Wednesday, April 18, 2018

சிந்தனை செய் மனமே!


எந்த ஒரு மதத்தையும்  அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள்!

தவறு என்பது யார் செய்தாலும் தவறு தான்! அதை வைத்து கட்சிகளை களங்கப்படுத்துவதாக நினைத்து  மதங்களையும் சேர்த்து இழிவாக பேச வேண்டாம்.

இன்று ஒருவன் தனிப்பட்ட ஒருவன் தவறு செய்தாலும் கூட கட்சி சாயம், மத சாயம் பூசுவது, மீம்ஸ் போடுவது வாடிக்கையாகி விட்டது, தப்பு செய்தவனை மட்டும் தண்டியுங்கள்,அவனுக்கு துணை புரிந்தவர்கள் என அனைவரையும்  கடுமையாக தண்டியுங்கள், தவறில்லை முன்பு ஒரு பசீர் தப்பு செய்தால் இஸ்லாமியன் கைது, இஸ்லாமிய தீவிரவாதி கைது என போட்டார்கள், இன்று ஒரு பாஸ்கர் செய்தால் இந்து, காவி, என போடுகிறார்கள், இது வேண்டாமே.

எவனே தப்பு செய்ய சமுதாயம் என்ன தப்பு செய்தது என சிந்தித்துப் பாருங்கள்.

தவறுக்கு குரல் கொடுங்கள், தப்பு செய்தவனை கண்டியுங்கள், தனிப்பட்ட நபர்களின் செய்கைக்காக  மதங்களை புண்படுத்தாதீர்கள், நாளை எதுவும் திரும்ப நடக்கும், ஒரு காவல் துறை சேர்ந்தவர் தப்பு செய்தால் ஒட்டு மொத்த காவல் துறையை களங்கப்படுத்துவது போல செய்திகளை வெளியிடுவது தவிர்க்கவும்.

Wattsup, Facebook நல்ல தகவல் பரிமாற்றத்திற்க்கு பயன்படுத்துங்கள், உண்மையான செய்தியை பகிருங்கள், சொந்த விருப்பு, வெறுப்பு, பகைகளுக்கு பயன்படுத்தாதீர்கள், ஆபத்து, ஆயுதம் எங்கிருந்து வேண்டுமானாலும் திரும்ப வரும், எச்சரிக்கை, கவனம்!

சிந்தனை செய் மனமே!


No comments:

Post a Comment