Sunday, June 19, 2016

இன்று நான் நாளை நீ

மக்கள் நல்லுறவு

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மாதவன்.

மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.

மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார்.

வருடங்கள் கடந்தன.

ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது.

மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார்.

தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள்.

“உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “

இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை.

காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.

இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன், எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.

மகன் ஆச்சரியப்பட்டான்.

“பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன்.

ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை.

இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.

“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன்.

இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும்.

ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன்.

அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.

வாழ்க்கையில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன.


மக்கள் நல்லுறவு

Thursday, June 16, 2016

கோவை



மக்கள் நல்லுறவு

இன்று கோவைக்கு வயது 211

கோவை உருவான நாள்:

சாலை மற்றும் தொழில் ரீதியாக கோவையின் முக்கியத்துவம் உயர்ந்ததை தொடர்ந்து 24.11.1804 அன்று கோவையை மாவட்ட தலைநகரமாக ஆங்கிலேயர் ஆட்சி அறிவித்தது. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவான நொய்யல் ஆறு கோவையின் பல பகுதிகளில் பாய்ந்தோடியதால் பல குளங்கள் உருவாக்கப்பட்டன. கோவையை சுற்றியுள்ள நிலங்களின் பாசன வசதிக்காக குளங்கள், தடுப்பு அணைகள் அமைக்கப்பட்டன.

கோவை மாவட்ட தலைநகரமாக தரம் உயர்த்தப்பட்ட அடுத்த சில ஆண்டுகளில் கோவை நகராட்சியாக உயர்த்தப்பட்டது. பருத்தி நெய்தலுக்கான இதமான தட்பவெப்பநிலை நிலவியதால் கோவையில் முதன் முதலாக 1878–ம் ஆண்டு ஸ்டேன்ஸ் நிறுவனம் முதல் மில்லை தொடங்கியது. அதைதொடர்ந்து கோவையில் ஏராளமான மில்கள் உருவாயின. இதன் மூலம் கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற அந்தஸ்தை பெற்றது. கோவையில் ஏராளமான மில்கள் உருவானதால் தொழில் வளம் பெருகி அடிப்படை தொழிற் கட்டமைப்புகள் மேம்பட்டன. 1921 முதல் 1936 வரை கோவை நகராட்சியின் சேர்மனாக பதவி வகித்த திவான் பகதூர் சி.எஸ். ரத்தினசாரதி காலத்தில் கோவையில் வணிக நிறுவனங்கள் அமைவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

சிறுவாணி குடிநீர் திட்டம்
அவர் காலத்தில் தான் சிறுவாணி குடிநீர் திட்டம், பைக்காரா நீர் மின்சார திட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டன. மேலும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. பாலங்கள், பள்ளிக் கூடங்கள் உள்பட அனைத்து விதமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டன.

கோவையின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட தொழில் அதிபர்களான ஜி.குப்புசாமி நாயுடு, பி.எஸ்.ஜி. சகோதரர்கள், பொள்ளாச்சி மகாலிங்கம், வி.ரங்கசாமி நாயுடு, பி.ஏ.ராஜு செட்டியார், வின்சென்ட், பி.ரங்கசாமி நாயுடு, ஜி.டி.நாயுடு, வி.எஸ்.செங்கோட்டையா, ஆர்.கே.எஸ். சகோதரர்கள், கோபால் நாயுடு உள்பட ஏராளமான தொழில் முனைவோர்கள் அனைத்து துறையிலான தொழில்களையும் தொடங்கி கோவையை தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் முக்கிய வர்த்தக மையமாக்கினார்கள் என்றால் மிகையாகாது.

வர்த்தக மையம்
ஆர்.கே.சண்முகம் செடடியார் தான் முதல் முதலாக கோவையில் இந்திய தொழில் மற்றும் வர்த்தகசபையை உருவாக்கினார். அவர் தான் பின்னாளில் இந்தியாவின் முதல் நிதி மந்தியாகவும் ஆனார். கோவையின் முதல் எம்.பி.யான டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் தான் இந்தியாவில் முதல் முதலாக கூட்டுறவு அமைப்பை உருவாக்கினார்.

சுதந்திரத்திற்கு பின்னர் டெக்ஸ்டூல் பாலசுந்தரம், ஜி.கே. தேவராஜுலு, ஆர்.வெங்கடசாமி நாயுடு, ஜி,கே.சுந்தரம், பி.ஆர்.ராமகிருஷ்ணன், எல்.ஜி. குடும்பத்தினர், சக்தி குரூப் உள்பட பலர் தொழில் அதிபர்கள் கோவையை ஒரு வர்த்தக மையமாக உலகிற்கு எடுத்துக் காட்டினார்கள். கோவையின் மற்றொரு முக்கிய அம்சம் சிறந்த கல்வி நிறுவனங்களும், மருத்துவ மனைகளும் ஆகும். கோவை மாவட்ட தலைநகரமாக உருவாகி இன்றுடன் 211 ஆண்டுகள் ஆவதால் கோவை தினத்தை கோவை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்.


மக்கள் நல்லுறவு

Tuesday, June 14, 2016

மோட்டார் வாகனச் சட்டம்


மக்கள் நல்லுறவு பகிர்கிறது 

மோட்டார் வாகனச் சட்டம்-

நாம் ஒரு புது வாகனத்தை வாங்கும்போது எந்தப் பிரச்னைகளும் வராதபடி, பதிவுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் டீலர் நமக்குக் கொடுத்து விடுகிறார்.

நாம் நேரடி உரிமையாளர் ஆகிவிடுகிறோம். ஆனால், பழைய வாகனத்தை வாங்கும் போது எப்படி உரிமையை மாற்றிக்கொள்வது? ஆர்.சி. புத்தகம் இல்லாமல் அதை வாங்கலாமா?

ஒரு வீட்டையோ, காலி மனையையோ விற்பவர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வாங்குபவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, விற்பனை செய்ததற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதுடன் அவரது வேலை முடிந்துவிடுகிறது.

ஆனால், மோட்டார் வாகனச் சட்டப்படி தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட பழைய கார், பைக் மற்றும் இதர வாகனங்களை விற்கும்போதும் வாங்கும்போதும் நாம் பதிவு அலுவலகத்துக்குச் செல்வதில்லை. அதே சமயம், அந்த விற்பனை பற்றி மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டியது இருவருடைய கடமை ஆகிறது.

ஒருவர் தனது காரை பதிவு செய்யப்பட்ட அதே மாநிலத்துக்குள் இருப்பவருக்கு விற்பனை செய்திருந்தால், 14 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட்ட நபரின் பெயர் மற்றும் முழு விலாசத்தையும் படிவம் 29&ல் பூர்த்தி செய்து, மோட்டார் வாகனப் பதிவு அலுவலகங்களுக்கு அக்னாலெட்ஜ்மென்ட் அட்டையுடன் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். அதன் நகலை நம்மிடமிருந்து வாகனத்தை வாங்கியவருக்கும் அனுப்ப வேண்டும். இது விற்பனை செய்பவரின் கடமை.

ஒரு வேளை நாம் வெளி மாநிலத்தில் இருப்பவருக்கு வாகனத்தை விற்பனை செய்து இருந்தால், விற்பனை செய்த 45 நாட்களுக்குள் எந்தப் பதிவு அலுவலக எல்லைக்குள் வாகனத்தை வாங்கியவர் இருக்கிறாரோ, அந்த அலுவலகத்துக்கு நாம் தகவல் தரவேண்டும்.

அப்படி வெளி மாநிலத்தில் விற்பனை செய்யும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ‘தடை இல்லாச் சான்று’ (No objection Certificate) அல்லது தடையில்லா சான்றுக்கு மனு செய்து 30 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை வைத்து அனுப்ப வேண்டும்.

வாகனத்தை வாங்கியவர், அவர் குடியிருக்கும் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில், எங்கு அந்த வாகனத்தைப் பயன்படுத்துகிறாரோ அந்த மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்தில் பதிவுப் புத்தகம், இன்ஷுரன்ஸ் அதற்குரிய கட்டணம் ஆகியவற்றுடன் வெளி மாநிலமாக இருப்பின், தடையில்லா சான்று அல்லது அந்தச் சான்றுக்கு மனு செய்து 30 நாட்களுக்குள் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்-களுடன் மனு செய்து, ஆர்.சி. புத்தகத்தை தங்கள் பெயருக்கு 30 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இப்படி வாங்குபவரோ, விற்பவரோ தங்கள் கடமைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்யாவிட்டால், மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் செலுத்தக் கடமைப்பட்டவராவர்.

வாகனத்தை வாங்கியவர் பெயர் மாற்றம் செய்யாமல், பழைய உரிமையாளரின் பெயரிலேயே வாகனத்தை ஓட்டி ஏதாவது விபத்து ஏற்பட்டால், அதற்கு இன்ஷுரன்ஸ் இருந்தாலும் இழப்பீடு தொகை பெற முடியாது.

புதிய உரிமையாளரின் பெயர் ஆர்.சி.புத்தகத்தில் மாற்றப்பட்டதும் அதன் நகலை இன்ஷுரன்ஸ் கம்பெனியில் கொடுத்து, ஏற்கெனவே பழைய உரிமையாளர் பெயரில் உள்ள இன்ஷுரன்ஸ் பாலிசியையும் குறிப்பிட்ட கட்டணம் (டிரான்ஸ்ஃபர் பீஸ்) செலுத்தி அவர் பெயருக்கு மாற்றிவிட்டால் சட்டப்படி எந்தச் சிக்கலும் வராது!

ஒருமுறை பதிவு செய்த வாகனத்தை மறு பதிவு செய்யமுடியுமா?

ஒருமுறை வாகனத்தைப் பதிவு செய்து விட்டால், மீண்டும் பதிவுசெய்து புதிய எண் பெற முடியாது, அந்த வாகனத்தின் பதிவுக் காலம் காலாவதியாகும்போது, அதைப் புதுப்பிக்க மட்டும்தான் முடியும் எத்தனை உரிமையாளர்கள் மாறினாலும் மறு பதிவு செய்ய முடியாது. அந்த வாகனம் முழுவதும் பயன்படுத்த முடியாத காலம் வரையிலும் அதற்கு ஒரே பதிவு எண்தான்.

உரிமையாளரின் பெயர், விலாசம் மாறலாம். இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு எந்த மூலைக்குச் சென்றாலும் நமக்கு அதே பதிவு எண்தான். ஆனால், நாம் ஒரு மாநிலத்தில் பதிவு செய்த வாகனத்தை வேறு மாநிலத்தில் 12 மாதங்கள் வரைதான் பயன்படுத்த முடியும்.

அதற்கு மேல் பழைய பதிவு எண்ணுடன் பயன்படுத்த முடியாது, அப்படிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். நாம் சென்னையில் பதிவு செய்த வாகனத்தில் பெங்களூர் சென்று 12 மாதங்களுக்கு மேல் அங்கு பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்தும்போது கர்நாடகப் பதிவு " ரெஜிஸ்ட்ரேஷன் " கட்டாயம் செய்ய வேண்டும்!

மக்கள் நல்லுறவு

Monday, June 13, 2016

வயிற்றுப் புழு


மக்கள் நல்லுறவு பகிர்கிறது

வயிற்றுப் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை.
இந்த புழுக்கள் ஓர் ஒட்டுண்ணிகள், இந்த புழுக்கள் உணவுகள் மூலமாகவும், சுகாதாரமற்ற குடிநீரின் மூலமாகவும், உடலினுள் நுழையும். அதுமட்டுமின்றி நன்கு சமைக்காத உணவுகள் மூலமாகவும் இவை நுழையும்.
வயிற்றில் புழுக்கள் இருந்தால், அடிவயிற்றில் வலி, பசியின்மை, வயிற்றுப்போக்கு, மலப்புழையில் அரிப்பு, தூக்கமின்மை, குமட்டல், எடை குறைவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
* வெங்காய சாறு வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க வல்ல ஓர் சிறப்பான பொருள்.
அதற்கு வெங்காய சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகள் அழித்து வெளியேறிவிடும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.
* மாதுளையின் தோலை உலர வைத்து, அரைத்து பொடி செய்து, அதில் சிறிது தேன் கலந்து உட்கொண்டு வர, வயிற்றில் உள்ள புழுக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, அவை அழிந்து வெளியேறும். மேலும் பசியின்மையால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்ல மருந்து.
* தினமும் பச்சை பூண்டை 3-4 உட்கொண்டு வர வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் பூண்டை பச்சையாக சாப்பிடவுடன் சற்று வெது வெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும்.
* ஒரு டம்ளர் மோரில் 1 டேபிள் ஸ்பூன் பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து, அவ்வப்போது குடித்து வர, வயிற்றில் புழுக்கள் வளர்வதைத் தடுக்கலாம். இதனை வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் நல்லது. குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.
* எலுமிச்சையின் விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, 1 டம்ளர் நீரில் கலந்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை குடித்து வர, குடல் புழுக்களை முற்றிலும் வெளியேற்றி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.....


மக்கள் நல்லுறவு

பிறப்பு இறப்பு சான்று



மக்கள் நல்லுறவு பகிர்கிறது


ஒரு பிறப்பு அல்லது இறப்பினை  30 நாட்களுக்குள்  பதிவு செய்ய வேன்டும், தவறினால் ஒராண்டிற்குள் பிறப்பு இறப்பு அலுவலர் கால தாமத்திற்கான காரனத்தினை ஏற்று பதிவு செய்துக்கொள்ளலாம்   ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை  நீதிமன்ற உத்திரவு மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு  பதிவு செய்ய  பதிவு செய்ய முடியும்



பிறப்பு- இறப்பு எங்கு பதிவு செய்வது

பிறப்பு- இறப்பு பதிவாளர் என்பவர்

கிராம ஊராட்சியை பொறுத்த வரை வட்டாட்சியர்
(கிராம நிர்வாக அலுவலர் ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்குவார் பின்னிட்டு வட்டாட்சியர்)

பேரூராட்சி பகுதிக்கு அதன் செயல் அலுவலர்

நகராட்சி பகுதிக்கு ஆணையாளர்
(சுகாதர ஆய்வாளர்  - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்குவார்)

மாநகராட்சி பகுதிக்கு ஆனையாளர்
(சுகாதர ஆய்வாளர் - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்குவார்) 

கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறப்பினை பதிவு செய்து மருத்தவரே சான்றிதழ் வழங்க அரசாணை உள்ளது
அரசானை நகல் கிடைத்தௌடன் பதிவிடுகின்றேன்


பிறப்பு இறப்பு சான்றிதழ்களை எங்கு பெறுவது 


பிறப்பு- இறப்பு பதிவாளர் என்பவர் கிராம ஊராட்சியை பொறுத்த வரை வட்டாட்சியர்


(கிராம நிர்வாக அலுவலர் ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார் பின்னிட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நகல் பெற்றுக்கொள்ளாம்)


ஒராண்டு முடிந்த பின்னர் வட்டாட்சியர் சம்பந்தபட்ட கிராமத்திற்கு தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பிறப்பு- இறப்பு பதிவேட்டினை அனுப்பிவிடுவார் நகல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் 


பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி பகுதி பிறப்பு- இறப்பு ஆவணங்கள் நிரந்திரமாக பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அலுவலகத்தில் மட்டுமே இருக்கும் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாது 


பேரூராட்சி பகுதிக்கு அதன் செயல் அலுவலர்


நகராட்சி பகுதிக்கு ஆணையாளர்  (சுகாதர ஆய்வாளர்  - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்குவார்)


மாநகராட்சி பகுதிக்கு ஆனையாளர் (சுகாதர ஆய்வாளர் - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார்) 

நீதிமன்றம்  மூலமாக் உத்திரவு பெற 
ஒரு பிறப்பு அல்லது இறப்பினை  அது நடந்த ஒராண்டு கடந்த பின்பு பதிவு செய்ய  பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு அதிகாரம் இல்லை ஆனால் நீதிமன்ற உத்திரவு மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு  பதிவு செய்ய  பதிவு செய்ய முடியும்நீதிமன்றத்தில் உத்திரவு பெற சம்ந்தபட்ட உள்ளாட்சி அல்லது சார்பதிவாளர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில்  (எந்த அலுவலகத்தில் ஆவணம் உள்ளதோ)  பதிவு இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும் 

பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லதுசேவ் பன்ணி கொள்ளுங்கள்.அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.

பிறப்பு சான்றிதழ் பெற
பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0இறப்பு சான்றிதழ் பெற -http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp
இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சி மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........
கோயம்புத்தூர்  - Birthhttps://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150கோயம்புத்தூர் மாநகராட்சி - Death -https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151
மதுரை மாநகராட்சி - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)
திருச்சி மாநகராட்சி - https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu
திருநெல்வேலி மாநகராட்சி- http://tirunelvelicorp.tn.gov.in/download.html


பிறபபு சாண்றிதழ் திருத்தம் செய்ய வழி

கல்வி சாண்றிதழ்களில் ஒரு பிற்ந்த தேதியும் பிறப்பு சான்றிதழில் ஒரு பிறந்த தேதியும் என்று மாறுபட்ட இரு பிறந்த தேதிகள் பலருக்கு சில காரங்களால் ஏற்பட்டு விடுகின்றது. பிறந்த தேதியை நீருபனம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும் போது (எ.கா பாஸ்போர்ட் விண்ணப்பிக்க) இது பெரிய சிக்கலை உருவாக்குக்கு கின்றது.

கல்வி ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சாண்றிதழ் கொடுத்து விண்ணப்பம் செய்து கல்வி ஆவணங்களில் உள்ள பிறந்த தேதியை திருத்திக்கொள்ளலாம்ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலர் மருத்துவமனை தவறு காரணமான பிழையை மட்டும் மனு செய்து ஆவணங்களை காட்டி திருத்திக்கொள்ளலாம்
பலர் பள்ளியில் சேர்க்கும் போது உரிய வயதை மாற்றி சொல்லி சேர்த்து விடுகின்றார்கள் அல்லது ஏதோ ஒரு தேதியை சொல்லி சேர்த்து விடுகின்றார்கள்.

குறுக்கு வழியில் நீதிமன்றத்தில் பிறப்பு இது வரையில் பதிவு செய்யப்பட வில்லை என்று பொய் சொல்லி பிறப்பினை புதியதாக பதிவு செய்து சான்றிதழ் பெறுகின்றார்கள் ஆனால் இவர்களுக்கு இரண்டு பிறப்பு சாண்றிதழ் இருக்கும் இது ஆபத்தானது எதிர்காலத்தில் பல சட்ட சிக்கல்களை உருவாக்கும்

உரிமையியல் நீதிமன்றத்தில் மனு செய்து பிறந்த தேதியை சரி செய்வது மட்டுமே சரியான பாதுகாப்பன தீர்வு ஆனால் காலதாமதம் ஏற்படும்

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும்?பெயர் இல்லாத பிறப்புச் சான்றிதழால் பயன் இல்லை. குழந்தைக்குப் பெயர் வைத்த பிறகு, அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். அப்போது பெற்றோர் பெயர், குழந்தை பிறந்த தேதி மற்றும் மருத்துவமனை ஆகிய தகவல்களை எழுதி, ‘இந்த பெயரை மாற்ற மாட்டேன்’ என்று பெற்றோர் எழுதிய கடிதம், குழந்தையின் பெயர் இல்லாமல் பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.குழந்தை பிறந்ததுமே பெயரைத் தேர்வு செய்வது இன்னும் நல்லது. விண்ணப்பத்திலேயே குழந்தையின் பெயரைக் குறிப்பிட்டால், முதல்முறையிலேயே குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுவிடலாம்.

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க கால வரம்பு உள்ளதா?இல்லை. எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். ஒருமுறை பதிவு செய்த பெயரை மாற்ற முடியாது.


மக்கள் நல்லுறவு

மக்களுக்கு தெரியாத சட்டங்கள்


மக்கள் நல்லுறவு பகிர்கிறது
1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.


மக்கள் நல்லுறவு