Thursday, January 12, 2017

சிந்தித்துப்பார்!

நீ பெரியவன், நான் பெரியவன்,
நான் இந்த கட்சிக்காரன், நீ அந்த கட்சி, நீ அந்த நடிகனின் ரசிகன், நான் இந்த நடிகனின் ரசிகன், தொண்டன்னு சொல்லியும், நீ இந்த சாதி, மதம் அப்படின்னு சொல்லி யாரோ வாழ நாம்  பக்கத்திலிருக்கும் மனிதர்களை பகைத்து விரோதத்தை வளர்த்து நாம்  வாழ்ந்து வருகிறோம்,

மனிதனை நேசிப்பதில்லை

உண்மையில் உனக்கு பிரச்சனை, ஆபத்து, விபத்து, கஷ்டம் என்றால் அவசர உதவிக்கு அருகிலிருக்கும் நண்பர்கள், உறவினர்கள் அறிமுகமில்லா மனிதர்கள் கூட உதவுவார்கள்

ஆனால் உன் தலைவன், நடிகன், கட்சி இவர்கலெல்லாம்  வரமாட்டார்கள், காரணம் உன்னை போல் தொண்டன், ரசிகன் முலம் உயர்ந்தவர்கள், உன் தேவைக்கு, அவசரத்திற்க்கு  பயன்படமாட்டார்கள், செத்தபின்பு ஒருவேளை மலர் வளையம் வைக்க வருவார்கள் (விளம்பரம்)

இவர்களுக்காக அருகில் உள்ள மனிதர்களை பகைக்காதே! அது உன் தோல்விக்கு வழிவகுக்கும்,


மனிதனை மனிதனாக மதி, மனிதனை நேசி, மனிதநேயத்துடன் வாழ கற்றுக்கொள், மனநிறைவு பெற்று மன மகிழ்சியுடன் வாழ்வாய்வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment