Tuesday, November 22, 2016

விமர்சனம்

விமர்சனம்
மக்கள் நல்லுறவு

விமர்சனங்கள் என்பது சுதந்திரம் அதை ஏற்க மனது வேண்டும் இல்லை என்றால் பொது_வாழ்க்கை என்பதற்கு அர்த்தமே இல்லை..

அதில் பொறுமை ஒரு அற்புதமான ஆயூதம், தரமான வார்த்தைகளில் விமர்சனங்களை வைக்க இயலாத போதே நாம் மனிதராக_வாழும்_தகுதியை இழந்துவிடுகிறோம்.

நாம் விமர்சனத்திற்க்கு விமர்சனம் செய்ய தகுதி உடையவராக முதலில்  மாற்றிக் கொள்ளவேண்டும், பொருத்தமான இடத்தில் பொருத்தமான பதிலை அளிக்க கற்றுக்கொள்ளவேண்டும், தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யாதே! அதற்க்கு உனக்கு யார் அனுமதி  அளித்தது?

தரம் தாழ்த்தி அடுத்தவனை விளம்பரம், விமர்சனம் செய்வதில் உனக்கு என்ன பயன் யோசி, அடுத்தவனுக்கு வக்காளத்து வாங்கி இங்கு இருப்பவர்களை உன்  நண்பர்களை பகைத்து என்ன பயன்?

உன் பார்வைக்கு நல்லதாய் தெரிந்தது அவன்  பார்வைக்கு இருட்டு, உனக்கு வெளிச்சமாய் இருக்கும் சூரியன் மறுபக்கம் உள்ளவனுக்கு இருட்டு அது தான் விமர்சனம் (வாழ்கை) செய்யும் விமர்சனத்தால் அதனை ஏற்று அவர் சிந்தித்து செயல்படும்படி கருத்து இருக்கவேண்டும்.

உமது கருத்து விமர்சனம் பகையை வளர்க்கும்படி இருந்தால் பொது வாழ்க்கைக்கு நீ லாயிக்கில்லை மரத்தடியும், திண்ணைப் பேச்சு விமர்சனமும் மறைந்து காகிதத்திலும், வாட்ஸ் ஆப்  முகநூலிலும் இன்று விமர்சனம் வருகிறது.

மாற்றம் எதுவாயினும், உமது நடவடிக்கை, செயல், நோக்கம் எதுவாயினும்
மனிதனை மனம் நோகவைக்காதே அதுவும் ஒரு வகை பாவம்!

விமர்சனம் வந்தால் உமது தரப்பு நியாயம் இருந்தால் விளக்கம் கொடு, ஓடி ஓளியாதே, எடுத்த முடிவு சரியென்றால் துணிந்து நீல் துன்பம் நீங்கும்.

விமர்சனம் முலம்  விளக்கம் கொடு!  விளம்பரம் தேடாதே!  விசயத்தை சொல்லு தட்டிக்கொடு! தப்பை சுட்டிக்காட்டு! கொட்டி கொண்டு இருந்தால் நி ஒரு தேள்!

என்றும் நட்புடன்

மக்கள் நல்லுறவு

Wednesday, November 16, 2016

புங்கமரம்

புங்கமரம்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

புங்கமரத்தை பார்த்தீங்கன்னா உடனே அதுக்கு கீழே போய் நில்லுங்க!

சொரியாசிஸ்சை குணப்படுத்தும் புங்க மரம் சுத்தமான காற்றை கொடுக்க கூடியதும், தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மூட்டு வலியை போக்கவல்லதும், உடலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்ய கூடியதும், பசியின்மை, ஈரல் நோய்களை போக்கும் தன்மை கொண்டதுமான புங்க மரத்தின் பயன்கள் பற்றி தெரியுமா. வீட்டின் முன்பு இருக்கக் கூடியது புங்க மரம்.

இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. பூமிக்கு சத்துக்களை தரக்கூடியது. இதன் இலைகள் புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது.
நல்ல சுத்தமான காற்றை கொடுக்கவல்லது. வீட்டுக்கு உள்ளே செல்ல கூடிய நச்சுகிருமிகளை தடுக்க கூடியது. புங்க மரத்து இலைகள், காய்கள், பூ, வேர், பட்டை ஆகியவை மருந்தாகிறது. புங்க விதைகளை பயன்படுத்தி மூட்டு வலி, தோலில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.

புங்க விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை பொடித்து வைத்துக்கொள்ளவும். அரை ஸ்பூன் புங்க விதை பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இதை வடிகட்டி குடிக்கத்தால் மூட்டு வலி, வீக்கம் சரியாகும். தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. புங்க மரத்தின் இலைகள் நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. தோல்நோய்களுக்கு மருந்தாகிறது. இதன் விதைகள் எண்ணெய் நிறைந்ததாக இருக்கிறது. இது ஆஸ்துமா, நெஞ்சக கோளாறுகளுக்கு மருந்தாகிறது. சீயக்காயுடன் புங்க காய் சேர்த்து பயன்படுத்தலாம். புங்க எண்ணெய்யை பயன்படுத்தி சொரியாசிஸ்சுக்கான மருந்து தயாரிக்கலாம்.

புங்க எண்ணெய், பரங்கி பட்டை சூரணம் ஆகியவற்றை தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை பூசினால் சொரியாசிஸ் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். புங்கங் எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.புங்க இலையை பயன்படுத்தி உடல், தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க இலையை, மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிக்கட்டிய பின், துணியில் எடுத்து அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவவும்.

தலையில் பொடுகினால் அரிப்பு இருந்தால் இதை தடவி 10 நிமிடம் கழித்து குளித்தால், அரிப்பு சரியாகும். புங்க இலை தோலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. தோல் மென்மை தன்மை அடைகிறது. அக்கி புண்கள், அம்மை கொப்பளங்கள் சரியாகிறது. புங்க இலையுடன் மஞ்சள் சேர்த்து தேனீராக்கி குடிப்பதன் மூலம் பசியின்மை, ஈரல் வீக்கம் சரியாகும். ஈரல் நோய்களுக்கு மருந்தாகிறது.

புங்க எண்ணெய்யை பயன்படுத்தி மூட்டு வலி, கால் வலி, கீல்வாதத்துக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதை மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ள இடங்களில் தடவி சுமார் ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் வலி சரியாகும். புங்க எண்ணெய், வாத நீரால் ஏற்படும் வீக்கத்தை சரிசெய்யும். மூட்டு வலிக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. நெஞ்சின் மீது பூசுவதால் நெஞ்சக சளி, இருமல் குறைகிறது.

மக்கள் நல்லுறவு

Monday, November 14, 2016

கதை... நல்லதை செய்

முருங்கை எவ்வளவு வந்தாலும் பையில் நிரப்பி தோளில் வைத்துக் கொண்டால், ஒன்பது கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது ராமசாமியின் வழக்கம்!

முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்!
ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்!

இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார்!

பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை, ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்! காரணம் ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது! ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச் செல்ல, சிறிது நேரத்தில் பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க, அவருக்காக மளிகைக்காரர் எடைபோட அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது!

அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே, இத்தனை வருடங்களாக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே, அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்!

நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்! நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்! கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று,

எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார்! அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க, ஒன்பது கிலோ தான் இருந்தது. வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்! இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா, கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போன ராமசாமி, அய்யா மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்ல, ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன் இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது!

தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்! இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும் அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது!

இது தான் உலக நியதி!
நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும்.
நல்லதை தந்தால் நல்லது வரும்,
தீமையை தந்தால் தீமை வரும்!
வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்,
ஆனால் நிச்சயம் வரும்!
ஆகவே நல்லதை மட்டுமே தருவோம்,

நல்லதை மட்டுமே விதைப்போம்!!

Sunday, November 6, 2016

Mobile phone diary


Mobile phone diary


*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய

*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.

*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய

*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has. 
*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.

If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345

*#3925538# – used to delete the contents and code of wallet.


Friday, November 4, 2016

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...!


மக்கள் நல்லுறவு பகிர்கிறது

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...!

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :
93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:
Toll Free No :- 180011400,
94454 64748,
72999 98002, 72000 18001,
044- 28592828
மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:
044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்:
044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்:
044-25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்:
044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்றல்:
95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம்:
044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்:
09383337639
போலீஸ் SMS :              
9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :
9840983832
போக்குவரத்து விதி மீறல் SMS :      
98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு:
9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக:
044-28551155
பெண்களுக்கான உதவி :
044-23452365
தமிழ்நாடு மகளிர் ஆணையம்:
044-25264568
விலங்குகள் பாதுகாப்பு
044 – 22354959 / 22300666
போலீஸ் :
100
தீயணைப்புத்துறை
101
ஆம்புலன்ஸ் :
  102, 108
போக்குவரத்து விதிமீறல்
103
விபத்து
100, 103
பெண்களுக்கான அவசர உதவி :
1091
குழந்தைகளுக்கானஅவசர உதவி :
1098
அவசர காலம் மற்றும் விபத்து :
1099
முதியோர்களுக்கான அவசர உதவி:
1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி:
1033
கடலோர பகுதி அவசர உதவி :
1093
ரத்த வங்கி அவசர உதவி :
1910
கண் வங்கி அவசர உதவி :
1919

நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.

நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.