Thursday, November 8, 2018

ஒரு வாழ்கை பல பார்வை


இறைவனின் பார்வையில் நான் மனிதன்
உலகத்தின் பார்வையில் நான் இந்தியன்
மாநிலத்தின் பார்வையில் நான் தமிழன்
மாவட்டத்தின் பார்வையில் நான் கோயமுத்தூர்காரன்
பெற்றோரின் பார்வையில் நான் நல்லமகன்
கரம் பிடித்தவள் பார்வையில் நான்  நல்ல கணவன்
பிள்ளைகளின் பார்வையில் நல்ல தகப்பன்
உங்களின் பார்வையில் என்றுமே நல்ல நண்பன்
பார்வை பல கொண்டவர்கள் அன்புடன் வாழ்க வளமுடன்

ஏன் இந்த நிலை?


இன்றைய பெற்றோர்கள் கவனத்திற்க்கு!

               என் மகளுக்கு எத்தனை செலவு செய்து திருமணம் செய்து கொடுத்தேன், நகை, பணம், கார், பங்களா, சீரும் சிறப்புமாக, பல விதமான உடைகள், பல வகையான உணவுகள், விருந்துகள் அளித்து ஆடம்பரமாக செலவு செய்து, பணக்காரனாக பார்த்து கட்டிக்கொடுத்தேன், ஆனால் என் மகள் ஆறு மாதத்தில் வாழமாட்டேன்  அவருடன் சரிபட்டு வரவில்லை என வந்து விட்டதால்  நாங்கள் மன நிம்மதி இல்லாமல் தவிக்கிறோம் ,நாங்கள் சரியாக விசாரிக்கவில்லை,  நாங்கள் ஏமாந்து விட்டோம் என பல பெற்றோர்கள் சொல்வதை நாள்தோறும் காண்கிறோம்.

               எதைப்பற்றியும் யோசிக்காமல், தங்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல், சின்ன சின்ன விசயத்திற்க்கு  விவாகரத்து வேண்டி நீதிமன்றதில் பொறுமையுடன் மாதக் கணக்கில் பல பேர்  காத்து கிடக்கிறார்கள், நிதிமன்றத்தின் தீர்ப்புக்கு காத்திருக்கும் காலம் வாழ்க்கையில் கொஞ்சம் கூட காத்திருப்பதில்லையே! உங்கள்  வாரிசுகளின்  எதிர்கால வாழ்க்கையை அடுத்தவர்கள் தீர்மானிக்கும் நிலை வருவது சரியா ? அந்த வாய்ப்பை நாம் கொடுக்கலாமா?

               பெற்றோர்கள் தங்களது மகன் மகளுக்கு அன்பு, பண்பு, பொறுமை, ஒழுக்கம், விட்டு கொடுக்கும் மனப்பக்குவம், கல்வி,  வாழ்க்கை நெறிமுறைகளையும், குடும்ப நடத்துவதற்கான அடிப்படை வழிமுறைகளையும், இளவயது முதல் கற்றுத் தராமல் இருக்கும் பெற்றோர்கள் தான் இதற்க்கு முதல் காரணம்.

               செல்வம் சேர்பது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் ஏன்ன தேவை என்பதை மறந்து விடுகிறோம்,செல்வம் சேர்பதில் ஆர்வம் காட்டும் நாம் இதை சேர்க்க தவறிவிடுகிறோம், இது தான் வாழ்க்கை என்ற கட்டிடத்திற்க்கு அஸ்திவாரம்,  அஸ்திரம், அதை எடுக்க, கொடுக்க மறந்து விடுகிறோம், தான் பட்ட கஷ்டம் தனது மகள் மகன் அனுபவிக்க கூடாது என சொல்லி அடிப்படை கஷ்ட நஷ்டங்களை சொல்லாமல், தெரிந்து கொள்ள வாய்ப்பு கொடுக்காமல் அடுத்தவனிடம் ஒப்படைத்தால், அவன், அவளை புரிந்து கொள்ளும் முன் பிரிவு ஏற்பட்டு விடுகிறது.

               ஒவ்வொருத்தரும் தன் பக்கம் உள்ள கருத்துக்களை மட்டும் நீயாயமாக  பேசி அடுத்தவனிடம் குறைகளை காட்டி பிரிந்து  செல்ல வழி தேடுகிறார்கள், இவர்களை அறிவுரை கூறி சேர்த்து வைக்கவும் பெரியோர்கள் முயற்சி செய்வதில்லை, முயற்சி செய்தாலும் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுபவர்களையும் காணமுடிகிறது.

               சிறு தோல்விகளையும், கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ளாத சமூகத்தை, சந்ததிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், Fast food காலத்தில் எல்லாமே Fast ஆக வேண்டும் என்ற கோணத்தில் தான் இயங்குது உலகம், உங்கள் மகளுக்கோ, மகனுக்கோ, தொலைகாட்சி சீரியல்கள் தான் ஆலோசனை வழங்கி வருகிறது,  வரதட்சணை, கோபம், வில்லத்தனம், எனஅனைத்து தவறான விசயங்கள் எளிதில் பற்றிக்கொள்கிறது,

               எனவே பெற்றோர்களே ஆடம்பரம், அழகு, தற்பெருமை நமக்கு முக்கியமல்ல, கல்வியோடு, நல்ல ஒழுக்கம், அன்பு, உழைப்பு, பொறுமை, பொறுப்பு, மரியாதை, மன்னிக்கும் குணம் தான் அவசியம், அது தான் தனது சந்ததிகளை வளர செய்யும் முதல் சொத்து என்பதை மனதில் கொள்ளவேண்டும், அதையே கற்றுக்கொடுங்கள், வாழ்க்கை வளமாகும்!

வாழ்க வளமுடன்!

மக்கள் நல்லுறவு