Wednesday, May 9, 2018

மழை நீர், கழிவு நீர் சாக்கடை நீர் குடியிருப்புகளுக்கு புகாமல் தடுக்க நிரந்தர தீர்வு வேண்டி கோரிக்கை மனு.


05.05.2018
பெறுநர்
                மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,
                மாண்புமிகு முதலமைச்சரின் தனிப் பிரிவு,
                சென்னை 

பொருள் : நிரந்தர தீர்வு வேண்டி கோரிக்கை மனு.

அய்யா
                வணக்கம். எங்களது பகுதி கோவை மாநகராட்சி வார்டு 44/ புதிய எண் 18, வடக்கு மண்டலம், கவுண்டம்பாளையம் சங்கனூர் எல்லை, கோவை 30 ,(கருப்புசாமி நகர், தேமையன் வீதி, ராஜு நகர், மாணிக்க வாசநகர் குடியிருப்புகளை உள்ளடக்கிய பகுதி, ) மேட்டுப்பாளைய சாலை சங்கனுர் சாலையிலிருந்து தாழ்வாக மாற்றப்பட்ட பகுதி, இந்த பகுதியில் மழை பெய்தால் வீடுகளுக்குள் மழைநீர், சாக்கடை நீர் புகுந்து விடுகிறது, இதில் கருப்புசாமி நகர் அதிக பாதிப்படைகிறது, இரவு நேரத்தில் மழை பெய்தால் மக்கள் படும் துன்பத்திற்க்கு அளவே இல்லை.

                ஏற்கனவே இருந்த மாமன்ற உறுப்பினர்கள் பல முறை முறையிட்டும், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை வற்புறுத்தியும் அவர்களது நடவடிக்கையால் அன்றைய தேவை பூர்த்தியாகிறது, மின் மோட்டார் அமைத்து நீரை வெளியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மழை வரும் பொழுது மின்சாரம் தடைபடுகிறது, மோட்டாரை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது, மழைநீர், சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

                எனவே இதற்க்கு நிரந்திர தீர்வு காணும் வகையில் குழாய்களை பெரிது படுத்தியும், கழிவு நீர், மழைநிர் மாணிக்க வாசநகரில் உள்ள பெரிய குழாய்  குடியிருப்பு வழியாக கொண்டு செல்ல ஏற்பாடும், மழைநிர் வடிகாலை அமைத்து தரும்மாறு அன்புடன் இந்த பகுதி குடியிருப்பு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி

இப்படிக்கு



குடியிருப்பு பகுதி மக்கள் சார்பாக,
இ.சுக்குருல்லா பாபு
நகல்
உயர் திரு கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், கோவை.

No comments:

Post a Comment