Sunday, May 13, 2018

அந்த நாலு விசயம்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது
*நான்கு நபர்களை புறக்கணி*

🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*

😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*

😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*

💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்             

*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*

🙋🏻‍♂பொறுமை
🙋🏻‍♂சாந்த குணம்
🙋🏻‍♂அறிவு
🙋🏻‍♂அன்பு

*நான்கு நபர்களை வெறுக்காதே*

👳🏻தந்தை
💆🏼தாய்
👷🏻சகோதரன்
🙅🏻சகோதரி

*நான்கு விசயங்களை குறை*

👎🏽உணவு
👎🏽தூக்கம்
👎🏽சோம்பல்
👎🏽பேச்சு

*நான்கு விசயங்களை  தூக்கிப்போடு*

🏃🏻துக்கம்
🏃🏻கவலை
🏃🏻இயலாமை
🏃🏻கஞ்சத்தனம்

*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*

👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

*நான்கு விசயங்கள் செய்*

🌷 தியானம் , யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்

☘☘☘☘☘☘☘☘☘
வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்....

கதை



வாய்ப்பு
மக்கள் நல்லுறவு பகிர்கிறது

குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.

பதிமூன்று வயதில் படிப்பு போச்சு! வீட்டில் ஏழ்மை! தொடர்ந்து பல நாட்களாக பசி! வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு! ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்.

ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார். பையனிடம்,””டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார்.

“ஆஹா…இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது.

குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன். சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்… மகிழ்ந்தான்…

மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.

அதோடு விட்டானா! நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கிய மாமேதை ஷேக்ஸ்பியர்.

மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.

*வாய்ப்புக்களை பயன்படுத்துபவர்கள் தான் உலகினில் வெற்றிகரமாக வலம் வருகின்றனர்*

எனவே வாய்ப்பை வீணாக்கி விடாதிர்கள்!

வாழ்த்து



வாழ்த்து
இன்று நாம் வாழ்த்துக்களை வாயால் சொல்வதில்லை! Whats appல் சொல்கிறோம்! முகத்தை பார்த்து சொல்வதில்லை முகநூலில் சொல்கிறோம், இது விஞ்ஞான வளர்ச்சியாக தெரிந்தாலும்,  மனித நேயம், மனித குணத்திற்க்கு இது வளர்ச்சி அல்ல வீழ்ச்சி!

அன்பை பரிமாற, உணர்வை பரிமாறும் முறையில் வீழ்ச்சி! மகிழ்ச்சியில் வீழ்ச்சி!

 கண்களால், உணர்வுகளால்,  பரிமாறிக்கொள்ளும் அன்பு தான் மகிழ்ச்சி! வளர்ச்சி!

Thursday, May 10, 2018

கோவை மக்கள் நல்லுறவு நலச்சங்கம் சார்பாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்.

கோவை மக்கள் நல்லுறவு நலச்சங்கம் சார்பாக  நில வேம்பு கசாயம் வழங்குதல், மருத்துவ ஆலோசனை, நோய் தடுப்பு நோட்டீஸ் விநியோகம், 44 மற்றும் 45 வார்டுகளில் இதன் மூலம் சுமார் 4 ஆயிரம் நபர்கள் பயன் அடைந்தனர்.