Sunday, January 31, 2016

சிந்தனை செய் மனமே

கோவை மக்கள் நல்லுறவு

படித்ததை பகிர்கிறது
சிந்தனை செய் மனமே
உன் நெஞ்சைத் தொட்டு, கட்சியை மறந்து
மக்களை நிலைமை நினைத்து பார்.
இன்றிலிருந்து சரியாக ஐந்து வருடங்கள் முன்பாக...அதாவது 2011 ஜனவரியில்.... இதே தமிழகத்தில்....

1 லிட்டர் பால் விலை ரூ 24/- (இன்றைக்கு 46/-)
1 கிலோ பருப்பு ரூ 68/- (இன்றைக்கு 180/-)
பேருந்து கட்டணம் ரூ 10/- (இன்றைக்கு 23/-)
மின்சார கட்டணம் ரூ 500/- (இன்றைக்கு 1400/-)

புது வாட் வரியால்..
மாத சாமான்கள் ரூ. 2000/- (இன்றைக்கு 2800)
மணல் 1லோடு ரூ 3500/- (இன்றைக்கு 7200/-)
5 பேர் உள்ள குடும்பத்தின் மாத பட்ஜெட்...
ரூ 6000/- (இன்றைக்கு 14000/- )
தமிழக கடன் 98ஆயிரம் கோடி (இன்றைக்கு 2 லட்சத்தி பத்தாயிரம் கோடி)
சிந்திப்பீர்....

சுறுக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு குடும்பத்தின் மாதச் செலவும் 120 சதவிகிதம் அதாவது ஒரு மடங்குக்கும் அதிகமாக கூடியுள்ளது.... அதே சமயம் தமிழகத்தின் கடன் சுமையும் இரு மடங்காகியுள்ளது..!

இத்தனைக்கும் சாலைகள், பாலங்கள், மெட்ரோ ரயில் போன்றவைகள், கூட்டுக் குடிநீர் திட்டங்கள், கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள், புது மின் உற்பத்தி திட்டங்கள், நதி நீர் இணைப்புத் திட்டங்கள், புதிய தொழிற் பேட்டைகள்.... என்று எதுவுமே இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் உருவாக்கப்படவேயில்லை...!!

முதல் இரண்டு ஆண்டுகள் மின்சார தட்டுபாட்டால் தொழில் முடக்கம்.

விலை வாசியும் மக்கள் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது..., புதுத் திட்டங்களும் இல்லை... ஆனாலும் கடனும் அதற்கான கூடுதல் வட்டியும் மட்டும் இரு மடங்காகியிருக்கிறது...!!

இதற்கு எது காரணம்? யார் காரணம்?

விலைவாசி குறையும் என்று தானே வாக்களித்தோம்...?

உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் அதிகமாக மேம்படுத்தப்படும் என்று தானே வாக்களித்தோம்...?

சாலைகளின் தரம் இன்னும் மேம்படுத்தப்படும் என்று தானே நம்பி வாக்களித்தோம்...?

தமிழக கடன் குறையும் என்று தானே வாக்களித்தோம்..?

தொழில் வாய்ப்புக்களும், புதுப்புது வேலைகளும் இன்னும் கூடுதலாக கிடைக்கும் என்று நம்பித்தானே வாக்களித்தோம்...?

நிலப்பத்திர பதிவு துறையில் அரசு செய்த மாற்றத்தினால் தொழில் மந்தம், பதிவினால் பொதுமக்கள் பாதிப்பு பணம் இழப்பு, அரசு மற்றும் அதிகாரிகள் பயன்.

செயின் திருட்டு பல மடங்கு அதிகரித்திருக்கிறது, வன்முறை கலவரங்கள் வெடித்திருக்கின்றன, ஜாதிக் கலவரங்கள் உச்சம் தொட்டிருக்கின்றன, ஜாதிச் சண்டைகளால் கொலைகள் பல அரங்கேறியிருக்கின்றன, அனைத்து துறையிலுல் லஞ்சம் பெருக்கெடுத்து ஓடுகிறது, கூடங்குளம் தடுத்து நிறுத்தப்பட்டதா? தனி ஈழம் மலர்ந்ததா? கடைசியாக... ஜல்லிக்கட்டு நடந்ததா? காவிரியில் தண்ணீர் வந்ததா?

வழக்கமான கொத்துச் சாவுகள்... குறிப்பாக செம்பரம்பாக்கச் சாவுகள் தான் நடந்தேறியிருக்கின்றன....!

சிந்தியுங்கள் தமிழக வாக்காளர்களே....

ஐந்து வருடத்திற்கு முந்திய நமது வாழ்க்கைத் தரம் அந்த நிலையில் இருந்து முன்னேறி கூட இருக்க வேண்டாம்... ஏன்? அதே நிலையிலேயே தொடர்ந்து கூட இருக்க வேண்டாம்....!

ஆனால் ஐந்தாண்டுகள் பின் தங்கிப் போயிருக்கின்றோமே... இதை நீங்கள் உணர்கின்றீர்கள் தானே?!

ஒவ்வொரு தனி மனிதரின்.., ஒவ்வொரு தமிழக குடும்பத்தின் நிலையும் ஓரளவிற்காவது தன்னிறைவுடன், பொருளாதார மந்தம் எதுவுமின்றி, இருந்ததை இந்த நேரத்தில் தான் நாம் நினைவு கூற வேண்டும்.

இலவசம், பண பட்டுவாடா ஆகியவற்றில் ஏமாந்த மக்கள்.

மக்களுக்கு தரும் சலுகைகள், அரசு செய்யப்பட வேண்டிய கடமைகள் அனைத்தும் சாதனை என்ற பெயரில் விளம்பரம் மற்றும் பேனர்

கடந்த தேர்தலில் வாக்களிக்க நீங்கள் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த காரணங்கள் ஒவ்வொன்றையும் சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்...

நன்றி! நன்றி!! நன்றி!!!

 01.02.2016
கோவை
கோவை மக்கள் நல்லுறவு

வணக்கம்.
          30 மற்றும் 31.01.2016 ஆகிய  தேதிகளில் நடைபெற்ற இலவச இருதய பரிசோதனை முகாம், சித்த மருத்துவ முகாம், மூலிகை கண்காட்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள், திரு.கமலா பிரஸ் ராஜூ, இந்திய சித்த மருத்துவ பட்ட்தாரிகள் சங்கம், நண்பர்கள், சங்க உறுப்பினர்கள்,  நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த அனுமதி வழங்கிய முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும், தீயனைப்பு மீட்பு படை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கும், சுகாதார துறை அதிகரிகளுக்கும், கண்காட்சியில் பங்கேற்ற மருத்துவர்கள் குழு (ஆன்ந்தம் ஆரோக்கியம் இயற்கை வைத்தியம்,சித்த மருத்துவம், இலவச இருதய பரிசோதனை குழு, மூலிகை கண்காட்சி குழு, அக்கு பஞ்சர், அக்கு பிரசர் மருத்துவர்கள்) மற்றும் உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி! நன்றி!!நன்றி!!! 

இப்படிக்கு
மக்கள் நல்லுறவை விரும்பும்

கோவை மக்கள் நல்லுறவு