Sunday, April 28, 2019

அரசியல் ஆட்டம்

மக்களாட்சி, மக்களுக்கான ஆட்சி ,மக்களின் தலைவருக்கான தேர்தல், ஒரு விரல் புரட்சி, தேர்தல் ஆணையம், தேர்தல் விதி, Evm, மிரட்சி, சூழ்ச்சி என பல முட்களை கடந்து, 

மக்களின் வரிபணத்தில் தேர்தல் நடத்தி மக்கள் விருப்ப வாக்கு போட்டு மக்களின் 
 பிரதிநிதியாக தேர்தெடுத்து ஒருவரை சட்டசபைக்கு அனுப்பி வைத்தால் 

சட்டசபை உள் விவகாரத்தால் நாம் தேர்ந்தெடுத்த நபர்களை தகுதி நீக்கம் செய்ய மக்களை விட சபாநாயகர் உச்சபட்ச அதிகாரம் கொண்டவராக உள்ளார்,மக்களின் விருப்பம் ஏமாற்றமளிக்கிறது, 

ஆக இவர் தான் முதலமைச்சராக வேண்டும் என்று ஒட்டு மொத்த மக்கள் விருப்ப வாக்களித்தால் அவர் இல்லை, மக்கள் விருப்பமில்லாமல் நூற்று முப்பது பேரை கவனித்தால் முதலமைச்சர் ஆகி விடலாம், என்ற நிலை வந்தது, அதுவும் நடந்தது, 

பணம் இருப்பவன் ஏலம் எடுப்பது போல ஆகிவிட்டது இந்த அரசியல், ஏலம் எடுத்தவர்கள்  சும்மா இருப்பார்களா?

தேர்தெடுத்த மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பது??? 

ஒன்னும் செய்யாதவர்களை தேர்தெடுத்தவர்கள் தூக்கி எறியும் அதிகாரம் உண்டா??? 

மக்கள் பெயரை , லேபிளை வைத்து ஆடும் ஆட்டங்கள், மக்களுக்கு ஒட்டு மொத்த  ஏமாற்றங்கள்... 

Friday, April 26, 2019

செல்லும் பாதை...?


நோக்கம் நல்லது அதனால் பாதிப்பும் உண்டு பலனும் உண்டு!

நாம் செல்லும் பாதையில் ...

நாம் கடக்கும் சாலையில் பள்ளம் உண்டு அதை கண்டும் காணமல்  கடந்து செல்வது பலர், இங்கு குழி ஏற்பட்டதை சொன்னால் தான் தெரியும் என சிலர் அக்கறை கொண்டு பள்ளத்தை பற்றி அதிகாரியிடம் இலாகாவிடம் புகார் தெரிவிப்பார்கள், வரி வாங்கி வசதி செய்யாத என்ன அரசாங்கம் என குறை கூறி புலம்பி செல்வார்கள் சிலர்

இப்படியே நாட்கள் நகர்ந்தது...

அடுத்து ஒருவன் செல்லும் பாதையில் குழி தெரிகிறது, அப்படியே கடந்து செல்லாமல் ஒரு நிமிசம் யோசித்து  தனக்கு பின்னால் வருபவர்களுக்கு குழியால் ஆபத்து விபத்து ஏற்படும் என்று எண்ணி மண்ணை நிரப்பிடலாம் தேடுகிறான் மண் மேடூம் இல்லை, சுரண்டி எடுக்க பொருளும் இல்லை, எனவே இரண்டு கல்லை எடுத்து சாலையில் எச்சரிக்கைக்காக வைத்து விட்டு திருப்தியடைந்து போகிவிடுகிறான்.

அடுத்து வேகமாக வரும் வாகனம் கல் இருப்பதால் ஓரு செகன்ட் நிலை தடுமாறி போகிறது, ஒரு சில வாகனம் முன் எச்சரிக்கையாய் அறிந்து நிதானமாக கடந்து செல்கிறார்கள்.

அடுத்து இதை கடந்த இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஓருவன் கல்லை விட குழியே பராவாயில்லை என நினைத்து கல்லை தூக்கி வீசிவிட்டு செல்கிறான்.

பத்து நிமிசம் கழித்து அந்த இடத்தை கடந்த வண்டி குழியில் இறங்கி  அச்சு முறிந்து விட்டது, ஓரமாக  நிறுத்தினார்கள், நிறுத்தி பார்த்து கொண்டு இருந்த பொழுது அருகில் முனகல் சத்தம் கேட்டது  ஒருவன் ஒரமாக தலையில் அடிபட்டு கிடக்கிறான் அவனை மயக்கத்திலிருந்து எழுப்பி விசாரித்தால் தான் ஓரமாக ஒதுங்கி நின்ற பொழுது யாரோ சாலையில் இருந்து தன் மீது கல்லை வீசி சென்றதாக கூறினான்.

அடுத்து வந்த வாகனத்தில் வந்தவர்கள்  நிறுத்தி விசயத்தை கேட்டு அடிபட்டவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள், சேர்த்த போது அங்கிருந்தவர் ஒருவன் கேட்டார் உங்க வண்டியிலே அடிபட்டவரா இவர்? நல்ல வேலை அடிபட்டவன் சுய நினைவோடு இருந்தார்.

அடுத்து வந்த மண் லாரி அதில் இருந்த நபர்கள் குழிக்கு கொஞ்சம் மண்ணை கொட்டி சென்றார்கள், இப்போ குழி நிரம்பியது, மனசும் நிரம்பியது.

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் எல்லையில் சாலைக்காக, சாலை வசதிக்காக  சுங்கம் வசூலித்து கொண்டு கடமையை செய்து கொண்டும் இருப்பார்கள்!

இங்கு அவரவர் பார்வையில் அந்த நேரத்தில் அவரவர் செய்தது சரியாக தோன்றியது, ஆனால் பின்னால் சிலருக்கு பாதிப்பும் உண்டு, பலருக்கு பயனும் உண்டு,

யாரை குற்றம் சொல்ல! நோக்கம் நல்லது தான்! இதில் நீங்க எந்த ஒருவர்  என்பதை சிந்தித்து பாருங்கள்! வாழ்க்கை பாதையை கடந்து செல்லுங்கள்!

Thursday, November 8, 2018

ஒரு வாழ்கை பல பார்வை


இறைவனின் பார்வையில் நான் மனிதன்
உலகத்தின் பார்வையில் நான் இந்தியன்
மாநிலத்தின் பார்வையில் நான் தமிழன்
மாவட்டத்தின் பார்வையில் நான் கோயமுத்தூர்காரன்
பெற்றோரின் பார்வையில் நான் நல்லமகன்
கரம் பிடித்தவள் பார்வையில் நான்  நல்ல கணவன்
பிள்ளைகளின் பார்வையில் நல்ல தகப்பன்
உங்களின் பார்வையில் என்றுமே நல்ல நண்பன்
பார்வை பல கொண்டவர்கள் அன்புடன் வாழ்க வளமுடன்

ஏன் இந்த நிலை?


இன்றைய பெற்றோர்கள் கவனத்திற்க்கு!

               என் மகளுக்கு எத்தனை செலவு செய்து திருமணம் செய்து கொடுத்தேன், நகை, பணம், கார், பங்களா, சீரும் சிறப்புமாக, பல விதமான உடைகள், பல வகையான உணவுகள், விருந்துகள் அளித்து ஆடம்பரமாக செலவு செய்து, பணக்காரனாக பார்த்து கட்டிக்கொடுத்தேன், ஆனால் என் மகள் ஆறு மாதத்தில் வாழமாட்டேன்  அவருடன் சரிபட்டு வரவில்லை என வந்து விட்டதால்  நாங்கள் மன நிம்மதி இல்லாமல் தவிக்கிறோம் ,நாங்கள் சரியாக விசாரிக்கவில்லை,  நாங்கள் ஏமாந்து விட்டோம் என பல பெற்றோர்கள் சொல்வதை நாள்தோறும் காண்கிறோம்.

               எதைப்பற்றியும் யோசிக்காமல், தங்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல், சின்ன சின்ன விசயத்திற்க்கு  விவாகரத்து வேண்டி நீதிமன்றதில் பொறுமையுடன் மாதக் கணக்கில் பல பேர்  காத்து கிடக்கிறார்கள், நிதிமன்றத்தின் தீர்ப்புக்கு காத்திருக்கும் காலம் வாழ்க்கையில் கொஞ்சம் கூட காத்திருப்பதில்லையே! உங்கள்  வாரிசுகளின்  எதிர்கால வாழ்க்கையை அடுத்தவர்கள் தீர்மானிக்கும் நிலை வருவது சரியா ? அந்த வாய்ப்பை நாம் கொடுக்கலாமா?

               பெற்றோர்கள் தங்களது மகன் மகளுக்கு அன்பு, பண்பு, பொறுமை, ஒழுக்கம், விட்டு கொடுக்கும் மனப்பக்குவம், கல்வி,  வாழ்க்கை நெறிமுறைகளையும், குடும்ப நடத்துவதற்கான அடிப்படை வழிமுறைகளையும், இளவயது முதல் கற்றுத் தராமல் இருக்கும் பெற்றோர்கள் தான் இதற்க்கு முதல் காரணம்.

               செல்வம் சேர்பது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் ஏன்ன தேவை என்பதை மறந்து விடுகிறோம்,செல்வம் சேர்பதில் ஆர்வம் காட்டும் நாம் இதை சேர்க்க தவறிவிடுகிறோம், இது தான் வாழ்க்கை என்ற கட்டிடத்திற்க்கு அஸ்திவாரம்,  அஸ்திரம், அதை எடுக்க, கொடுக்க மறந்து விடுகிறோம், தான் பட்ட கஷ்டம் தனது மகள் மகன் அனுபவிக்க கூடாது என சொல்லி அடிப்படை கஷ்ட நஷ்டங்களை சொல்லாமல், தெரிந்து கொள்ள வாய்ப்பு கொடுக்காமல் அடுத்தவனிடம் ஒப்படைத்தால், அவன், அவளை புரிந்து கொள்ளும் முன் பிரிவு ஏற்பட்டு விடுகிறது.

               ஒவ்வொருத்தரும் தன் பக்கம் உள்ள கருத்துக்களை மட்டும் நீயாயமாக  பேசி அடுத்தவனிடம் குறைகளை காட்டி பிரிந்து  செல்ல வழி தேடுகிறார்கள், இவர்களை அறிவுரை கூறி சேர்த்து வைக்கவும் பெரியோர்கள் முயற்சி செய்வதில்லை, முயற்சி செய்தாலும் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுபவர்களையும் காணமுடிகிறது.

               சிறு தோல்விகளையும், கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ளாத சமூகத்தை, சந்ததிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், Fast food காலத்தில் எல்லாமே Fast ஆக வேண்டும் என்ற கோணத்தில் தான் இயங்குது உலகம், உங்கள் மகளுக்கோ, மகனுக்கோ, தொலைகாட்சி சீரியல்கள் தான் ஆலோசனை வழங்கி வருகிறது,  வரதட்சணை, கோபம், வில்லத்தனம், எனஅனைத்து தவறான விசயங்கள் எளிதில் பற்றிக்கொள்கிறது,

               எனவே பெற்றோர்களே ஆடம்பரம், அழகு, தற்பெருமை நமக்கு முக்கியமல்ல, கல்வியோடு, நல்ல ஒழுக்கம், அன்பு, உழைப்பு, பொறுமை, பொறுப்பு, மரியாதை, மன்னிக்கும் குணம் தான் அவசியம், அது தான் தனது சந்ததிகளை வளர செய்யும் முதல் சொத்து என்பதை மனதில் கொள்ளவேண்டும், அதையே கற்றுக்கொடுங்கள், வாழ்க்கை வளமாகும்!

வாழ்க வளமுடன்!

மக்கள் நல்லுறவு


Thursday, July 12, 2018

தடுப்பது யார்?


இளைஞர்களை விரைவில் ஈர்க்கும் பழக்கம்! பெற்றோர்கள் கவனம்!

அடுத்தவனிடம் வலிமை பெருமை பேச பந்தா! பண்ண ஆரம்பித்த பழக்கம் தான் இந்த புகை, குட்கா, மது ,கஞ்சா, போதை பழக்கம்  அதற்க்கு அடுத்து லாட்டரி, சூதாட்டம், ரேஸ், இதற்க்கு அடிப்படை தகுதி செல்போன், 'பைக், கையில் பணம்.

இதில் பணம் பற்றாக்குறையானால் அடுத்த கட்டம் வழிப்பறி, திருட்டு, பெண்கள் சகவாசம், கொலை, கொள்ளை, பெற்றோர்கள், நல்ல நண்பர்கள் நினைத்தால்தான் முதற்கட்டமாக தடுக்க முடியும், இல்லையெனில் பாதிப்பு ஒட்டு மொத்த குடும்பத்திற்க்கே! ஒட்டு மொத்த நாட்டிற்க்கே!

குறிப்பிட்ட வயது வரை பெற்றோர் கண்காணிப்பில், அன்பான, நட்பான  அரவனைப்பில், வழிகாட்டினால் நிச்சயமாக அது  நேர் வழியில் நடக்க வழி வகுக்கும்!

மாற்றத்தை உன் வீட்டிலிருந்து தொடங்கு!

இரும்பில் ஒரு இதயம்


தலையில்கணம் கொண்டவனா நீ!

நட்புக்கு இலக்கணம் நீ!
சேர்ந்தே உழைக்கிறாய்!
சேராமல் இருக்கிறாய்!

தன்னம்பிக்கைக்கு உதாரணம் நீ!
ஆம் நீ தினம் தினம் தற்கொலை செய்து கொள்கிறாய், அடுத்த நிமிடமே அதை மறந்து மறுபடியும் பணிக்கு தயராய் இருக்கிறாய்,

ஆயிரம் பேர் அசிங்கம் செய்தாலும் அமைதியாய் இருக்கிறாய்!

கல்லும் முள்ளும் கட்டையும் தான் உனக்கு படுக்கை!

சலிக்காமல் பலரின் பாரத்தை சுமக்கிறாய், இந்த பாரதத்தின் பெருமையாய் திகழ்கிறாய்!

நீண்ட ஆயூளுக்கு நேர் வழி காட்டுகிறாய், நீ மட்டும் தடம் புரண்டால் மக்களின் தலையெழுத்து மாறிவிடும்,

இந்த இரும்பிலும் இதயம் உள்ளதே!

ஏன் தண்டவாளமே! நீ வாழ்க  வளமுடன்! மக்கள் இருப்பார்கள் நலமுடன்!

அஸ்திவாரம்



பெற்றோர் தான் உன்  வீட்டின் அஸ்திவாரம்!
அதில்
உறவு உன்னை தாங்கும் தூண்கள்!

அஸ்திவாரம்
உன் அடையாளம்!  அது தான் பலம்!
அஸ்திவாரம் அழகாக தெரியாது
அடியில் இருப்பதால் அதன் அருமை உன் கண்களுக்கு தெரியாது!