயன்படுத்திக்கொண்டு பாதிப்பு வரும் போது மட்டும் தலைமையின் ஆணைக்கு காப்பது போல நடிப்பது ஏன்?
அமைதி காத்து ஓய்வெடுப்பது ஏன்?
எந்த காலத்திலும் மக்கள் தனக்கு
தனிப்பட்ட முறையில்  பாதிப்பு வரும்வரை குரல் கொடுக்கமாட்டான், இணைந்து போராடமாட்டான் தமிழன்  என்ற அசைக்க முடியாத நம்பிக்கை,

நதி நீர் இணைப்பை கிடப்பில் போட்டது யாரு?
மாட்டின் மிதும், பாட்டின் மீதும் பசுவின் மீதும் காட்டும் அக்கறை நாட்டீன் மீதும் நாட்டு மக்கள்  (மனிதன்) மீதும் இல்லாமல் போனது ஏன்?
எல்லாம் அரசியல் விளையாட்டு
அக்கறை கொண்டு யாரும்  போராடுவதில்லை, விளம்பரம், ஆதாயம்,

காங்கிரஸ் ஆட்சி என
கலவரத்தை ஒடுக்க மத்திய மாநில அரசுக்கு விருப்பமில்லை மேலும்  தொடரத்தான் விரும்புகிறது, இங்கு
கடிதம் எழுதி காத்திருக்கும் தமிழக அரசு,

ஆம் முழுக்க முழுக்க சட்டத்தின் படி நடந்து கொள்ளும், சட்டத்தை மிறாத  அம்மா அரசு, சட்டத்தை மதிக்கிறது,
சட்டத்தை காப்பது போல அமைதிகாக்க வேண்டும் மக்களே!
பஸ்கள் எரிகிறது, மக்கள் மீது நடக்கும் வன்முறை மீது தடுப்பு  நடவடிக்கை தான் என்ன?
பாதிப்பு அடைபவனுக்கு ஆறுதல் மட்டும்  போதுமா?
வலியும் வேதனையும் அனுபவிப்பவர்களுக்கு தெரியும்
நிரந்தர தீர்வு என்ன? அல்லது இதுவும் வருடவருடம் வரும் 
நாலுநாள் செய்தியா?

!என்ன செய்யப் போகிறாய்?

Sunday, September 11, 2016

உணவு ஜீரணமாக எத்தனை மணி நேரம்

உண்ணும் உணவு ஜீரணமாக எத்தனை மணி நேரம் பிடிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

சைவம்

* நீர்க்க இருக்கும் பழச்சாறு - 15 முதல் 20 நிமிடங்கள்

* கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை - 20 முதல் 30 நிமிடங்கள்

* ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் - சுமார் 40 நிமிடங்கள்

* காலிஃப்ளவர், சோளம் - சுமார் 45 நிமிடங்கள்

* கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் - சுமார் 50 நிமிடங்கள்

* அரிசி, ஓட்ஸ் - சுமார் ஒன்றரை மணி நேரம்

* சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி - சுமார் 2 மணி நேரம்
அசைவ உணவுகள்

* மீன் - அரை மணி நேரம்

* முட்டை - 45 நிமிடங்கள்

* கோழி - 2 மணி நேரம்

* வான் கோழி - இரண்டரை மணி நேரம்

* ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி - சுமார் 3 முதல் 4 மணிநேரம்


time பாத்து சாப்பிட்டு கொள்ளுங்கள்..!!!

Thursday, September 8, 2016

ஒரு நிமிடம் நில்லுங்கள்

மக்கள் நல்லுறவு 
நாம் தற்போது சிம், இருசக்கர வாகனம், கடன் என எதுவாங்கும் போதும் , இன்னும் எந்த வேலையாக இருந்தாலும் நம்முடைய ஆதார், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை என இன்னபிற ஆவணங்களில், (Self Attest) - கையெழுத்து இட்டு ஆதாரமாக தருகிறோம்.
நம்முடைய இந்த ஆவணங்களை, தெருவில் நின்று கொண்டு சிம் விற்கக் கூடியவர்களிடம் கூட சுய கையெழுத்து இட்டு கொடுத்து விடுகிறோம்.
அந்த ஆவணங்களை பெறக்கூடியவர்கள் அ
வர்கள் விரும்பியபடி இதனை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அவர்கள் நம்மிடம் நம் புகைப்படம் கேட்டால் அதனையும் கொடுத்து விடுகிறோம்.
நம்மிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆவணங்களைக்கொண்டு, வேண்டுமானால் பல சிம்களை வாங்கலாம். அதனை எதற்கும் பயன்படுத்தலாம்.
சற்று முயற்சி செய்தால் நம் பெயரில் ஒரு வாகனத்தைக் கூட வாங்கி பதிவு செய்து விடலாம்.
இவ்வாறு நம் பெயரில் வாங்கப்பட்டவைகள் ஒரு வேளை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால், நாம்தான் முதல் குற்றவாளியாக இந்திய குற்றவியல் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவோம்.
இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு என்ன வழி?
இதற்குப் பிறகு நாம் கையெழுத்துப் போடும் போது கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.
1. கையெழுத்து
2. தேதி
3. கையெழுத்து இடுவதற்கான காரணம்.
4. இதனைத் தவிர்த்து வேறு எதற்கும் இது செல்லத்தக்கது அல்ல.
இப்படி நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஆவணத்திலும் அதனை கொடுப்பதற்கான காரணத்தையும் தேதியையும் எழுதி கையெழுத்து இட்டு கொடுக்க வேண்டும்.
இதனை பிறருக்கு கூறுவது அவர்களை இத்தகைய ஆபத்திலிருந்து காப்பாற்ற வழிவகுக்கும்.

மக்கள் நல்லுறவு  

Wednesday, September 7, 2016

நமது மக்கள் நல்லுறவு செப்டம்பர் - 2016 மாத இதழ்

மக்கள் நல்லுறவு
நமது மக்கள் நல்லுறவு செப்டம்பர் - 2016 மாத இதழ்.









மக்கள் நல்லுறவு

வாசி யோசி


மக்கள் நல்லுறவு 
வாசி யோசி
1. சாலையில் எச்சில் துப்புதல். கண்ட கண்ட இடத்தில் சிறுநீர் கழித்தல்.
{இதில் கண்டிப்பாக பெரும்பாலானோருக்கு பங்கு உண்டு.}

2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :
{இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.}

3. குப்பைகளை கொட்டுவது :
{நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும், நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.}

4. வரிசையை முந்தியடித்தல் :
{இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம். பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.}

5. விட்டு கொடுக்காத பழக்கம் :
{அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எப்படி...? அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.}

6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :
நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல், Etc... Etc.... Etc.....
இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான்.
இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.

7. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:
(முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது. நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும்.)

8. ஜாதி வெறி - மத வெறி இன வெறி:
நம் நாட்டின் சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்......!!

குறிப்பு:- இதை பதிவதன் நோக்கம், நம்முடைய அவலங்களை நாமே பதிந்து, நமது மேல் நாமே அசிங்கத்தை பூசிக்கொள்வதர்க்காக அல்ல....
நம்மை நாமே மேன்மை படுத்தினால் தான் நாடு முன்னேறும்...
தனி மனிதன் திருந்தினால் தான், நாடு திருந்தும். இதை படித்த பிறகு ஓரிருவர் திருந்தினால் கூட போதும்... இந்த பதிவின் நோக்கம் முழுமை பெரும்.

மக்கள் நல்லுறவு 

நல்ல செய்தி

முயற்சி செய் முன்னேற்றம் காணலாம்
மக்கள் நல்லுறவு பகிர்கிறது

இந்த நல்ல செய்தி நாடு முழுதும் செல்ல நீங்கள் ஒவ்வொருவரும் ஐந்து ஐந்து பேர்களுக்கு ஒரு சங்கிலி தெடர் போல் அனுப்பும்படி கேட்டுக் கொள்ளுங்கள்.

1) குப்பைகளை எறியாதீர்கள் சாலைகள் / தெருக்களில்.

2)எச்சில் துப்பாதீர்கள் சாலைகள்/சுவர்கள் மீது.

3)சுவர்கள் / பணத்தாள்கள் மீது எழுதாதீர்கள்.

4)மற்றவர்களை தவறாகவும் / இழிவாகவும் நடத்தாதீர்கள்.

5)நீர் / மின்சாரம் சேமியிங்கள்.

6)மரம் நடுவீர்.

7)சாலை விதிகளை பின்பற்றுங்கள். 

8)பெற்றோர்களையும், முதியவர்களையும் எப்பொழுதும் மரியாதையுடன் நடத்துங்கள், அவர்களின் ஆசீர்வாதங்களை பொற்றுக் கொள்ளுங்கள்.

9)பெண்களை மரியாதையுடன் நடத்துங்கள்.

10) ஆம்பலன்ஸ் வண்டிக்கு வழிவிடுங்கள்.

நாம் தான் மாற வேண்டும் நாடு அல்ல. நாம் மாறினால் நாடு தானகவே மாறிவிடும்.

நம்முடைய வருங்கால சந்ததிகள் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சுற்றுப்புறச் சூழலில் வாழ வேண்டுமானால், இவைகளை உறுதியுடன் அநுதினம் கடைபிடியிங்கள்.

எந்த தனிப்பட்ட தலைவர்களோ, தனி மனிதனோநாட்டை மாற்ற முடியாது.

இவண்
பொருப்புள்ள
இந்திய குடிமகன்


மக்கள் நல்லுறவு