Monday, May 14, 2018

வாத வகைகள்

➖➖➖➖➖➖➖➖
🌴வாத நோய்கள் 🌴
 ➖➖➖➖➖➖➖➖

       வாதம் என்றால் கொடுமை என்று பொருள். அழையாத வீட்டிற்குள் வரும் விருந்தாளியைப் போல் வாதமானது உடலில் திடீர் என தாக்கும்.

     நல்ல இரத்தம் உள்ளவர்களை நோய் தாக்கினால் அது அவ்வளவாக முதலில் தெரியாது .

நாள் செல்ல செல்ல ஆரோக்கியம் குன்றிய நிலை வரும் போது வாத நோய் மேலோங்கி வருகின்றது.

இது நிலையாக நிலைத்து விடாமல் இருக்க நல்ல சிகிச்சை வேண்டும். இல்லையேல் அசாத்தியமாக முடியும்.

வாத வகைகள். 
...........................

       உடல், கை , கால் நொந்து கடுத்து பலங்கெட்டு அசதி , சோம்பல், தூக்கம் மிகுந்தால் வாதமென்றும். 

தேகத்தில் பல இடங்களில் துடித்தடங்கினால் துடி வாதமென்றும்,

தேகம் வெதும்பி உளைந்து சிசிறுத்து நடுங்கி நா வரண்டால் நடுக்கு வாதமென்றும், 

ஒரு பீசம் வீங்கி வலித்து மேல் நோக்கி ஏறினால் அண்ட வாதமென்றும், 

சந்தில் பிடித்து விடாமல் உளைந்து வலித்து மாலையில் அதிகரித்து உடல் மெலிந்து தாது கெட்டால் சந்து வாதமென்றும், 

தேகம் மெலிந்து உளைந்து பல இடங்களில் ஓடி குத்தி பலங்குறைந்து நாவும் பல்லும் வரண்டால் ஓடு வாதமென்றும், 

தோள் வீங்கி கண்டம், பிடரி வலித்து கடுத்தால் தோள் வாதமென்றும், 

ஒரு புறத்தில் கையும் காலும் விழங்காதிருந்தால் பக்க வாதமென்றும்,

 கழுத்தை திருப்பி பார்க்க முடியாமல் பிடித்துக் கொண்டால் கழுத்து வாதமென்றும், 

இரவும் பகலும் விடாமல் சிரசு வலித்தால் சிரசு வாதமென்றும், 

திருத்தமாய் பேச ஒட்டாமல் நாவை இழுத்துக் கொண்டால் தம்பன வாதமென்றும், 

பல் அசைந்து வலித்தால் தந்த வாதமென்றும், 

இரு செவியும் மந்தித்தால் கர்ணீக வாதமென்றும், 

விரல்கள் விறைத்து பொருளை பிடிக்க முடியாமல் இருந்தால் அங்குலி வாதமென்றும்,

முன் கை இரண்டும் வீங்கி வலித்தால் முன் கை வாதமென்றும், 

முகம் ஊதி கடுத்தால் வதன வாதமென்றும், 

இடுளப்புளைந்து கடுத்து குனிய நிமிர கூடாதிருந்தால் இடுப்பு வாதமென்றும்,

 ஆசனம் நோந்து கடுத்தால் உருளை வாதமென்றும், 

துடை கடுத்து நடக்காதிருந்தால் துடை வாதமென்றும், 

முழங்கால் வீங்கி கடுத்தால் முழங்கால் வாதமென்றும், 

கெண்டைக்கால் கடுத்து வலித்தால் கெண்டை வாதமென்றும், 

குதிங்கால் வீங்கி கடுத்தால் குதி வாதமென்றும், 

வாய் கடுத்து அங்கு கிட்டி வியர்த்து  பேச முடியாமல் இருந்தால் வாய் வாதமென்றும், 

தண்டு பொருமி வீங்கினால் தண்டு வாதமென்றும், 

கை,காலை சுருங்க வாங்கி இழுத்துக் கொண்டால் வாண வாதமென்றும், 

அடிக்கடி தேகத்தை வில் போல் வளைத்து வியர்த்து நா உழறி பற்கிட்டி மேல் மூச்சு கண்டால் தனுர் வாதமென்றும், 

இரு காலிலும் இரத்தங்கட்டி அயர்ந்தால் சுரோணித வாதமென்றும், 

தூர நடக்க முடியாமலும் உண்ட உணவு செரிக்காமலும் ஏப்பம் பரிந்து கொண்டிருந்தால் அஜீரண வாதமென்றும்,

 உதரத்தின் மேல் நரம்பு பசுமையாய் தோன்றி மூலாக்கினி மந்தித்து உடல் வெளுத்தால் கப வாதமென்றும், 

குடல் புரண்டு குமுறி இனைந்து வலித்து மந்தித்து பரந்தொடி வலித்து காலுளைந்தால் குடல் வாதமென்றும் அறிக.

No comments:

Post a Comment