Sunday, February 21, 2016

"அன்பை தெறிக்க விடலாமா''

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

மக்களே விரைந்து கொள்ளுங்கள்

"அன்பை தெறிக்கவிடலாமா''

உங்களுக்கு நன்மை எனத் தெரிந்த காரியங்களை விரைந்து செய்யுங்கள் உமது கைப்பொருள் கைவிட்டு போவதற்க்கு முன் முடிந்வரை தான தருமங்கள் செய்யுங்கள் ஏனென்றால் தானம், தர்மம் செய்பவர்கள் உண்ணும் உணவே மருந்தாகி அவரை வாழ வைக்கும்.

கஞ்சத்தனம், செய்பவர்கள் மற்றும் அடுத்தவரை ஏமாற்றி பிழைப்பவன்  உண்ணும் உணவே அவனுக்கு நோயாக மாறும். 

மனம் சஞ்சலம் அடைவதற்க்குள் நாம் பிறருடன் போட்ட சண்டை, பிறர்களிடையே எற்படும் சண்டைகளை தீர்த்து கொள்ளுங்கள், இறைவனை வணங்குங்கள், பிறருக்காக பிரார்த்தனை செய்வதை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள், தீய பழக்க வழக்கம் இருந்தால் விடுபட்டு வாருங்கள், அதிலிருந்து விலகுங்கள் "தீய நட்புகளை முடிந்தவரை திருத்துங்கள், அல்லது விலகியிருங்கள், நம்மை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தாமாகவும், நட்பாக இருக்கும் படியான சூழ்நிலையை உருவாக்குங்கள், குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும், சுயகட்டுப்பாடு, கல்வி, நற்பண்புகளை கற்றுக்கொடுங்கள், மக்களின் தேவைகளை ஒன்றுகூடி ஆலோசனை செய்து ஒற்றுமையுடன் தீர்த்துக்கொள்ள வழி செய்யுங்கள், அதற்குண்டான முயற்சி செய்யுங்கள்.

மரணத்திற்க்கு முன் பாவமன்னிப்பு தேடுவதற்க்கு உண்டான காரியங்களில் ஈடுபடுத்துங்கள்.

நமக்கு விளம்பரம் தேவையில்லை, நாம் செய்யும் செயல்களால் அடையும் மனத்திருப்தி, மக்களின் அன்பு தான் விளம்பரம், நல்லதை நாம் பகிர்ந்து செய்யாலாம் வாருங்கள், நல்ல உள்ளங்களை இணைத்து செயல்படாலாம் கட்சி, ஜாதி, மதம், பதவியை துறந்து, மறந்து செயல்படாலாம்.. வாருங்கள் அன்பு ஒர் ஆயுதம், அன்பு ஒர் மருந்து, அன்பு அரவணைக்கும், அதை தெறிக்கவிடுங்கள்.

ஒற்றுமையுடன் வாழ்க வளமுடன் "ஒன்று பட்டால் உண்டு தீர்வு"

உங்கள் மீது நம்பிக்கையுடன் 
மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment