தலையில்கணம்
கொண்டவனா நீ!
நட்புக்கு
இலக்கணம் நீ!
சேர்ந்தே
உழைக்கிறாய்!
சேராமல்
இருக்கிறாய்!
தன்னம்பிக்கைக்கு
உதாரணம் நீ!
ஆம் நீ தினம்
தினம் தற்கொலை செய்து கொள்கிறாய், அடுத்த நிமிடமே
அதை மறந்து மறுபடியும் பணிக்கு தயராய் இருக்கிறாய்,
ஆயிரம் பேர்
அசிங்கம் செய்தாலும் அமைதியாய் இருக்கிறாய்!
கல்லும் முள்ளும்
கட்டையும் தான் உனக்கு படுக்கை!
சலிக்காமல்
பலரின் பாரத்தை சுமக்கிறாய், இந்த பாரதத்தின்
பெருமையாய் திகழ்கிறாய்!
நீண்ட ஆயூளுக்கு
நேர் வழி காட்டுகிறாய், நீ மட்டும் தடம்
புரண்டால் மக்களின் தலையெழுத்து மாறிவிடும்,
இந்த இரும்பிலும்
இதயம் உள்ளதே!
ஏன் தண்டவாளமே!
நீ வாழ்க வளமுடன்! மக்கள் இருப்பார்கள் நலமுடன்!
No comments:
Post a Comment