Tuesday, January 19, 2016

Coimbatore Gandhipuram sub-register office issue

அன்புடையீர்
வணக்கம். பொதுமக்கள் நலன் கருதியும்> மக்கள் மீது அக்கறை கொண்டு விடப்படும் கோரிக்கை...

கோவை> காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தை பத்திர பதிவுத்துறை செய்த இட மாற்றத்தினால் ஏற்பட்ட சிக்கல்களும்> துன்பங்களும்...

கோவை> காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகம்> சரவனம்பட்டி>சின்னவேடம்பட்டி> வெள்ளக்கினறு> சங்கனுர் கிராமம் போன்ற பகுதிகளை எல்லைகளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ் அலுவலகம் தனது எல்லையின் மத்திய பகுதியில் வாடகைக் கட்டிடத்தில் மிகக் குறைந்த வாடகையில் (மாதம் சுமார் ரூ.5>000) செயல்பட்டு வந்தது. இந்த அலுவகத்தை வேறு இடத்திற்கு மாற்ற (சரவனம்பட்டியில்) பரிசிலனை நடந்த பொழுது> இடம் மாற்றத்தினால் ஏற்படும் சிக்கல்களையும்> பாதிப்புகளையும் பலர் தெரிவித்தனர்.
பத்திர எழுத்தர்கள் ஒன்று கூடி ஏற்கனவே அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டிடத்திற்கு தாங்களே வாடகையை செலுத்திவிடுவதாகவும்> அலுவலகம் இலவசமாக செயல்படக் கேட்டுக்கொண்டனர். இவ் ஆலோசனையை அதிகாரிகள் ஏற்க மறுத்து ஒரு சிலரின் சுய லாபத்திற்கும்> ஆட்சியாளரின் நலனை கருத்தில் கொண்டு கோடிக்கணக்கில் (வரிப்பணம்> கடன் நிதி உதவி போன்ற வற்றின் மூலம்) செலவு செய்து தரமற்ற புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அக் கட்டிடம் கணபதி கிராமம்> கணபதி சார்பதிவாளர் அலுவலக எல்லையும் தாண்டி (காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தை) விளாங்குறிச்சி ரோடு> சரவணம்பட்டியில் அமைத்தனர்.
பொது மக்கள் நலன் கருதாமல்> அக்கறை கொள்ளாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு மக்களுக்கு மிகுந்த சிரமத்தை அளித்து கொண்டிருக்கிறது. அதன் காரணம்...
அலுவலகம் அமைக்கப்பட்ட இடம் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை> வாகனம் நிறுத்தக்கூடிய இட வசதிகள் இல்லை> சொத்து பரிமாற்றம்> பணம் அதிகமாக புழங்கும்; இடம் பாதுகாப்பில்லாமல் அமைக்கப்பட்டுள்ளது> இவ் அலுவலக வளாகம் அமைக்கபட்ட பகுதி சமுக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாகும்> அதன் வரலாற்றை அறிந்தவர்கள் உண்மையை உணர்வார்கள்.
மேலும் தற்பொழுது இருக்கும் வாகன நெரிசல்> சாலை வசதி> பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் இப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மிகுந்த பொருட் செலவில் அமைக்கப்பட்ட இடத்தில் ஒன்று காளப்பட்டி> சரவணம்பட்டி> விளாங்குறிச்சி> சின்னவேடம்பட்டி அடங்கிய பகுதிகளை மட்டும் பதிவு செய்யும் சார்பதிவாளார் அலுவலகமாக மாற்ற வேண்டும்> பாதுகாப்பு வசதிகளை செய்து தரவேண்டும்.
மேலும் காந்திபுரம் சார்பதிவாளார் அலுவலகத்தை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நன்றி
இப்படிக்கு
கோவை மக்கள் நல்லுறவு இயக்கம்










Cbe Corp Mayor

5:24 PM (16 hours ago)
to me
 
Translate message
Turn off for: Tamil
தங்களது கோாிக்கை பாிசீலிக்கப்படும்

No comments:

Post a Comment