Thursday, August 4, 2016

உன்னையறிந்தால்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

Superb Motivation Message.  தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்?

என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான்.

கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார். அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.

அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான். நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.

மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.

குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார்.

அதேபோல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே! உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.

கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!

தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது!
நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும்.

ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!

உங்களுக்கு நிகர் நீங்களே! யாரும் உங்களுக்கு இணை கிடையாது!

மக்கள் நல்லுறவு 

பாவங்கள்

பாவங்களின் 42 வகை
வள்ளலார் பாவங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.
அவை வருமாறு:

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.
6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.
8. தருமம் பாராது தண்டிப்பது.
9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.
10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.
11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசம் செய்வது.
14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.
15. வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.
16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.
17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.
19. நட்டாற்றில் கை நழுவுவது.
20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.
21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.
22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.
23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.
24. கருவைக் கலைப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.
27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.
28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.
30. ஊன் சுவை (மாமிசம்) உண்டு உடல் வளர்ப்பது.
31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.
33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.
34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.
35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.
36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.
37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.
38. சிவனடியாரைச் சீறி வைவது.
39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.
41. தந்தை தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.

42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

தொப்பை குறைய

மக்கள் நல்லுறவு பகிர்கிறது
நீண்ட காலமாக தொப்பையைக் குறைக்க முடியாமல் தினறுகிறீர்களா? தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருகிறீர்களா? அப்படியெனில் அதோடு சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஒரு ஜூஸ் குடித்துவிட்டு தூங்கினால் தொப்பை விரைவில் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்… இஞ்சி, கொத்தமல்லி, எலுமிச்சை மற்றும் பல பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸை தூங்குவதற்கு முன் குடிக்கவும்.

ஏனெனில் இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களில் உள்ள சக்தி வாய்ந்த மருத்து குணங்களால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் விரைவில் கரையுமாம்.

வெள்ளரிக்காய்: தொப்பையைக் குறைக்க வேண்டுமெனில் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது.

அதிலும் ஒரு முழு வெள்ளரிக்காயில் 45 கலோரிகள் தான் உள்ளது. எனவே இதனை சாப்பிடுவதில் எவ்வித பிரச்சனையும் நேராது.

கொத்தமல்லியில் கலோரிகள் குறைவாகவும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், அது உடலை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளும்.

எலுமிச்சை எலுமிச்சையில் உள்ள…

சிட்ரிக் ஆசிட், கொழுப்புக்கள் உடலில் சேராமல் தடுப்பதோடு, தேங்கியுள்ள கொழுப்புக்கள் எளிதில் கரைந்து, நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றிவிடும்.

இஞ்சி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, மலச்சிக்கலைத் தடுத்து, கொழுப்புகளை கரைக்கும். எனவே உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள பொருள், கொழுப்புகளை விரைவில் கரைத்து, தொப்பையைக் குறைக்க உதவும்.

கற்றாழை ஜூஸ் கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ ராடிக்கல்களின் வளர்ச்சியைக் குறைத்து, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, ஆற்றலை அதிகரித்து, தேங்கியுள்ள கொழுப்புக்களை கரையச் செய்யும்.

ஜூஸ் செய்முறை:
வெள்ளரிக்காய் – 1
கொத்தமல்லி – 1 கட்டு
எலுமிச்சை – 1 துருவிய
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 டம்ளர்

மேற்கூறிய பொருட்களை சாறு எடுத்து, தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால், உங்கள் தொப்பை விரைவில் குறைவதை காணலாம்.


மக்கள் நல்லுறவு

வாசி யோசி

மக்கள் நல்லுறவு

உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது

மறைந்த தலைவர்கள் உயிர்பெறுவார்கள், (விளம்பரத்திற்க்கு மட்டும்) இனி
துங்கியவன் எல்லாம்  முழிப்பான், ஒதுங்கி இருந்தவர்கள்  ஓடி வருவார்கள்.

பத்திரிக்கை, தொலைகாட்சியில் கருத்துக்கணிப்பு என சொல்லி ஜோசியம் சொல்வார்கள்.

மக்கள் எல்லாம் தெய்வமாக தெரிவார்கள், பண மழை பொழியும், பொய்களால்  பூ மாலை காதில் வைக்கப்படும், உஷார், நீ எதற்க்கும் அடிமையாகிவிடதே! ஏமாந்து விடாதே!

அன்று எதிர்ப்பை காட்ட போராட்டம், ஆர்பாட்டம், இன்று ஆர்ப்பாட்டம் போராட்டம்,திட்டம் வாக்குறுதி  எல்லாம்  கட்சி வளர, விளம்பரம் தேட மட்டும் பயன்படுத்திக்கொள்கின்றனர், நிரந்தர தீர்வு வெற்றி கிடைப்பதில்லை ஏன்? எல்லாம் சடங்காகிப் போனது.

பதவி என்பது  தனி மனிதனின் வாழ்க்கை தரத்தை மட்டும் உயர்த்தவா?
இல்லை மக்களின் தேவை, சேவை மற்றும் பயன்பாட்டிற்க்கா?

ஆக மொத்தம் தமிழ்நாட்டில் தேர்தல் என்ற தோட்டத்தை ஐந்து வருடம் குத்தகைக்கு எடுத்தவன் மட்டும் நல்ல வாழ்கிறான்.

பதவி என்பது மக்களுக்கு நல்லதை செய்வதற்க்கு உதவிக்கு மட்டுமே!

ஆள் ஆளூக்கு ஆயீரம் கருத்தை சொல்லுவான் நீ சுயமாக யோசி!
நடந்த ஆட்சி, நடக்கின்ற ஆட்சி, பதவியில் இருந்தவர்கள் செய்த செயல், துரோகம், நன்மையை அலசிப்பாருங்கள்.

இதற்க்கு முன் வாய்ப்பு வழங்கியதையும் அதை அவர்கள் பயன்படுத்திய விதம் பற்றியும் புதியவர்களுக்கு வாய்ப்பு, போன்றதை சிந்தித்துப் பாருங்கள்.
 களத்தில் இறங்கி மக்களுக்கு வேலை செய்பவரா?
காரியம் முடிந்தவுடன் கண்ணால் காண முடியாதவரா?

உன் பகுதியை இவரால் வளமாகும் என்ற நம்பிக்கை உன் மனதில் தோன்றினால் அவர்களுக்கு ஆதரவு கொடு, அன்பை கொடு.


மக்கள் நல்லுறவு

Tuesday, August 2, 2016

நேதாஜி நகர்

கோவை மக்கள் நல்லுறவு

44ம் வார்டு, நேதாஜி நகர், நல்லாம்பாளைய சாலையில் குப்பைகள், கட்டிட கழிவூகள் கொட்டி பாதையை மூடி விட்டனர், சுகாதாரக் கேடு மற்றும் சமூக விரோதிகள் நடமாடும் பகுதியாக மாறிவிட்டது, இது சம்மந்தமாக மக்கள் நல்லுறவிடம் நேதாஜி நகர் குடியிருப்பு மக்கள் புகார் அளித்தனர்.

அதன் பேரில் சம்மந்தப்பட்ட துறைகளுக்கும், மாமன்ற உறுப்பினருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது, ( 7/4/16)  புகார் மனு மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் அளிக்கப்பட்டது, மேலும்  பாதை வேண்டி இரண்டாவதாக (28/7/16) கடிதம் அனுப்பட்டது.

மேற்படி ஒரு வாரகாலத்திற்க்குள் குறை தீர்க்கபடாத பட்சத்தில், மக்கள் நல்லுறவு, நேதாஜி நகர் மக்களுடன் இணைந்து நமக்கு நாமே! அடிப்படையில் களப்பணி செய்ய தீர்மானித்து இருந்தது.

நேற்று 31/7/16 சம்மந்தப்பட்ட இட உரிமையாளரிடம் பேசி அவர்களது முயற்சியால் பாதை சுத்தப்படுத்தி பொது மக்கள் பயன்பாட்டிற்க்கு தரப்பட்டது.

மக்கள் நல்லுறவுக்கு "நேதாஜி நகர் மக்கள் நன்றி கூறினர்கள்".

இதற்க்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி!


தைராய்டு

தைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

கழுத்திற்கு நடுவில் உள்ள ஓர் சுரப்பி தான் தைராய்டு. இந்த சுரப்பி சுரக்கும் ஓர் ஹர்மோன் தான் தைராக்ஸின். இது தான் உடலின் வெப்பநிலை, உடல் எடை, மெட்டபாலிசம் போன்றவற்றை சீராக பராமரிக்கவும், உடலுக்கு வேண்டிய ஆற்றலை உற்பத்தி செய்யவும் உதவுகிறது. சொல்லப்போனால், உடலின் செயல்பாடுகள் சீராக நடைபெறுவதற்கு இந்த ஹார்மோன் மிகவும் இன்றியமையாதது எனலாம்.
ஆனால் சிலருக்கு இந்த ஹார்மோன் அதிகமாகவும் (ஹைப்பர் தைராய்டு), சிலருக்கு குறைவாகவும் (ஹைப்போ தைராய்டு) சுரக்கப்படும்.

பொதுவாக இந்த நிலையால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதில் கர்ப்பிணி பெண்களுக்கு ஹைப்போ தைராய்டு இருந்தால், கருச்சிதைவு ஏற்படும் அல்லது பிறக்கும் குழந்தையின் மூளை பலவீனமாக இருக்கும். இந்த ஹைப்போ தைராய்டை கவனிக்காவிட்டால், அதனால் வேறு சில பிரச்சனைகளுக்கு உள்ளாகி அவஸ்தைப்படக்கூடும்.

ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

ஹைப்போ தைராய்டு அறிகுறிகள் :-
ஹைப்போ தைராய்டு இருந்தால், உடல் பருமன், சோர்வு, மன இறுக்கம், வறட்சியான சருமம் மற்றம் முடி உதிர்வது, மன நிலையில் ஏற்றத்தாழ்வு, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, வீக்கமான முகம், தலை வலி, மயக்கம், மறதி, குளிர்ச்சியான பாதம் மற்றும் கைகள் போன்ற அறிகுறிகள் தென்படும். எனவே உங்களுக்கு மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுவதோடு, கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அவை நிலைமையை மோசமாக்கிவிடும்.

ப்ராக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் :-
தைராய்டு ஹார்மோன்கள் சுரப்பதற்கு அயோடின் அவசியம். ஆனால் இந்த காய்கறிகள் தைராய்டு சுரப்பி அயோடினை உறிஞ்ச விடாமல் தடுக்கும். எனவே ஹைப்போ தைராய்டு கொண்டவர்கள், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், டர்னிப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

கோதுமை மற்றும் பார்லி :-
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் குளுட்டன் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளுட்டனானது, கோதுமை, பார்வி போன்ற தானியங்களில் இருக்கும். எனவே இந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுக்க வேண்டாம்.

பாஸ்ட் ஃபுட் :-
பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இவற்றை தைராய்டு உள்ளவர்கள் சிறிது உட்கொண்டாலும், அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும். எனவே பாஸ்ட் ஃபுட் உணவுகள் மட்டுமின்றி, எண்ணெயில் பொரித்த உணவுகளையும் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

மயோனைஸ் மற்றும் வெண்ணெய் :-
இந்த உணவுகளில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, அதனால் தைராக்ஸின் ஹார்மோனின் அளவு மேலும் குறையும்.

சோயா மற்றும் திணை :-
இவற்றில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென் என்னும் தாவர ஹார்மோன் அதிகம் உள்ளது. ஆய்வு ஒன்றில், ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக இருந்தால், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, தைராக்ஸின் ஹார்மோனின் அளவு குறையும். எனவே ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள், சோயா மற்றும் திணை உண்பதைத் தவிர்க்கவும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் சோளம் :-
சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில் சல்பர் அதிகம் உள்ளது. மேலும் இந்த உணவுப் பொருட்கள் தைராய்டு சுரப்பியால் அயோடினை உறிஞ்ச முடியாமல் செய்யும். ஆகவே இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.

வெங்காயம், திராட்சை மற்றும் ஆப்ரிகாட் :-
மேற்கூறிய உணவுப் பொருட்களும் தைராய்டு சுரப்பியின் இயக்கத்தில் இடையூறு ஏற்படுத்துவதோடு, தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்தியையும் குறைக்கும். ஆகவே ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் இந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

அதிகப்படியான நார்ச்சத்து :-
நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் உணவுப் பொருட்களான தானியங்கள், பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் எடுக்கக்கூடாது. அதற்காக முற்றிலும் தவிர்க்கவும் கூடாது. அளவாக உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், செரிமானம் சீராக நடைபெறாமல் போய்விடும்.

காபி மற்றும் எனர்ஜி பானங்கள் :-
காபி, எனர்ஜி பானங்கள் போன்றவற்றில் காப்ஃபைன் அதிகம் உள்ளது. காப்ஃபைன் தைராய்டு பிரச்சனைக்கு எடுத்து வரும் மருந்துகளை தைராய்டு சுரப்பி உறிஞ்ச விடாமல் தடுக்கும். எனவே காப்ஃபைன் நிறைந்த பானங்களை ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்கள் :-
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை, தைராய்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்ட உடனேயே உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கால்சியமானது தைராய்டிற்காக எடுத்து வரும் மருந்துகளின் சக்தியைக் குறைத்துவிடும். எனவே பால் பொருட்களை மருந்து மாத்திரைகள் எடுத்த சில மணிநேரங்கள் கழித்து எடுக்க வேண்டும்.

ஆல்கஹால் :-

தைராய்டு பிரச்சனை இருந்தால், அது ஹைப்போவாக இருக்கட்டும் அல்லது ஹைப்பராக இருக்கட்டும், ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.