Wednesday, April 18, 2018

சிசேரியன்


கருவுற்ற பெண்ணை மாதம் தவறாமல் scan செய்து சோதிப்பது என்பது தாய் சேயின் உடல் நலம் குறித்த அக்கறை என்பது பொய், இதன் மூலம்  குழந்தையின் எடையை பெருக்க வைத்து அதன் மூலம் சிசேரியன் செய்து சம்பாதிக்க தான்.

கருவுற்ற உடனேயே போலிக் ஆசிட் மாத்திரைகள் மற்றும் இரும்பு கால்சியம் மாத்திரைகளை திணித்தும்  புரதம் தேவை என் புழுகி சோயாபீன்ஸ்லிருந்து எடுக்கப்பட்ட புரதங்களோடு கரு வளர்ப்பு நடைபெருகிறது.

பண்ணை கோழிக்கு எடையை கூட்ட என்னவெல்லாம் செய்கிறார்ககளோ அதை அனைத்தும் செய்கிறார்கள் மருத்துவமனையில், ஏதோ சில நிறுவனங்களின்  நன்மைக்காக 35 வாரங்கள் கடப்பதற்கு முன்பாக நான்கு கிலோ வரை எடை கூடியிருக்க வேண்டும் என்பது பன்னாட்டு கம்பெனிககளின் திட்டம் அப்போது தான் குழந்தையின் எடை கூடி விட்டது அதனால் சுக பிரசவத்திற்கு வாய்ப்பே இல்லை சிசேரியன் செய்தால் தான் இல்லையென்றால் ஒரு மரண பீதியை உருவாக்கி, நம்முடைய அறியாமையையும் பயத்தையும்  பணமாக்குகின்றனர் மருத்துவமனைகள்.

அது சரி பிரசவ தேதி குறிப்பதே மிகப்பெரிய பித்தலாட்டம் தான் ஏனெனில் மாதவிலக்கு ஏற்பட்ட தேதியில் இருந்து 285 நாளை கணக்கிட்டு நாள் குறிக்கிறார்கள்  இது தவறு என்பது உலகமறிந்த உண்மை ஆண் பெண் உறவுக்கு பின் கருவுறுதல் நடக்கும்  ஒரு மாதவிலக்கிற்கும் அடுத்த மாதவிலக்கும் இடைப்பட்ட 25 நாளில் எப்போது வேண்டுமானாலும் கருத்தரித்தல் நடக்கும்  எதை வைத்து மாதவிடாய் நாளை கணக்கில் கொண்டு சிசேரியன் செய்கிறார்கள்.

சில கம்பெனிகளின் நன்மைக்காக தாய் சேயின் ஆரோகியம் அவர்களின் வாழ் நாள் முழுவதும் கெடுத்து, குட்டிசுவராக்குகிறார்கள் சிசேரியன் எனும் பயங்கரவாதத்தின் மூலம்.

சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் மரபணுக்கள் சார்ந்த நிறைய குறைபாடுகள் ஏற்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், இது நவீன அறிவியல் ஒப்புகொண்ட முக்கியமான விடயமாகும். உலகின் அதிபயங்கர கிரிமினல் குற்றவாளிகள் சிசேரியன் மூலம் பிறந்தவர்கள் என்பதை இங்கு கவனத்தில் கொண்டு மரபுவழி சுக பிரசவத்திற்கு முயலுங்கள்.

குழந்தைக்காக


1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.

2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு துணை புரியும்.

3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன், உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா? நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள், அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.

4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன் டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒரு காலமும் அனுமதித்து விடாதீர்கள். ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.

5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும்.

சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய் அமையும்.

6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள். அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை மனக் கவலைகளை நீக்கி உங்கள் மீது அவர்களையறியாத ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.

7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.

8. உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.

9. பொய், ஏமாற்று, திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.

10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள். பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள். உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.

11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள். கல்வியின் முக்கியத்துவம், ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.

12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள். பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள். அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.

13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.

14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள். அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.

15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள் கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.

16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும். அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள். குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது (பயந்த சுபாவத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டு பண்ணும், சிறு நீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள். இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.
குறிப்பு:
நம் தவறான வாழ்கை முறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துகளாலும் மருத்துவ முறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

அடையாளம்


தன் நாட்டுக்காரானாக இருக்கட்டும், தன் ஊர் காரனாக இருக்கட்டும், தன் கட்சிக்காரனாக இருக்கட்டும், தன் ஜாதிக்காரனாக இருக்கட்டும், தன் குடும்பத்தை சேர்ந்தவனாக கூட இருக்கட்டும், ஏன் தன் மகனாக கூட இருக்கட்டும், தெரிந்து அறிந்து தப்பு செய்தால், பெண்களிடம், குழந்தைகளிடம், அப்பாவி மனிதர்களிடம் அத்துமிறி பலத்காரம் செய்தால் தானக முன் வந்து தண்டனை அளிக்க பரிந்துரை செய்யும் அளவிற்க்கு மாற்றம் வேண்டும்,  நாட்டில் சட்டம் வேண்டும்,அந்த மனம், எண்ணம் எல்லோரிடமும்  வர வேண்டும்.

எல்லாத்திற்க்கும் ஆதரவு, பணம், அரசியல் பலம், அதிகாரிகள் பலம்,  ஆள்பலம், எந்த தவறு செய்தாலும் இவைகள் மூலம் சரிகட்டி விடலாம் என்ற எண்ணம் தான் அனைவரையும் வளர்த்துக் கொண்டு இருக்கிறது.

மாறவேண்டும், சட்டம் முதல் சாமனியன் வரை மாறவேண்டும்!

எத்தனை அவலங்கள் வன்முறைகள் நாட்டில் நடந்தாலும்  மவுனம் காப்பது ஆதரவின் அடையாளமாகிவிடுகிறது!

உலகம் தன்னை தானே மெல்ல மெல்ல அழித்துக் கொண்டு இருக்கிறது, அழிவு நிச்சயம்!

கடவுள்


கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை!

ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.

துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது…

கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”

கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…

“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”

“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.

“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.

இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.

“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.

ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது. அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.

“இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌ல் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.

எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” எ‌ன்று சா‌ந்தமாக ப‌தில‌ளி‌த்தா‌ர்.

மேலும் கடவுள் என்னிடம், “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.

“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இறுதியாக, “உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”

நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?”

“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.

“எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான்.

“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.

“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?” என்று வியந்தேன் நான்.

“ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.

நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன். மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.

ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.

கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை

சிந்தனை செய் மனமே!


எந்த ஒரு மதத்தையும்  அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள்!

தவறு என்பது யார் செய்தாலும் தவறு தான்! அதை வைத்து கட்சிகளை களங்கப்படுத்துவதாக நினைத்து  மதங்களையும் சேர்த்து இழிவாக பேச வேண்டாம்.

இன்று ஒருவன் தனிப்பட்ட ஒருவன் தவறு செய்தாலும் கூட கட்சி சாயம், மத சாயம் பூசுவது, மீம்ஸ் போடுவது வாடிக்கையாகி விட்டது, தப்பு செய்தவனை மட்டும் தண்டியுங்கள்,அவனுக்கு துணை புரிந்தவர்கள் என அனைவரையும்  கடுமையாக தண்டியுங்கள், தவறில்லை முன்பு ஒரு பசீர் தப்பு செய்தால் இஸ்லாமியன் கைது, இஸ்லாமிய தீவிரவாதி கைது என போட்டார்கள், இன்று ஒரு பாஸ்கர் செய்தால் இந்து, காவி, என போடுகிறார்கள், இது வேண்டாமே.

எவனே தப்பு செய்ய சமுதாயம் என்ன தப்பு செய்தது என சிந்தித்துப் பாருங்கள்.

தவறுக்கு குரல் கொடுங்கள், தப்பு செய்தவனை கண்டியுங்கள், தனிப்பட்ட நபர்களின் செய்கைக்காக  மதங்களை புண்படுத்தாதீர்கள், நாளை எதுவும் திரும்ப நடக்கும், ஒரு காவல் துறை சேர்ந்தவர் தப்பு செய்தால் ஒட்டு மொத்த காவல் துறையை களங்கப்படுத்துவது போல செய்திகளை வெளியிடுவது தவிர்க்கவும்.

Wattsup, Facebook நல்ல தகவல் பரிமாற்றத்திற்க்கு பயன்படுத்துங்கள், உண்மையான செய்தியை பகிருங்கள், சொந்த விருப்பு, வெறுப்பு, பகைகளுக்கு பயன்படுத்தாதீர்கள், ஆபத்து, ஆயுதம் எங்கிருந்து வேண்டுமானாலும் திரும்ப வரும், எச்சரிக்கை, கவனம்!

சிந்தனை செய் மனமே!