Saturday, May 19, 2018

மாற்றிக்கொள்

நம் மனித சமுதாயத்தில் ஜாதி மதத்தை கொண்டும், பதவி கட்சியை கொண்டும் ஒருவனை ஒருவன் அழித்துவிட நினைக்கிறான் 

உலகம் முழுவதும் அப்படிபட்ட எண்ணம் கொண்டவர்கள் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறார்கள், ஆனால் இறுதியில் அவமானப்பட்டு, அடிபட்டு மிதிபட்டு நாயை விட  கேவலமாக செத்துக்கொண்டு இருக்கிறான் 

ஒருவன் தவறு செய்தால் அவனை தண்டிக்க சட்டம் இருக்கிறது, அதைவிட பெரிது நம்மை படைத்த இறைவன் இருக்கிறார் அவர் பாத்துக்கொள்வார் என்ற நம்பிக்கை வேண்டும், 

ஒருவன் மற்றவனை குறை சொல்ல எந்த அருகதையும் அவனுக்கு கிடையாது, இறுதியில்  குறை கூறுகிறவனும் எதவாது ஒரு வகையில்  தவறு செய்தவனாக உலகிற்க்கு காட்டப்படுவான், அதேசமயம் ஒருவனுடைய  தவறை   மறைக்க கூடாது, அதை நீயாயப்படுத்தி பேசக்கூடாது, தவறுக்கும் துணைபோகக் கூடாது.

கொஞ்ச நாளாக ஒருவர் மற்றொருவரை படுமோசமாக கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றனர் அவர்கள் விமர்சனத்தை படிக்கவே மனம் கூசுகின்றது அந்தளவுக்கு தரம்தாழ்ந்து பதிவிடுகிறார்கள், அதை பகிர்ந்தும் வருகிறார்கள், வேண்டாம் இந்த செயல், மனிதஇனம்  அமைதியாக சாந்தியும் சமாதானமாக, வாழத்தான் விரும்புகிறது, அதற்கேற்ப முயற்சி செய்யுங்கள், அடுத்தவர் மனம் நோகும்படியான எந்த செயலுக்கும் துணை போகாதீர்கள், அதை செய்யாதீர்கள்.

உங்களை சுற்றியுள்ள சூழ்நிலையை மாற்றுங்கள், நட்பை பலப்படுத்துங்கள், இனியாவது இறைவனுக்கு பயந்து நடந்து  கொள்ளுங்கள், மனித நேயத்தை காட்டுங்கள்! 

எவரால் மனித இனத்திற்க்கு அதிக நன்மை ஏற்படுகிறதோ அவரே மனிதரில் மிக சிறந்தவர்! 

அன்புடன் கோவை மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment