Wednesday, June 27, 2018

பெருகி வரும் பைக் விபத்துக்கள்...



படிக்கும் மாணவர்கள் இளைஞர்களுக்கு அதிவேக பைக்குகள் வாங்கி கொடுப்பது ஆபத்தையும் சேர்த்து விலைக்கு வாங்குவது போன்றாகி விட்டது.

அன்று 50Cc மொபெட், ஸ்கூட்டர், 100 Cc பைக் என படிப்படியாக வேகத்தை கூட்டி சாலைகளில் உலாவந்தனர்.

இன்று பெருமைக்கு 150 Cc லிருந்து 300 Cc வரை வாங்கி நேரிடையாக வாங்கி கொண்டு நெருக்கடி மிக்க சாலைகளில் அதிவேகமாக வருகின்றனர்.

இதில் இளைஞர்களுக்குள் போட்டி ரேஸ் விளையாட்டு, இரவு நேர வீரசாகசம்.

கண் இமைக்கும் நேரத்தில் விபத்து உண்டானால் நேரிடையாக உயிரிழப்பு அல்லது நன்றாக அடிபடும்படி பலத்த சேதம் உண்டாகும்.

போதக்குறைக்கு நவின பைக்குகளின் வடிவமைப்புகள், ஆக பாதிப்பது வேதனையடைவது குடும்பங்கள் தானே!

அதிவேக பைக்குகள் நம் சாலைக்கும், நமக்கும் ஏற்றதல்ல, காரணம் நாம் இன்றும் சாலை விதிகளை முழுமையாக பின்பற்றுவதில்லை.

கொஞ்சம் யோசியுங்கள் மக்களே...

Tuesday, June 26, 2018

அந்த நாலு விசயம்

மக்கள் நல்லுறவு   பகிர்கிறது  

*நான்கு நபர்களை புறக்கணி*

🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*

😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*

😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*

💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்             

*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*

🙋🏻‍♂பொறுமை
🙋🏻‍♂சாந்த குணம்
🙋🏻‍♂அறிவு
🙋🏻‍♂அன்பு

*நான்கு நபர்களை வெறுக்காதே*

👳🏻தந்தை
💆🏼தாய்
👷🏻சகோதரன்
🙅🏻சகோதரி

*நான்கு விசயங்களை குறை*

👎🏽உணவு
👎🏽தூக்கம்
👎🏽சோம்பல்
👎🏽பேச்சு

*நான்கு விசயங்களை  தூக்கிப்போடு*

🏃🏻துக்கம்
🏃🏻கவலை
🏃🏻இயலாமை
🏃🏻கஞ்சத்தனம்

*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*

👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

*நான்கு விசயங்கள் செய்*

🌷 தியானம் , யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்

☘☘☘☘☘☘☘☘☘
வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்....

மதுவின் மீது இறைவனின் பார்வை!



மதுவோடு ஈடுபடுவர்கள் அனைவரும் இறைவனால் சபிக்கப்பட்டவர்களே!

மதுபானம் தயாரிக்க அனுமதி கொடுத்தவன்,

அதற்க்கு தேவையான மூலப்பொருட்களை தயாரிப்பவன்,

அதை கொண்டு  மது பானத்தை தயாரிப்பவன்,

மதுபானங்களை விற்பனை கேந்திரங்களுக்கு கொண்டு செல்பவன்,

மது பானம் விற்க இடத்தை அளித்து ஏற்பாடு செய்தவன்,

யாருக்காக மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டதோ அதை வாங்கி ஊரெல்லாம்  விற்பனை செய்பவன்,

மதுபானங்களை பரிமாறுபவன்,
மதுபானங்களை குடிப்பவன்,

மதுபானக் கடையின் முலம்,
விற்பனை முலம் நேரிடையாக,
மறைமுகமாக பயனடைந்தவன்,

மதுபானங்கள் விற்று வரும் பணத்தை பயன்படுத்துபவன்

மதுபானங்களை வாங்குபவன்
மதுபானங்கள் யாருக்காக வாங்கப்பட்டதோ அவன்

ஆகிய அனைவரின்  மீதும் இறைவனின்  சாபம் மெல்ல மெல்ல இறங்குகிறது.

மதுவின் மூலம் கிடைக்கும் வருமானம் இன்று இப்போழுது மகிழ்ச்சியாய் இன்பமாய் தெரியும்,

இறுதியில் துன்பத்தில் முடியும்!

மதுவின் மூலம் சேர்த்த செல்வம் செல்வங்களை பாதிக்கும்,

மதுவின் மூலம்,  மதுவை கொண்டு  பயனடைந்தவனின் வெற்றி இறுதியில் தோல்வியில் முடியும்.

தேவையா உனக்கு?

வாய்ப்பு


நீ எந்த துறையில் இருந்தாலும் சரி,
பதவியை நீ எப்படி வாங்கியிருந்தாலும் சரி,
உன் பதவிக்கு உண்டான கடமைகளை 50 சதவிதமாவது செய்!

அதை விட்டு பதவி வாங்கி  படுத்துக்கொண்டு, தலைகணத்தோடு, பதவியை வைத்து சம்பாதித்துக்கொண்டு, ஊழல் செய்து, உன் சொந்தக்காரனுக்கு மட்டும் பயனளித்துக்கொண்டு இருந்தால் விரைவில் 0% ஆகிவிடுவாய் மறந்து விடாதே!

மக்கள் பார்வையிலும், இறைவன் பார்வையிலும் வீணாக தெரிவாய்!

தற்பொழுது நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய் யோசி!

இன்று முதல் உன்னை மாற்றிக்கொள்!

வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது!

கிடைத்த வாய்ப்பை நழுவவிடாதே!