Friday, July 29, 2016

வாழ்க்கை ஒரு ரயில் பயணம்

மக்கள் நல்லுறவு

வாழ்க்கை ஒரு ரயில் பயணம் போன்றது

இந்த ரயில் எல்லோருக்கும் பயன்பெறும்மாறு படைக்கப்பட்டது.

ரயில் பயணத்தில் வசதி குறைந்தவன் அதில் நெருக்கடியோடு நெரிசலோடு பயணம் செய்கிறான்.

அடுத்து கொஞ்சம்  வசதி கொண்டவன் அதே ரயிலில்  உட்காரும் வசதியில் பயணம் செய்கிறான்.

அடுத்து ஒருவன் படுக்கை வசதி.

அடுத்து ஒருவன் குளு குளூ வசதி பெட்டியில் பயணம் செய்கிறான்.

மிகுந்த வசதி படைத்தவன் சகல வசதியுடன் தனி பெட்டியில் பயணம் செய்கிறான்.

எப்படியிருந்தாலும் நாம் போகும் பாதை ஒன்றுதான் அவரவர் வசதிக்கேற்ப்ப "வருமானத்திற்கேற்ப மாறுபட்டு வாழ்க்கை என்ற பெட்டியில் தினமும் பயணம் செய்கிறோம்.

பயணத்தில் பல பேரை சந்திக்கும் வாய்ப்பு வரும்பிரிவு வரும்.

இறுதியில் போகும் இடம் ஒன்றுதான், போகும் பாதை ஒன்றுதான், போய் சேரூம் இடமும் ஒன்றுதான்.

இது போன்றுதான் வாழ்க்கையும்,வாழ்க்கை பயணத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்.

தண்டவாளம் தினம் தினம் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறது, ஆனால் அது நம்மை சுமந்து கடந்து செல்வதற்க்குத்தான் பயன்படுகிறது.

"அது போல காலமும் நேரமும் நம் பயன்பாட்டிற்க்கே! எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்.

வாழ்க்கை பயணம் இனிதே சுகமாக அமைய முயற்சி செய்!

இதில் அடுத்தவனை பார்த்து பொறாமை கொண்டு வாழ்வதால் என்ன பயன்?

அடுத்தவன் உழைப்பை கேலி செய்வதால் உனது பிரயாணம் சுகமாக மாறுமா?

ஈகோ வை அகற்றுநீ பிறந்த மண்ணிற்க்கு என்ன செய்தாய்?
யோசி! நேசிக்க கற்றுக்கொடு.
வாழ்க வளமுடன்

மக்கள் நல்லுறவு

Thursday, July 28, 2016

ஜாதி மதம் பார்க்காதே

மக்கள் நல்லுறவு

மதம் என்பது மனசு சம்மந்தப்பட்ட விசயம் அதை உள்ளே வைத்து கொண்டு அவர் அவர் கடவுள் சொன்ன வழியில் மனிதனிடம் அன்பு கொண்டால் பிரச்சனை என்றுமே வராது.

அன்பே கடவுள் "கடவுள் எங்கும் இருக்கிறர் என்பதிற்க்கு அர்த்தம் அன்புதான் அது பரவியிருந்தால் துன்பம் வராது.

அதை தவறாக கையாண்டு வெளியே மத வெறி கொண்டால் பிரச்சனை வளரும்.

அன்பு ஒரு ஆயுதம் அதில் பொறுமை தற்காக்கும் மருந்து.

மனிதனை மனிதனாக மட்டும் பார், மற்றதை செயலில் பார்.

ஜாதி மதம் பார்க்காமல் உழைத்த நமது கலாம் அய்யா அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார் இதுவே சிறந்த உதராணம்.

என்னை பொறுத்தவரையில் மதத்தின் பெருமை உருவத்தில் இல்லை, அதை பிறர்க்கு உணர்த்தவேண்டிய கட்டாயமில்லை.

மதப்பிரச்சனையை கையில் எடுப்பவன் கோழை, தூண்டிவிடுபவன் கையாலாகாதவன்,வளர்ச்சியில் பொறாமை கொண்டவன்.

உன் உருவம், தோற்றம், வழிபாடு எப்படி இருந்தாலும் நம் செயல்பாடு, நம்பிக்கை, பிறரிடம் அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவுவது, பிறருக்காக பிராத்தனை செய்வது, போன்ற சில  நல்ல பழக்க வழக்கத்தினால் உன் பெருமையும் உன் மதப்பெருமையும் தானே உயரும்.

அந்த புகழ் மக்கள் மனதில் என்றும் நிலைக்கும்.

APj கலாம் அய்யா உதாரணம்.
வாழ்க வளமுடன்

மக்கள் நல்லுறவு

தமிழக சட்டசபை

சட்டமன்ற சட்டசபைக் கூட்டத்தொடர் அனுபவம் மக்கள் நல்லுறவு  பகிர்கிறது.

அசெம்ளிக் கூட்டம் சென்னை தலைமை செயலகம் வளாகத்தில்
நடைபெற்று வருகிறது. இதனை பொதுமக்கள் பார்வையிடமுதலில் நுழைவு  வரிசை அதில் அடையாள அட்டை பரிசோதனை, முகவரி விலாசம், போன் எண், கையெப்பம் பெற்று உள்ளே செல்லும் காரணத்தை கூறி நூழைவுவாயிலில் நுழைய அனுமதிக்கப்படுகிறது.

அதன் பிறகு உள்ளே ஆட்கள் தனித் தனி சோதனை செய்த பிறகு மீண்டும் அடையாள அட்டை காண்பித்து சம்மந்தப்பட்ட இலாகவுக்கு செல்ல அனுமதி சீட்டு தரப்படுகிறது.

நமக்கு தெரிந்த அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், அல்லது அதிகரிகள் முலம் சட்டசபை கூட்டத்தொடரை காணச்செல்ல ஒரு பாஸ் (அனுமதிசீட்டு) வழங்க கேட்டுக்கொண்ட பிறகு அரைமணி நேரத்திற்க்குப் பின் அரைமணி நேரம் மட்டும் பார்க்க அனுமதி தருகிறார்கள்.

இதற்க்கு சில நிபந்தனைகள்:

பணம் தவிர பாக்கெட்டில் எதுவும் இருக்கக்கூடாது, (மொபைல், பெல்ட், காசு (நாணயம்) கர்சீப், விசிட்டீங் கார்டு, இதர அட்டைகள் பேனா பென்சில் கொண்டு செல்லத்தடை இத்தனை கெடுபிடி பொருட்கள் கொண்டு வந்ததை வைக்க அலைமோதும் மக்கள்.

இதற்க்கு முன்று கட்ட சோதனைகள், இறுதியில் அனுமதி சீட்டை பெற்றுக்கொண்டு அரைமணி நேரம் அனுமதி தரப்படுகிறது மீன்டும் பல நிபந்தனைகளுடன், கை மற்றும் விரல் நீட்டக்கூடாது, பேசக்கூடாது, இருமக்கூடாது, சிரிக்ககூடாது, நிக்கக்கூடாது இதனை கவனிக்க பத்து பேர்கள்.

அடுத்து

சட்டசபை கூட்டத்தில் ஆளும் கட்சி பேச அதிகம் வாய்ப்பு வழங்கப்படுகிறது, பெஞ்ச் தட்ட சட்டசபை அதிர்கிறது, எதிர் கட்சிக்கு வாய்ப்பு குறைவு, எதிர்கட்சி கோபம் எரிச்சல் அடையும்மாறு பேசி கூச்சல் நிலவுகிறது.

இறுதியில் சட்டசபையிலிருந்து எதிர்கட்சி வெளிநடப்பு, இது ஒட்டு போட்ட மக்கள் நலனுக்கா? என்பது மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

இதனை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் (வலைக்கு பின் நின்று பார்க்க) இத்தனை கெடுபிடிதேவையா?  பாதுகாப்புத் தேவையா? இந்த பாதுகாப்பிற்க்கு பல அதிகாரிகள், அரசு ஊழியர்கள் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உண்மையில் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் மிது உள்ள பயத்தைக் தான் காட்டுகிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கு பின் ஆளும் கட்சி "எதிர்கட்சி இரண்டு உறுப்பினர்களும் தொடர்ந்து தொகுதியில் மக்கள் தொடர்பில் இருந்தால் பிரச்சனைகள் அவ்வோப்போது குறையும், மக்களும் சட்டமன்ற உறுப்பினர்களை காண கூட்டம் போடமாட்டார்கள்.

அரசியல் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களே!
கேரளாவை கொஞ்சம் பாருங்கள்.

அங்கு பெரும்பாலும் சட்ட மன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள்  இருப்பது எளிமை, அனுகுமுறை எளிமை, மக்களோடு மக்களாக கலந்து வாழ்கின்றனர்.

இது எங்களது  பார்வையில்
இது ஒரு அனுபவம் :

அன்புடன் மக்கள் நல்லுறவு

Sunday, July 24, 2016

கொஞ்சம் யோசியுங்கள்

கோவை மக்கள் நல்லுறவு 

தேவை விழிப்புணர்வு


நம்மிடம் வாக்குறுதி கொடுத்து  வாக்கு கேட்டு வாங்கி நாட்டை ஆண்டு கொண்டு இருப்பவர்களை கேள்வி கேட்க மறந்தோம்.

நமக்கும் நம் பகுதிக்கும் நல்லதை செய்வார் என எண்ணி நாம் யாரை ஓட்டு போட்டு தேர்ந்தேடுத்தோமோ அவர் திரும்ப செய்யாமல் சுகபோகத்தை அனுபவித்துக்கொண்டு வெளியே வரமால்  வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தாலும் நாம் கண்டுகொள்வதில்லை.


நாம் இவர் வெற்றி பெறுவார் நம்பி வாக்களித்த ஆளும் கட்சி அரசியல்வாதி மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதி இருவருமே இதை செய்வதால் மக்கள் உண்மையில் ஏமாற்றப்படுகிறார்கள்.

தேர்தலில் தோற்றவர்கள் தோற்றதை காரணமாக கூறி சென்றுவிடுகின்றனர்.

இவர்கள்  மக்களுக்காக ஆளும் கட்சியில் முறையிட்டு, போராடி ஏன் மக்களீன் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதில்லை,? 
தேர்தலுக்குப் பிறகு மக்களின் தொடர்பில் இருப்பதில்லை?
அந்த எண்ணம் வருவதில்லை?
பதவி இருந்தால் தான் மக்களுக்காக செயல்படுவார்களா?
பணம் வருமானம் இருந்தால் தான் செய்வார்களா?
தோல்வி என சொல்லி அடுத்த தேர்தல் வரூம் வரை அமைதியாக இருந்து விட்டு தேர்தலின் போது மிண்டும் மக்களை சந்திக்க வருவது சரியா? 


மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள்!
நாம் நம்பி வாக்களித்தவரிடம் கேள்வி கேட்காதாதல் தான் முதலில்   நாடு வளர்ச்சியடைவதில்லை, அரசியல்வாதிகள் மட்டும் ஒவ்வொரு முறையும் வளர்ச்சியடைகிறார்கள்,நமது உரிமையை உரியவனிடம் கேட்காமல் சும்மா இருப்பது நமக்கு  பழக்கமாகிவிட்டது.


நமக்கு கொடுக்கவேண்டியவர்கள், நமக்கு செய்துதர கடமைப்பட்டவர்களை நாம் கண்டுகொள்வதில்லை, கேள்வி கேட்பதில்லை சும்மா இருக்கிறோம்.

தவறுகளை, தேவைகளை தட்டிக்கேட்காத மக்கள், தனது தொழில் காசுக்காக உழைத்து நடிக்கும் நடிகனிடம் நீ மக்களுக்கு அதை செய்யவில்லை, இதை கொடுக்கவில்லை என்ற குறைகூறுவது மட்டும் சரியா?

ரசிகன் என்ற உரிமையைத் தவிர வேறு எந்த உரிமையும் நமக்கு  கிடையாது,   உனக்கு பிடித்தால் படத்தை பாரு, இல்லை சும்மா இரு, இன்று காற்று உள்ள போது துற்றிக்கொள் என்ற பழமொழியின் பேரில் தான் வியாபாரம் நடக்கிறது, மார்கெட் இருக்கும் வரை சம்பாதித்து கொள்வது அதாவது பொங்கல் வந்தால் கரும்பு, வாழை விலை ஏறுவதும், ஆயூதபூஜை வந்தால் பழம் பொறி, பூ, சுண்டல் விலை ஏறுவதையும், மூகூர்த்தநாள் வந்தால் பூ விலை ஏறுவதை ஏற்றுக்கொண்டமக்கள் நாம், அதுபோல நடிகனின் படத்திற்க்கும் விலையேற்றம் வந்தால் ஏற்றுக்கொள் " விருப்பம் இருந்தால் படத்தைப்பார், கட்டாயமில்லை.
 

தக்காளி, வெங்காயம்  விலைபோல இந்த விலையேற்றம்  இது வியாபார உலகம், எனவே நடிகர்களுக்கு  மனமிருந்தால் மக்களுக்கு நல்லதை திரும்பச்செய்வார்கள், அது கட்டாயமில்லை, தனி மனித சம்பாத்தியத்தில் தலையிட income taxக்கு மட்டும் தான் உரிமை, அடுத்தவன் சம்பாதித்ததில் நீ மக்களுக்கு, உனக்கும் உரிமை கோராதே!
 

எனவே நீ உழைத்து சாம்பாதி, நாலு பேருக்கு கொடுத்து பார், முதலில்  கொடுத்து பழகு, நம்பி வாக்களித்தவர்களிடம் குறைகளை கேளுங்கள் அல்லது ஒன்றுகூடி கேளுங்கள், 

ஓன்றுபட்டால் தீர்வு
நாடு வளம் பெற இதுவும் ஒரு வழி
சிந்தித்துப் பார் 

மக்கள் நல்லுறவு

கோவை

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

கோயம்புத்தூரின் சில இடங்களின் பெயர் எப்படி வந்தது என்ற சுவாரசியமான தகவல்கள்...
ஒப்பணக்கார வீதி :

விஜயநகர பேரரசில் சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் ( பணம் பட்டுவாடா) பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.அவர்கள்தான் இந்த பெயருக்கு காரணமான ஒப்பணக்காரனர்கள். பணத்தை ஒப்புவிக்கும் பலிஜா சமூகத்தினர் குடியேறியதால் ஒப்பணக்கார வீதி என்ற பெயர் வந்தது.


R.S புறம்:
1903ல் கோவையில் வேகமாகப் பரவிய பிளேக் நோயால் ஏரளமான உயிர்பலிகள் நிகழ்தன. எண்ணற்றோர் தங்கள் இருப்பிடங்களை காலி செய்து இடம் மாறினர்.மேலும்,மக்கள் நெருக்கம் மிகுந்த நகரில் சுகாதாரக் குறைபாடுகள் அதிகம் இருந்தது.எனவே நகரை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.அப்போது மேட்டுபாளையம் ரோடு மற்றும் தடாகம் ரோடுக்கு இடையே இருந்த பல நூறு ஏக்கர் நிலத்தை வாங்கிய நகரசபை நிர்வாகம் அதை மனைகளாகப் பிரித்தது.பின் அப்பகுதிக்கு கோவை நகராட்சி மன்றத் தலைவராக இருந்த இரத்தினசபாபதி முதலியாரின் பெயர் வைக் கபட்டது.ரத்தின சபாபதிபுரம் என்னும் பெயர் சுருங்கி ஆர்.எஸ்.புறம் என்று ஆயிற்று.


சபர்பன் ஸ்கூல்:
பிளேக் நோய் காரணமாக நகரம் விரிவாக்கப்பட்டபோது ஆர்.எஸ்.புறம்,கெம்பட்டி காலனி,தேவாங்கப் பேட்டை உள்ளிட்ட புற நகரங்கள் உருவாக்கப் பட்டன.அந்த நாளில் பிராமணர்களுக்காக உருவாகப்பட்ட ராம்நகரும் கூட ஒரு புறநகரமே. அந்த புற நகரில் ஏற்படுத்தபட்ட பள்ளி என்பதால் சப்-அர்பன் பள்ளி என்று அழைக்கபட்டது.அது மருவி சபர்பன் பள்ளியாயிற்று.


சுக்கிரவார் பேட்டை& தேவாங்க பேட்டை:
கன்னடம் மற்றும் தெலுங்கில் "சுக்கிர வராம்" என்றால் வெள்ளிக்கிழமை என்று பொருள்.கடைகள் நிறைந்த வியாபாரப் பகுதியை "பேட்டை" என்பார்கள். அன்றைய நாளில் வெள்ளிக்கிழமை தோறும் சந்தை கூடிய இடத்திருக்கு பெயர்தான் சுக்கிரவார் பேட்டை. தேவாங்க செட்டியார் அதிகம் வசித்த பகுதியில் நெசவுத் தொழிலும் புகழ் பெற்று விளங்கியதால் தேவாங்கப் பேட்டை ஆயிற்று.


டவுன்ஹால் :
விக்டோரியா ராணி பதவியேற்று 50 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில் 1887ல் கோவை நகராட்சியின் மையப்பகுதியில் நகர மண்டபம் ஓன்று கட்டப்பட்டது. 1892 இல் திறக்கப்பட்ட அந்த மண்டபம் இருந்த இடம்தான் டவுன்ஹால் என்று அழைக்கப்பட்டது.


கோட்டை மேடு :
டவுன்ஹால்க்கு பின்புறம் கோட்டை இருந்தது.பிரிட்டிஷ் மற்றும் மைசூர் படைகளுக்கு இடையே நடந்த யுத்தத்தில் சிக்கி அந்தக் கோட்டை சின்னபின்னமானது.1782ல் திப்புவின் உத்தரவின் பேரில் இந்த கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது.அந்த கோட்டை இருந்த இடம்தான் இன்றைய கோட்டை மேடு.

கோட்டை ஈஸ்வரர் இருக்கிறார்.

ராஜா வீதி :
ஆசிரியர்ப் பயிற்சி பள்ளியும்,பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இயங்கும் கட்டடம்தான் அன்றைய மதோராஜா மஹால்.மைசூர் அரசின் அதிகாரியான அந்த மதோராஜா,அந்த வீதியில் குடியிருந்து ஆட்சி செலுத்தியதால் அந்த வீதிக்கு ராஜாவீதி என்று பெயர்.


காட்டூர் :
அவினாசி ரோடு மேம்பாலம் முதல் வட கோவை சிந்தாமணி வரையில் முன்பொரு காலத்தில் பனங்காட்டுக் குளம் என்ற குளம் இருந்தது.நாளிடைவில் அந்த குளம் அழிய,குளமிருந்த இடத்தில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டன.நாளிடைவில் பனை மரங்கள் நிறைந்த காடாக மாறியதால் பனங்காட்டூர் என்றாயிற்று. நாளிடைவில் அது மருவி காட்டூர் என்றாயிற்று.


சரிதானுங்கோ..!

ஓட்டு நோட்டு

மக்கள் நல்லுறவு

தேவை விழிப்புணர்வு.

கண்ணா! சினிமாவில் நடப்பது போல ஒரே ஒரு பாட்டில் பணக்காரன் ஆகிவிடமுடியாது.

அதே போல ஓட்டுக்கு தரும் ஒரு நோட்டில் நீ பணக்காரனாக முடியாது.

உண்மையில் உனக்கு கொடுத்தவன் ஆடும் சூதாட்டம், உனது ஓட்டு ஒன்று அவனை பணக்காரன் ஆக்கும், அல்லது கடன்காரனாக்கும்.

நோட்டு கொடுக்கவருபவனிடம் வாங்க மறுத்துப்பார், வற்புறுத்தினால்  கொடுக்க வருபவனிடம் வாங்கிக் கொள்கிறேன் ஆனால் என் விருப்பப்படி, மனசாட்சிப் படிதான் நான் வாக்களிப்பேன் இதற்க்கு சம்மதமா! என கேட்டுப்பாருங்கள்.

உங்கள் மனசாட்சி,  நேர்மையை, விரலில் வைக்கும் மை க்கு 200, 500க்கு அடமானம் வைக்காதீர்கள்,நீங்கள் அடிமைகள் ஆகிவிடாதீர்கள்.

உண்மையில் நேர்மையினால் வந்த பணம் என்றும்  நிலைக்கும், தவறான வழியில் வரும் பணம் வீண் விரயம், மருத்துவசெலவில் தான் முடியும்.

உள்ளாட்ச்சி தேர்தல் வருகிறது ஆளும் கட்சியினர் ஆட்சியை பிடிக்க கோடிக்கணக்கில் பணத்தை முதலிடு செய்யும்.

நோட்டை நம்பி நீங்கள் ஏமாறவேண்டாம், ஏமாற்றவேண்டாம்.

போட்டியிடும் வேட்பாளர்களில்  நல்ல மனிதர்களை, நேர்மையானவர்களை, சேவை உள்ளம் கொண்டவர்களை தேர்தெடுத்து வாக்களிக்கவும்,
உங்கள் பகுதியைப் பற்றி அறிந்த மனிதராக, தேர்ந்தெடுங்கள்.

கட்சி, ஜாதி,  மதம், பணம், போட்டி, பொறாமை, பார்க்கவேண்டாம், ஐந்து வருட எதிர்காலத்தையும், மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு வாக்களிக்கவும்.

இந்த நாடும் நாட்டு மக்களூம், நகராட்சி, மாநகராட்சி மக்களும் நலம் பெற்று வாழ்க வளமுடன்.

மக்கள் நல்லுறவு.

Saturday, July 23, 2016

சிந்தித்து பார்

சிந்தித்து பார்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!

உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!

ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. ...

புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. ...

குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா....

நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ....

தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா....

நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.

ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..

20 - 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா...

சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்...

இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .

சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே...

ஹெல்மெட்_அணிவதால். ...

சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..

கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது...

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே...

வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். ...

இப்பொழுது சொல்லுங்கள்

ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்....


மக்கள் நல்லுறவு

Thursday, July 21, 2016

உள்ளாட்சி தேர்தல்

 கோவை மக்கள் நல்லுறவு :

உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் வருகிறது, வார்டு மக்களே!  சிந்தித்து செயல்படும் நேரம் இது.

போதிய அவகாசம் உள்ளது நாம் சிந்தித்து செயல்பட ....

நாம் ஆளூம் கட்சிக்கு வாக்களித்தால் தான் நமது பகுதி திட்டங்கள் நிறைவேறும், வசதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை முதலில்  தூக்கி எறியுங்கள்

இது தவறு ஒவ்வொரு வார்டுக்கும் அதன் தேவைக்கு எற்ப நிதி ஒதுக்கப்பட்டு இருக்கும் அதை முறையாக கேட்டு பெற்று மக்களின் தேவைகளை ஊழலில்லாமால் நிறைவேற்றுவது மாமன்ற உறுப்பினர்களின் முதற் கடமை,  அது யாராக இருந்தாலும் சரி

அதைத் தான் சரியான முறையில் நிறைவேற்றும் நம்பிக்கை உரியவர் நாம் தேர்ந்தெடுக்கும்  நபராக இருக்கவேண்டும் இதுதான் நமது உறுப்பினரின் முதல் தகுதி.

எனவே இதில் ஆளும் கட்சி, எதிர்கட்சி, சுயேச்சை என கட்சி வாரியாக பிரித்துப் பார்க்காமல், ஜாதி பார்க்காமல்  நல்ல மனிதர்களை மட்டும்  தேர்ந்தெடுங்கள்.

வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

வழிமுறைகள், சிந்தனை.

அவர் உங்கள் பகுதியை பூர்வீகமாக கொண்டு வசிப்பவரா?

எத்தனை ஆண்டுகளாக வசிக்கிறார்?

அவர் தனி மனித ஒழுக்கம் கொண்டவரா ?

உங்கள் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சனைகள் பற்றி அவர் அறிந்தவரா?

பகுதி / வார்டு மேம்பாட்டு / முன்னேற்றித்திற்கு அவர் வைத்துள்ள திட்டங்கள் என்னென்ன?

 நாம் அவரை எளிதில் அணுக முடியுமா? எளிமையானவராநேர்மையானவரா?

என்பதை அலசிப்பாருங்கள், ஊழல், லஞ்சம் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவரா? துணிச்சல் மிக்கவரா? என்பதை சிந்தித்து பாருங்கள்,

ஜாதி, தனது கட்சி, அதனை சார்ந்து  அரசியல் செய்பவரா? அப்படி செய்பவராக இருந்தால் மக்கள் நல்லுறவு ஏற்படாது அறவே தவிர்திடுங்கள்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பவரா ? பணம் கொடுப்பவராக இருந்தால் அவருக்கு வாக்களிப்பதை அறவே தவிருங்கள். உங்களுக்கு ஓட்டுக்கு கொடுத்த பணத்தை பன்மடங்கு ஊழல் செய்து சம்பாதிக்கவே இங்கே முதலீடு செய்கிறார்.

சாதி, மதம், மொழி, இனம், நிறம் போன்ற வேறுபாடுகளை களைந்து , அனைத்து தரப்பு மக்களையும் ஆதரித்து செல்லக் கூடியவரா?

வேட்பாளர் தான் சார்ந்த சாதி, மத மக்களுக்கு மட்டுமே நன்மை செய்யக் கூடியவராக இருந்தால் அவருக்கு வாக்களிப்பதைத் தவிர்த்தல் நலம்.

குற்றப் பிண்ணனி உள்ளவரா?
அவருடைய சொத்துப் பட்டியலை வெளிப்படையாக அறிவித்துள்ளாரா?

நீங்கள் வாக்களிக்கப் போகும் வேட்பாளர் ஏற்க்கனவே அதே தொகுதியில் / வார்டில்  வெற்றி பெற்றவரா?

அவர் அந்த தொகுதியில் ஏற்க்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவராக இருப்பின், அவருக்கு மீண்டும் வாக்களித்து தவறு இழைக்காதீர்கள்.

பதவியின் முலம் பணம் சம்பாதித்தவராக, தீமிர் பிடித்தவராக இருந்தால் மீண்டும் தவறு செய்யாதீர்கள்.

வேட்பாளரின் தகுதி பார்த்து வாக்களியுங்கள்.

எளிதில் அனுகும்படி உள்ளவராக, நம்பிக்கைக்கு உரியவராக கருதினால் வாக்களியுங்கள்.

அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் மக்கள் பிரச்சனைகளை நேரில் வந்து கேட்டு தீர்த்து வைக்கக்கூடியவரா?

குறைந்த பட்சம்  மாதத்திற்க்கு ஒரு முறையாவது உங்களை உங்கள் நகரில் வந்து சந்திக்க உறுதி கொடுக்கிறாரா?

அவர் இதுவரை என்னென்ன  மக்கள் சமூகப் பணிகளை செய்துள்ளார் என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

அவர் உங்களுக்கு அளித்திருக்கும் வாக்குறுதி என்ன?

மேம்பாட்டு நிதியை செயல்படுத்த அவர் கொண்டுள்ள திட்டங்கள் என்னென்ன?

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் அலசி ஆராய்ந்து நீங்கள் ஓட்டளிக்கப் போகும் வேட்பாளரை நீங்களே சுயமாக தேர்வு செய்து வாக்களியுங்கள்.

சுருக்கமாக சொல்லப் போனால் உங்கள் வீட்டில் தங்கள் மகனுக்கோ / மகளுக்கோ திருமணத்திற்க்கு வரன் பார்த்தால் எப்படி கவனமாக அலசி ஆராய்ந்து ஒரு நல்ல வரனை தேர்வு செய்வீர்கள்! அந்த அளவுக்கு நாம் வேட்பாளரை கவனமாக தேர்ந்தெடுத்து தவறாது வாக்களிக்குமாறு உங்கள் பொற்கரங்களை தொட்டு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.


மக்கள் நல்லுறவு பகிர்கிறது