Tuesday, February 23, 2016

கவிஞர் வைரமுத்துவின் மருத்துவ கவிதை


மக்கள் நல்லுறவு பகிர்கிறது

கவிஞர் வைரமுத்துவின் மருத்துவ கவிதை...
மருத்துவமுறையை
மாற்றுங்கள்...
டாக்டர்...
வாயைத்திற என்பீர்கள்!
வயிறு தெரியும்படி
வாய்திறப்போம்!
நாக்கைநீட்டு என்பீர்கள்!
கல்கத்தா காளியாய்
நாக்கை நீட்டுவோம்!
முதுகைத்திருப்பி
மூச்சிழு என்பீர்கள்!
அப்போதுதான்
உண்மையாய் சுவாசிப்போம்!
அவ்வளவுதான்!
அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள்!
வாசிக்கமுடியாத கையெழுத்தில்
வாயில்வராத பெயரெழுதி
காகிதங்கிழிப்பீர்கள்!
மூன்றுவேளை... என்னும்
தேசியகீதத்தை
இரண்டேவார்த்தையில்
பாடி முடிப்பீர்கள்!
போதாது டாக்டர்!
எங்கள்தேவை
இதில்லை டாக்டர்!
நோயாளி, பாமரன்!
சொல்லிக்கொடுங்கள்!
நோயாளி, மாணவன்!
கற்றுக்கொடுங்கள்!
வாய்வழி சுவாசிக்காதே!
காற்றை வடிகட்டும் ஏற்பாடு
வாயிலில்லையென்று
சொல்லுங்கள்!
சுவாசிக்கவும்
சூத்திரமுண்டு!
எத்துணை பாமரர்
இஃதறிவார்?
சுவாசிக்கப்படும் சுத்தக்காற்று
நுரையீரலின்
தரைதொடவேண்டும்!
தரையெங்கேதொடுகிறது?
தலைதானேதொடுகிறது!
சொல்லிக்கொடுங்கள்!
சாராயம் என்னும்
திரவத்தீயைத்தீண்டாதே!
கல்லீரல் எரிந்துவிடும்!
கல்லீரல் என்பது கழுதை!
பாரஞ்சுமக்கும்
படுத்தால் எழாது!
பயமுறுத்துங்கள்!
ஒருகால்வீக்கம்?
உடனேகவனி!
யானைக்காலின் அறிகுறி!
இருகால்வீக்கம்?
இப்போதேகவனி!
சிறுநீரகத்தில் சிக்கலிருக்கலாம்!
வாயிலென்ன
ஆறாதப்புண்ணா?
மார்பகப்பரப்பில்
கரையாதக்கட்டியா?
ஐம்பதுதொட்டதும்
பசியேயில்லையா?
சோதிக்கச் சொல்லுங்கள்!
அறியாத புற்றுநோய்
ஆனா ஆவன்னா வெழுதியிருக்கலாம்!
நோயாளியை
துக்கத்திலிருந்து
துரத்துங்கள் டாக்டர்!
நோயொன்றும் துக்கமல்ல!
அந்நியக்கசடு வெளியேற
உடம்புக்குள் நிகழும்
உள்நாட்டு யுத்தமது!
சர்க்கரையென்பது
வியாதியல்ல!
குறைபாடென்று கூறுங்கள்!
செரிக்காதவுணவும் எரிக்காதசக்தியும்
சுடுகாட்டுத்தேரின் சக்கரங்களென்று
சொல்லுங்கள் டாக்டர்!
ஊமை ஜனங்களிவர்
உள்ளொளியற்றவர்!
பிணிவந்து இறப்பினும்
முனிவந்து இறந்ததாய் முணங்குவர்!
சொல்லிக் கொடுங்கள்!
யோகம் என்பது
வியாதி தீர்க்கும் வித்தையென்று
சொல்லுங்கள்!
உயிர்த்தீயை உருட்டியுருட்டி
நெற்றிப்பொட்டில் நிறுத்தச் சொல்லுங்கள்!
உணவுமுறை திருத்துங்கள்!
தட்டில்மிச்சம் வைக்காதே!
வயிற்றில் மிச்சம்வை!
பசியோடு உட்கார்!
பசியோடு எழுந்திரு!
சொல்லுங்கள் டாக்டர்!
அவிக்காத காய்களே
அமிர்தமென்று சொல்லுங்கள்!
பச்சையுணவுக்கு
பாடம் நடத்துங்கள்!
மருந்தை யுணவாக்காதே!
உணவை மருந்தாக்கு!
மாத்திரைச் சிறைவிட்டு
மனிதனே வெளியேவா!
கோணாத ஒருவன்
கூனனானான்! ஏனாம்?
அவன் டப்பாவுணவுகளையே
உட்கொண்டது தானாம்!
ஒருவனுக்கு
விஷப்பாம்பு கடித்தும்
விஷமில்லை! ஏனாம்?
அவன்
உட்கொண்டது தானாம்!
ஆரோக்கிய மனிதனுக்குத் தேவை
அரைகிராம் உப்புதானே!
மனிதா...
உப்பைக் கொட்டிக்கொட்டியே
உயிர் வளர்க்கிறாயே!
செடிகொடியா நீ?
சிந்திக்கச் சொல்லுங்கள்!
உண்மை இதுதான்!
மனிதனைத்தேடி மரணம் வருவதில்லை!
மரணத்தைத்தேடியே மனிதன் போகிறான்!
டாக்டர்...
எல்லாமனிதரையும்
இருகேள்வி கேளுங்கள்!
"பொழுது
மலச் சிக்கலில்லாமல்
விடிகிறதா?
மனச் சிக்கலில்லாமல்
முடிகிறதா?"
-வைரமுத்து.... 🍒

உன்னை அறிந்தால்


மக்கள் நல்லுறவு பகிர்கிறது


உன்னை அறிந்தால்

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.
மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.
“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.
உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான்.
அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.
உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.
சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.
“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.
அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.
அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.
அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.
“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”
மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.
இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.
நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள். செக்கு மாடுகள் அல்ல.

Monday, February 22, 2016

தாய்

மக்கள் நல்லுறவு


👪தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
தன் அன்னை மறைந்தபோது ஒருவர் நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார்.😢😔😢😔
இந்த அளவு அழுவதற்குக் காரணம் என்ன என்று ஒருவர் கேட்டார்.📣📣📣 அதற்கு அவர், "எப்படி நான் அழாமல் இருக்க முடியும்?


சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒரு வாசல் மூடப்பட்டு விட்டதே!" என்றார்.


❌🌌❌🌠❌🌌❌🌠❌ ஆம்!தாயுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் பெற்றவர்களே! 👍👍👍👍👍👍 நீங்கள் சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒன்று உங்கள் கண் முன்னால் இருக்கிறது.அவர்களைப் பேணுங்கள்.

🏁🏁🏁🏁🏁🏁🏁 அவர்களின் அன்பை பிரத்தனையை பெறுங்கள்.எவர் தன் தாயின் மனதை குளிர வைக்கிறாரோ அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்வார்.

☔☔☔☔☔☔ ஏனென்றால் ஒரு தாய் தன் மகனைப் பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள்ளும்,வாய்விட்டும் தனது மகன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று தான் 'துஆ'(பிரத்தனை)  செய்வார்."உங்கள் பெற்றோர்களைப் பேணுங்கள்.


💯💯💯💯💯💯💯 அவர்கள் உங்களுக்கு அநீதி இழைக்கமாட்டார்கள் தனது தாய் உயிருடன் இருக்கும் போது அவரை வேதனைப்படுத்தாதிர்கள் 🙇🙇🙇🙇🙇🙇🙇

பெற்றோரை மதித்து வாழ கற்றுக்கொள்ளுங்கள் யார் யாரையோ அம்மா என சொல்லி நினைத்து காலத்தை கடத்துபவர்களே!!!


உங்களைக் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த தாயை சற்று சிந்தியுங்கள்...

நீங்கள் பிறப்பதற்கு முன்பு உங்களுக்காக அழுது பிராத்தனை செய்தவள் உங்களின் தாய்....

நீங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக தன்னுடைய சந்தோஷங்கள் பலதை உங்களுக்காக தியாகம் செய்தவள் உங்கள் தாய்....

மக்கள் நல்லுறவு

Sunday, February 21, 2016

"அன்பை தெறிக்க விடலாமா''

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

மக்களே விரைந்து கொள்ளுங்கள்

"அன்பை தெறிக்கவிடலாமா''

உங்களுக்கு நன்மை எனத் தெரிந்த காரியங்களை விரைந்து செய்யுங்கள் உமது கைப்பொருள் கைவிட்டு போவதற்க்கு முன் முடிந்வரை தான தருமங்கள் செய்யுங்கள் ஏனென்றால் தானம், தர்மம் செய்பவர்கள் உண்ணும் உணவே மருந்தாகி அவரை வாழ வைக்கும்.

கஞ்சத்தனம், செய்பவர்கள் மற்றும் அடுத்தவரை ஏமாற்றி பிழைப்பவன்  உண்ணும் உணவே அவனுக்கு நோயாக மாறும். 

மனம் சஞ்சலம் அடைவதற்க்குள் நாம் பிறருடன் போட்ட சண்டை, பிறர்களிடையே எற்படும் சண்டைகளை தீர்த்து கொள்ளுங்கள், இறைவனை வணங்குங்கள், பிறருக்காக பிரார்த்தனை செய்வதை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள், தீய பழக்க வழக்கம் இருந்தால் விடுபட்டு வாருங்கள், அதிலிருந்து விலகுங்கள் "தீய நட்புகளை முடிந்தவரை திருத்துங்கள், அல்லது விலகியிருங்கள், நம்மை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தாமாகவும், நட்பாக இருக்கும் படியான சூழ்நிலையை உருவாக்குங்கள், குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும், சுயகட்டுப்பாடு, கல்வி, நற்பண்புகளை கற்றுக்கொடுங்கள், மக்களின் தேவைகளை ஒன்றுகூடி ஆலோசனை செய்து ஒற்றுமையுடன் தீர்த்துக்கொள்ள வழி செய்யுங்கள், அதற்குண்டான முயற்சி செய்யுங்கள்.

மரணத்திற்க்கு முன் பாவமன்னிப்பு தேடுவதற்க்கு உண்டான காரியங்களில் ஈடுபடுத்துங்கள்.

நமக்கு விளம்பரம் தேவையில்லை, நாம் செய்யும் செயல்களால் அடையும் மனத்திருப்தி, மக்களின் அன்பு தான் விளம்பரம், நல்லதை நாம் பகிர்ந்து செய்யாலாம் வாருங்கள், நல்ல உள்ளங்களை இணைத்து செயல்படாலாம் கட்சி, ஜாதி, மதம், பதவியை துறந்து, மறந்து செயல்படாலாம்.. வாருங்கள் அன்பு ஒர் ஆயுதம், அன்பு ஒர் மருந்து, அன்பு அரவணைக்கும், அதை தெறிக்கவிடுங்கள்.

ஒற்றுமையுடன் வாழ்க வளமுடன் "ஒன்று பட்டால் உண்டு தீர்வு"

உங்கள் மீது நம்பிக்கையுடன் 
மக்கள் நல்லுறவு

மனதில் அழுக்கு

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

ஒருவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி குர்ஆனை படித்துக் கொண்டே இருப்பார்.  இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக் கொண்டே இருந்தான். ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான், "தாத்தா! எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே.  இதை எத்தனை நாளா படிக்கிறீங்க?" என்றான்.


பெரியவர் சொன்னார், " ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும் ".


"அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க ?" என்றான்.


தாத்தா சிரித்தபடி கூறினார், "எனக்கு ஒரு உதவி செய். நீ செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்".


இளைஞன் கேட்டான், " என்ன உதவி தாத்தா? " பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்தார். அதில் அடுப்புக் கரி இருந்தது. அதை ஒரு மூலையில் கொட்டினார். 


பல நாட்களாகக் கரியை சுமந்து சுமந்து அந்தக் கூடையின் உட்புறம் கருப்பாக மாறி இருந்தது. பெரியவர் சொன்னார், " தம்பி, அதோ இருக்குற பைப்புல இருந்து இந்தக் கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன்" இளைஞனுக்கு சிரிப்பு வந்தது. இருந்தாலும் பெரியவர் சொல்லி விட்டதால் எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான். 


அவன் வந்து சேருவதற்கு முன்பே எல்லா நீரும் தரையில் ஒழுகிப்போனது. பெரியவர் சொன்னார், " இன்னும் ஒரு முறை" . 

இளைஞன் மீண்டும் முயன்றான். ஆனால் மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்? மீண்டும் சிந்திப் போனது. பெரியவர் கேட்டார்,


" தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் " . இளைஞன் ஒரு முடிவுக்கு வந்தான்.

"இம்முறை மட்டும் அவர் சொல்கிற படி செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடுவோம். அவர் எந்தப் புத்தகத்தைப் படித்தால் எனக்கென்ன வந்தது?" தண்ணீர் பிடித்தான். வழக்கம் போலவே எல்லாத் தண்ணீரும் தரையில்.


"தாத்தா, இந்தாங்க உங்க கூடை. இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? எதுக்கு என்னை இந்தப் பாடு படுத்தினிங்க " என்றான்.


தாத்தா புன்னகையோடு சொன்னார், " இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும் தெரியும். நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப் போகும் போது இதோட உட்புறம் எப்படி இருந்தது? " என்றார்.


இளைஞன் சொன்னான் , " ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா இருந்தது " "இப்போ பார் "என்றார்.


தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது.


பெரியவர் சொன்னார்,
" தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான். எத்தனை முறை தண்ணீர் பிடிச்சாலும் மூங்கில் கூடை நிரம்பவே இல்லை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் கூடை சுத்தமாயிடிச்சு. அது போலத்தான் எத்தனை முறை படிச்சாலும் முழு குர்ஆன் மனப்பாடம் ஆயிடும்னு சொல்ல முடியாது. ஆனா படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள இருக்கும் அழுக்கும், கறையும்
சுத்தமாகிக்கிட்டே இருக்கும்" என்றார்.


இளைஞனுக்குள்ளே என்னென்னவோ செய்தது.


Thariq hafis

யார் தயார் ?

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

இது போன்ற படிவம் அளிக்க

யார் தயார்?
எந்த கட்சி தயார்? 
மக்களிடம் கொடுக்க முடியுமா?



Friday, February 19, 2016

ஆட்சி மாற்றம் மனதில் மாற்றம்

மக்கள் நல்லூறவு பகிர்கிறது

ஆட்சி மாற்றம் மக்கள் மனதில்

ஒரு மன்னன் தன் குடிமகன் ஒருவனை அழைத்து " உனக்கு ஒரு தண்டனை, அங்கே தட்டிலிருக்கும் 100 வெங்காயத்தை திங்க வேண்டும் அல்லது செருப்பால் 100 அடி வாங்கிக்கொள்ள வேண்டும்" என்றான்.


அந்த மனிதன், செருப்படி வாங்கினால் கேவலம் என்று எண்ணி, வெங்காயம் திண்பதாக ஒத்துக்கொண்ட்டான்.



அதன்படி வெங்காயம் திங்க தொடங்கினான். 30-35 வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை. எனவே அவன் "மன்னா, என்னால் வெங்காயம் திங்க முடியவில்லை எனவே நான் செருப்படியே வாங்கிக் கொள்கிறென்" என்றான்.



அதன்படி செருப்பால் அடி வாங்க தொடங்கினான். 40-50 செருப்படி வாங்கியவன் வலி தாங்க முடியாமல் அலறியடி தன்னால் செருப்படி வாங்க முடியவில்லை எனவே வெங்காயமே திண்பதாக கூறினான்.



மீண்டும் சில வெங்காயம் திண்றவனால் அதற்குமேல் முடியவில்லை, எனவே செருப்படி வாங்க தொடங்கினான், வலி தாங்க முடியவில்லை, மீண்டும் வெங்காயம்- எரிச்சல் தாங்கமுடியவில்லை, மீண்டும் செருப்படி என மாற்றி மாற்றி வாங்கி கொண்டிருந்தான். அவன் யாரென்று தெரியுமா? முகம் காட்டும் கண்ணாடியை பாருங்கள்..!!!



வேறு வழியே கிடையாது என அறிவிலி போல் சிந்திக்க தெரியாமல் 5 ஆண்டு தி.மு.க, எரிச்சல் தாங்க முடியாமல், 5 ஆண்டு அ.தி.மு.க, வலி தாங்க முடியாமல் மீண்டும் தி.மு.க இருவரிடமும் வாங்கிக் கொண்டிருப்பது யார்..? 

நாம் தானே..?


சிந்திப்பீர்.... செயல்படுவீர்...

மக்கள் நல்லூறவு