Tuesday, November 22, 2016

விமர்சனம்

விமர்சனம்
மக்கள் நல்லுறவு

விமர்சனங்கள் என்பது சுதந்திரம் அதை ஏற்க மனது வேண்டும் இல்லை என்றால் பொது_வாழ்க்கை என்பதற்கு அர்த்தமே இல்லை..

அதில் பொறுமை ஒரு அற்புதமான ஆயூதம், தரமான வார்த்தைகளில் விமர்சனங்களை வைக்க இயலாத போதே நாம் மனிதராக_வாழும்_தகுதியை இழந்துவிடுகிறோம்.

நாம் விமர்சனத்திற்க்கு விமர்சனம் செய்ய தகுதி உடையவராக முதலில்  மாற்றிக் கொள்ளவேண்டும், பொருத்தமான இடத்தில் பொருத்தமான பதிலை அளிக்க கற்றுக்கொள்ளவேண்டும், தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யாதே! அதற்க்கு உனக்கு யார் அனுமதி  அளித்தது?

தரம் தாழ்த்தி அடுத்தவனை விளம்பரம், விமர்சனம் செய்வதில் உனக்கு என்ன பயன் யோசி, அடுத்தவனுக்கு வக்காளத்து வாங்கி இங்கு இருப்பவர்களை உன்  நண்பர்களை பகைத்து என்ன பயன்?

உன் பார்வைக்கு நல்லதாய் தெரிந்தது அவன்  பார்வைக்கு இருட்டு, உனக்கு வெளிச்சமாய் இருக்கும் சூரியன் மறுபக்கம் உள்ளவனுக்கு இருட்டு அது தான் விமர்சனம் (வாழ்கை) செய்யும் விமர்சனத்தால் அதனை ஏற்று அவர் சிந்தித்து செயல்படும்படி கருத்து இருக்கவேண்டும்.

உமது கருத்து விமர்சனம் பகையை வளர்க்கும்படி இருந்தால் பொது வாழ்க்கைக்கு நீ லாயிக்கில்லை மரத்தடியும், திண்ணைப் பேச்சு விமர்சனமும் மறைந்து காகிதத்திலும், வாட்ஸ் ஆப்  முகநூலிலும் இன்று விமர்சனம் வருகிறது.

மாற்றம் எதுவாயினும், உமது நடவடிக்கை, செயல், நோக்கம் எதுவாயினும்
மனிதனை மனம் நோகவைக்காதே அதுவும் ஒரு வகை பாவம்!

விமர்சனம் வந்தால் உமது தரப்பு நியாயம் இருந்தால் விளக்கம் கொடு, ஓடி ஓளியாதே, எடுத்த முடிவு சரியென்றால் துணிந்து நீல் துன்பம் நீங்கும்.

விமர்சனம் முலம்  விளக்கம் கொடு!  விளம்பரம் தேடாதே!  விசயத்தை சொல்லு தட்டிக்கொடு! தப்பை சுட்டிக்காட்டு! கொட்டி கொண்டு இருந்தால் நி ஒரு தேள்!

என்றும் நட்புடன்

மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment