மக்கள் நல்லுறவு
உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது
மறைந்த தலைவர்கள் உயிர்பெறுவார்கள், (விளம்பரத்திற்க்கு மட்டும்) இனி
துங்கியவன் எல்லாம் முழிப்பான், ஒதுங்கி இருந்தவர்கள் ஓடி வருவார்கள்.
பத்திரிக்கை, தொலைகாட்சியில் கருத்துக்கணிப்பு என சொல்லி ஜோசியம்
சொல்வார்கள்.
மக்கள் எல்லாம் தெய்வமாக தெரிவார்கள், பண மழை பொழியும், பொய்களால்
பூ மாலை காதில் வைக்கப்படும், உஷார், நீ எதற்க்கும் அடிமையாகிவிடதே! ஏமாந்து விடாதே!
அன்று எதிர்ப்பை காட்ட போராட்டம், ஆர்பாட்டம், இன்று ஆர்ப்பாட்டம்
போராட்டம்,திட்டம்
வாக்குறுதி எல்லாம் கட்சி வளர, விளம்பரம் தேட மட்டும்
பயன்படுத்திக்கொள்கின்றனர், நிரந்தர தீர்வு
வெற்றி கிடைப்பதில்லை ஏன்? எல்லாம் சடங்காகிப் போனது.
பதவி என்பது
தனி மனிதனின் வாழ்க்கை தரத்தை மட்டும் உயர்த்தவா?
இல்லை மக்களின் தேவை, சேவை மற்றும் பயன்பாட்டிற்க்கா?
ஆக மொத்தம் தமிழ்நாட்டில் தேர்தல் என்ற தோட்டத்தை ஐந்து
வருடம் குத்தகைக்கு எடுத்தவன் மட்டும் நல்ல வாழ்கிறான்.
பதவி என்பது மக்களுக்கு நல்லதை செய்வதற்க்கு
உதவிக்கு மட்டுமே!
ஆள் ஆளூக்கு ஆயீரம் கருத்தை சொல்லுவான் நீ
சுயமாக யோசி!
நடந்த ஆட்சி, நடக்கின்ற ஆட்சி, பதவியில் இருந்தவர்கள் செய்த செயல், துரோகம், நன்மையை அலசிப்பாருங்கள்.
இதற்க்கு முன் வாய்ப்பு வழங்கியதையும் அதை அவர்கள்
பயன்படுத்திய விதம் பற்றியும் புதியவர்களுக்கு
வாய்ப்பு, போன்றதை
சிந்தித்துப் பாருங்கள்.
களத்தில் இறங்கி
மக்களுக்கு வேலை செய்பவரா?
காரியம் முடிந்தவுடன் கண்ணால் காண முடியாதவரா?
உன் பகுதியை இவரால் வளமாகும் என்ற நம்பிக்கை
உன் மனதில் தோன்றினால் அவர்களுக்கு ஆதரவு கொடு, அன்பை கொடு.
மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment