Tuesday, August 2, 2016

நேதாஜி நகர்

கோவை மக்கள் நல்லுறவு

44ம் வார்டு, நேதாஜி நகர், நல்லாம்பாளைய சாலையில் குப்பைகள், கட்டிட கழிவூகள் கொட்டி பாதையை மூடி விட்டனர், சுகாதாரக் கேடு மற்றும் சமூக விரோதிகள் நடமாடும் பகுதியாக மாறிவிட்டது, இது சம்மந்தமாக மக்கள் நல்லுறவிடம் நேதாஜி நகர் குடியிருப்பு மக்கள் புகார் அளித்தனர்.

அதன் பேரில் சம்மந்தப்பட்ட துறைகளுக்கும், மாமன்ற உறுப்பினருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது, ( 7/4/16)  புகார் மனு மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் அளிக்கப்பட்டது, மேலும்  பாதை வேண்டி இரண்டாவதாக (28/7/16) கடிதம் அனுப்பட்டது.

மேற்படி ஒரு வாரகாலத்திற்க்குள் குறை தீர்க்கபடாத பட்சத்தில், மக்கள் நல்லுறவு, நேதாஜி நகர் மக்களுடன் இணைந்து நமக்கு நாமே! அடிப்படையில் களப்பணி செய்ய தீர்மானித்து இருந்தது.

நேற்று 31/7/16 சம்மந்தப்பட்ட இட உரிமையாளரிடம் பேசி அவர்களது முயற்சியால் பாதை சுத்தப்படுத்தி பொது மக்கள் பயன்பாட்டிற்க்கு தரப்பட்டது.

மக்கள் நல்லுறவுக்கு "நேதாஜி நகர் மக்கள் நன்றி கூறினர்கள்".

இதற்க்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி!


No comments:

Post a Comment