Thursday, August 18, 2016

மக்கள் நல்லுறவு சமுக பணி.

கோவை மக்கள் நல்லுறவு  சார்பாக 


கவுண்டம்பாளையம்  ஜெய்நகர் 44ம் வார்டு மக்கள் கோரிக்கையின் பேரில் பூங்காவில் அமர்வதற்க்கு  பெஞ்ச் அமைத்து தரப்பட்டது.





Wednesday, August 17, 2016

சுதந்திரம்


சுதந்திரம்
மக்கள் நல்லுறவு பகிர்கிறது
சுதந்திரம் என்றால் என்ன? இந்த சுதந்திரம் எப்படிக் கிடைத்தது என்பதை எல்லாம் அறியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சுதந்திர தினம் ஒரு சடங்காகவே கடைபிடிக்கப்பட்டு, மற்ற விடுமுறை நாட்களைப் போல் இதுவும் ஒரு விடுமுறை நாளாக மட்டும் மாற்றப்பட்டுவிட்டது.

சுதந்திர தினத்தைக் குறி வைத்து எப்படியெல்லாம் பணம் பண்ணலாம் என்பதை தொலைக்காட்சிகள் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றன. சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பான நிகழ்ச்சிகளை, அதில் பங்கெடுத்த தியாகிகளின் நேர்காணல்களை வெளியிடுவது பற்றிய அக்கறை தொலைக்காட்சிகளுக்கு இல்லை. சுதந்திரப் போராட்டம் தொடர்பான படங்களின் உரிமை அவர்களிடம் இருந்தாலும் கூட அதனை அவர்கள் ஒளிபரப்பத் தயாரில்லை. நாள் முழுக்க பொழுது போக்கு என்கிற பெயரில் காண்பிக்கப்படுகிற நிகழ்ச்சிகளை வைத்தே ஊடகத்தினிரிடமும், நம் மக்களிடமும் உள்ள சுதந்திரம் குறித்த உணர்வினை மதிப்பிட்டுவிடலாம்.

நெடுங்காலத் தொடர் போராட்டத் துக்குப் பின்புதான் நமக்கு ஆங்கிலேயர் களிடம் இருந்து விடுதலை கிடைத்தது. எதற்காக அவர்களிடம் இருந்து விடுதலை பெறப் போராடினோம்? அந்த விடுதலையின் மூலம் என்னென்ன பலன்களை அடைந்திருக்கிறோம்? உண் மையிலேயே நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்த நம் முன்னோர்களின் கனவு நனவாகி இருக்கிறதா? சுதந்திரம் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கு மானது. அப்படிப்பட்ட சுதந்திரம் நாம் அனைவருக்கும் கிடைத்திருக்கிறதா?

ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றதற்காக மட்டுமே ஒவ்வோர் ஆண்டும் இதேபோன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடப் போகிறோமா? ‘நாம் நினைத்த இந்தியா அமைந்துவிட்டது; ஒவ்வோர் இந்தியனும் வெள்ளைக்காரனிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தை நினைத்து பெருமைப்படுவதும் கொண்டாடுவதும் தேவைதான்’ என நினைக்கிறோமா?

உண்மையான விடுதலையை இம்மக்களுக்குக் கிடைக்காமல் செய்து வருபவர்கள், அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ளும் சிலரின் கையிலேயே நமது தேசியக்கொடி சிக்கிக் கொண்டிருப்பதைப் பற்றிப் பேசவே நாம் தயங்குகிறோம். இந்நாட்டுக்கும், இம்மக்களுக்கும், இம்மண்ணுக்கும், இம்மொழிகளுக்கும் துரோகம் இழைப்பவர்களாலும், அழிப்பவர் களாலும்தான் பெரும்பாலும் நம் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. வெள் ளைக்காரனிடம் இருந்து விடுதலையைப் பெற்று, கொள்ளைக்காரர்களிடம் நாட்டைக் கொடுத்துவிட்டு, சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இன்று காந்தியடிகள் உயிரோடு மீண்டெழுந்து வந்து இந்த நாட்டைச் சுற்றிப் பார்த்தால் என்ன கூறுவார்? நாம் கொண்டாடும் இந்த சுதந்திர தினத்தைப் பார்த்து என்ன சொல்வார்? நம் நாட்டை ஆண்டவர்களிடமும், இன்று ஆள்பவர்களிடமும் என்ன கேட்பார்? அவர்கள் அவருக்கு என்ன பதிலைச் சொல்ல முடியும்?

வெள்ளைக்காரனிடம் இருந்து நம் நாட்டை மீட்டெடுத்த போது அந்த மகிழ்ச்சி இருந்தது. அப்போது ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் நாடு விடுதலை பெற்ற நாளைக் கொண்டாடுவதைத் தவிர முதன்மையான மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்?

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, தீண்டாமை, சாதிக் கலவரங்கள், பெண்ணடிமை போன்ற வற்றில் எது இங்கே குறைவு? மதுவை எதிர்த்து காந்தியடிகள் நாடு முழுக்கப் பயணம் செய்து போராடினார். இன்று ஆட்சி செய்பவர்களே மக்களிடத்தில் மதுவை ஊற்றிக் கொடுப்பதும், அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதெல்லாம் எப்படி உண்மையான விடுதலையாக இருக்க முடியும்?

ஊழலிலும், லஞ்சத்திலும் திளைத்திருக்கும் நாட்டில், சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பது சிறிதும் குற்றவுணர்வின்றி ஆண்டுதோறும் அரங்கேறிக் கொண்டேயிருக்கிறது.

இத்தனை ஆண்டுகள் கடந்தும் நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு சொந்த வீடு கிடைக்க வழியில்லை. கழிப்பிட வசதி கூட பெறாத மக்கள் வாழும் நாடுகளின் வரிசையில் உலகிலேயே நம் நாட்டுக்குத்தான் முதலிடம். உணவுப் பண்டங்களை வீணடிப்பதிலும் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல், அதற்கு உத்திரவாதமும் இல்லாமல் அலைவதும் நம் நாட்டில் தான்.

சொந்த நாட்டு மக்களுக்கான அடிப்படைத் தேவையைக் கூட 69 ஆண்டுகள் கடந்தும் செய்து தர முடியாத அவலத்துடன்தான் மக்கள் ஆட்சியின் மூலமாக உருவாக்கப்பட்ட அரசாங்கங்கள் தொடர்ந்து சுதந்திரத்தைப் பெருமையுடன் கொண்டாடிக் கொண்டு வருகின்றன.

நமக்கு விடுதலை கிடைத்த பின் நமது நாட்டின் உயிரான கிராமங்கள் அழியத் தொடங்கின. உள்ளூர் உற்பத்தி அழிந்து, சிறு தொழில்கள் அழிக்கப்பட்டு காலங்காலமாக செய்து வந்த தொழில்களை விட்டுவிட்டு, தன் மண்ணை விட்டுவிட்டு நகரத்துக்கு இடம் பெயர்ந்தோம்.

வீணாகிற நீரினை கடலுக்கு அனுப்பினாலும் அனுப்புவோம்; அதைப் பயன்படுத்த உங்களுக்கு தர மாட்டோம் என ஒவ்வொரு மாநிலமும் இன்னொரு மாநிலத்தின் மீது பகைமையை வளர்த்துக்கொண்டு வருகிறது. தண்ணீர் தேவை தீர்ந்தாலே நாட்டின் பெரும்பான்மையான சிக்கல்களிடம் இருந்து விடுதலை கிடைத்துவிடும். உண்மையான முன்னேற்றம் உருவாகித் தன்னிறைவை அடைந்து விடலாம். அதன் பின்தான் வல்லரசு கனவெல்லாம் சாத்தியமாகும். ஆனால், அதற்கான எந்தவித முன்னேற்பாடும் இங்கு நடக்கிற மாதிரி தெரியவில்லை.

70 ஆயிரம் ராணுவத்தினரைப் பாதுகாப்புக்கு வைத்துக்கொண்டு சுதந்திர தினம் கொண்டாடுவதையே பெருமையாக நினைக்கிறோம். சுதந்திரம் எதை கொடுத்ததோ, இல்லையோ நாட்டின் வளத்தை சுரண்டி, மக்களை ஏமாற்றி, சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு அரசியல் என்னும் தொழிலைக் கொடுத்திருக்கிறது.

சேர்த்ததை, கொள்ளையடித்ததை எங்கே வைப்பது எனத் தெரியாமல் தான் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கிறார்கள். வாக்கு ஒன்று கையில் இருப்பதனாலேயே நம் நாட்டில் ஏழை எளியவர்களை உயிரோடு வைத் திருக்கிறார்கள். அது ஒன்றுதான் இந்த எளிய மக்களுக்கு இங்கேயிருக்கும் மதிப்பு. ஆட்சியை உருவாக்குபவர்கள் ஏழைகளாகவும், அதனை முழுமையாக அனுபவிப்பவர்கள் பணக்காரர்களாகவும் இருக்கும் வரை இங்கே எந்த முன்னேற்றமும் உருவாகப் போவதில்லை.

இனி எந்த ஒரு ஏழையும் தேர்தலில் போட்டியிட்டு மக்களாட்சியின் அதி காரத்தில் பங்கெடுக்க முடியாது. பணமுள்ளவர்கள் மூலமாகவே தேர்தல் போட்டிகள் நடக்கும். மீண்டும் மீண்டும் புதிய புதிய ஆட்சிகள் உருவாகும். எந்நாளும் எதுவும் இல்லாதவனுக்கு இனி எதுவும் கிடைக்கப் போவதில்லை.


மக்கள் நல்லுறவு

Thursday, August 11, 2016

அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?


அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் இங்கே

வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.

பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.

தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.

கட்டணம்,
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.

தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.

செலுத்தும் முறை:
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த:
உதவி இயக்குநர் (வெளியீடுகள்),
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,
சென்னை-600 002
என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.

பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.

பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.

பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.

பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.

பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.

இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படி பெறுவது?
அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்

http://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

http://www.stationeryprinting.tn.gov.in/forms.htmவிண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.

தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:

சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.


மக்கள் நல்லுறவு

விமர்சனம்

விமர்சனம்
விமர்சனங்கள் என்பது சுதந்திரம் அதை ஏற்க மனது வேண்டும் இல்லை என்றால் பொது_வாழ்க்கை என்பதற்கு அர்த்தமே இல்லை..

பொறுமை ஒரு அற்புதமான ஆயூதம்.

தரமான வார்த்தைகளில் விமர்சனங்களை வைக்க இயலாத போதே நாம் மனிதராக_வாழும்_தகுதியை இழந்து விடுகிறோம்.

நாம் விமர்சனத்திற்க்கு விமர்சனம் செய்ய தகுதி உடையவராக முதலில்  மாற்றிக் கொள்ளவேண்டும்.

மனிதனை மனம் நோகவைக்காதே அதுவும் ஒரு வகை பாவம்.

என்றும் நட்புடன்

மக்கள் நல்லுறவு

Tuesday, August 9, 2016

V.A.O அவர்களின் பணிகள்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

V.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..? எத்தனை பேருக்கு தெரியும்..?

1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.

2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.

3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.

4. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.

5. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.

6. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.

7. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.

8. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.

9. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.

10. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.

11. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.

12. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.

13. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.

14. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.

15. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.

16. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.

17. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.

18. உழவர்கள் நிலப் பட்டாக்காளை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.

19. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.

20. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.

21. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.

22. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.

23. அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.

24. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை..

மக்கள் நல்லுறவு

பட்டா வகைகள்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது
பட்டா வகைகள்

1.நஞ்சை 
2.புஞ்சை
3.புறம்போக்கு
4.நத்தம் (வீட்டுமனை பட்டா நிலங்கள்)


பட்டாவுக்கு மனு செய்வது எப்படி?

பட்டாவுக்கான விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலரிடம் கிடைக்கும். அதைவாங்கி சர்வே எண், உட்பிரிவு எண், பெயர், கிராமம், முகவரி எல்லாவற்றையும் தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பட்டா விண்ணப்பத்தை அதிகாரிகள் வாங்கும் நாள்

ஒவ்வொரு திங்கள்கிழமையும்,  பட்டா மாறுதலுக்கான விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலர் பெறுவார். உடன் கிராம நிர்வாக அலுவலர் ஒப்புகைச்சீட்டையும் தரவேண்டும்.

மனுதாரர் தனது மனுவுடன் நகல் பிரதியை தந்தால்போதும்.

எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

மனு மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் நடைமுறை

விண்ணப்பித்த தேதியிலிருந்து இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று தாசில்தார் அலுவலத்துக்கு வந்து தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவை அலுவலர் தெரிவிக்கவேண்டும்.

இந்த மனுக்கள் மீது தனது அறிக்கையுடன் முதல் வெள்ளிக்கிழமை தாசில்தார் அலுவலகத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் சென்று சம்பந்தப்பட்ட மண்டல துணைதாசில்தாரிடம் ஒப்படைக்கவேண்டும்.

ஒப்புகைச்சீட்டின் மறுபாதியில் துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே அலுவலகக் கணினியில் மனுவின் விவரத்தை துணை தாசில்தார் பதிவு செய்யவேண்டும்.

ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து இரண்டாவது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் சிட்டாநகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப்பெறவேண்டும்.

தனிப்பட்டா

தனிப்பட்டா என்பது ஒரு தனிநபரின் பெயரில் இருக்கும். தனிப்பட்டா. இதனை வைத்திருக்கும் நபரின் சொத்துக்களை வாங்கிய பின் முறையான ஆவணங்களை வைத்து பட்டா மாறுதல் செய்துகொள்ள முடியும்.

கூட்டுப்பட்டா

ஒரு விவசாயிக்கு 4 மகன்கள். அவரின் சொத்துகள் 2400 சதுர அடிகள் இருக்கிறது. விவசாயியின் சொத்துகளை பிரித்தால் 4 மகன்களுக்கும் தலா 600 சதுர அடி கிடைக்கும். விவசாயியின் நிலம் 245 என்கிற சர்வே எண்ணில் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இந்த சொத்தை நான்காக பிரிக்கும் போது, 245-A, 245-B, 245-C மற்றும் 245-D என சர்வே எண்கள் பிரியும். இதற்கு இன்னொரு பெயர் தான் உட்பிரிவு செய்வது. இதை அத்தனையும் ஒரே ஆவணமாக வைத்து பட்டா வழங்கப்பட்டால் அதுதான் கூட்டுப்பட்டா.

கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற முடியுமா?

எந்த பட்டாவாக இருந்தாலும் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். ஆனால், சர்வே செய்து முறையாக நிலத்தை பிரிக்க வேண்டும். எனவே, சர்வேயருக்கும் விண்ணப்பம் அளிக்கும் நிலை இருக்கிறது. அதனால் சர்வேயருக்கு நிலத்தை அளக்க மனு செய்து விடலாம். சர்வேயருக்குரிய அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தான் உள்ளது. நிலத்தை அளந்து முடித்த பின்பு சர்வேயர் கொடுத்த ஆவணங்களை வைத்து வட்டாட்சியருக்கு நேரடியாக விண்ணப்பிப்பது தான் இந்த கூட்டுப்பட்டாதாரர்களுக்கு சரியான முறை.

பட்டாவில் உள்ள விவரங்கள்

•பட்டா எண்.

•சர்வே எண் மற்றும் உட்பிரிவுகள்.

•கிராமம், வட்டம், மாவட்டம்

•சொத்தின் உரிமையாளர் பெயர் மற்றும் அவரது அப்பா பெயர்.


மக்கள் நல்லுறவு