Sunday, March 13, 2016

வாக்கு வாக்குறுதி




மக்கள் நல்லுறவு பகிர்கிறது

சிந்தித்து வாக்களீப்பிர் வாக்குறுதிகளை நம்பி வாக்குகளை பணத்திற்க்காக விற்று விடாதிர்கள் கட்சிகளிடையே குழப்பம்,  உண்மையில் அவர்களுக்கே நம்பிக்கையில்லை, மக்களின் மன நிலையை ஒர் அளவு தான் கணிக்க முடியும், பணத்தை கொடுத்து சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கை வளர்ச்சி கண்ட கட்சிகளிடையே, மயங்கி விடாதிர்கள் மக்களே!

கட்சியினால் வாய்ப்பு கிடைத்த அமைச்சர்கள்  தமக்கு கிடைத்த வாய்ப்பை உரிய  நேரத்தில் மக்கள் மனதில் பதியும் படி நன்மை செய்து இருந்தால் மிண்டும் வாய்ப்பு கிடைக்கும்
அப்படி செய்தார்களா, சிந்தித்து பாருங்கள் மக்களே, மந்திரிகளே அப்படி நன்மைகள் நடந்ததா? 

போட்டியிடும் கட்சிகளுக்கு கலக்கம், குழப்பம், காட்சி கடைசி நிமிடம் வரை மாறும்
மக்களின் தீர்ப்பில் தான் கட்சிகளின் எதிர்காலம் அடங்கியுள்ளது, அது போலத்தான் மக்களின் எதிர்காலமும் தேர்தலில் அடங்கியுள்ளது எனவே வாய்ப்பு உண்மையிலேயே நம்மிடம் தான் உள்ளது தவறு செய்து விடவேண்டாம், வீண் ஆக்க வேண்டாம்.

நமக்கு என்ன நினைத்து வாக்களிக்க மறந்து வீட்டில் இருந்து விடவேண்டாம், உரிமையை விட்டுக்கொடுத்து விடவேண்டாம்.

சிந்தனை செய்

தேர்தலினால் பாதிப்பு மக்களுக்கே பணப்புழக்கம் கிடையாது, தொழில் மந்தம், மக்களுக்கு பொருட்களை வாங்க விற்க்க முடியாது,  நிம்மதியாக வியாபாரம் செய்யமுடியாது
பயம் தேர்தல் காரணம் காட்டி பணம் பிடுங்கப்படும் என்ற அச்சம், உண்மையில் எந்த அரசியல்வாதியும் இதில்  மாட்ட மாட்டான், மாறாக  ஆஸ்பத்திரிக்கு பணம் கட்டுபவர்கள், திருமணத்திற்க்கு நகைவாங்குபவர்கள், இடம் வாங்குபவர்கள், அத்தியாவசிய தேவைக்கு பொருட்களை வாங்குபவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பதித்தவர்கள் இப்படி அதிகமாக  நடுத்தர குடும்பம், Business செய்பவர்கள் அதிகமாக பாதிப்படைவார்கள்.

இதற்க்கு காரணம் யார்?
ஒட்டுக்கு பணபட்டுவாடா இது தேவையா?  சிந்தனை செய் அரசியலில் உள்ளவர்கள் செயல்கள் தற்போது  அடுத்தவனை மட்டம் தட்டி, அசிங்கமாக திட்டி, தப்பை சுட்டிக் காட்டி, அதை ஊரெல்லாம் காட்டி, தெருவெல்லாம் சுவரொட்டி, பேட்டி, இது தான் ஆரோக்கிய அரசியலா?
கட்சி, கொள்கை, இலட்சியம்,மக்கள் சேவை, தொண்டு, மறைந்து லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, வந்துவிட்டது,அரசியல் என்பது  பணத்தை முதலிடு இட்டு சாம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது, இதில் இலவசம் மக்களுக்கு தரும் லஞ்சம், முதலில் மக்களே இந்த லஞ்சம் நமக்கு தேவையா?

சிந்தனை செய்,
முதலில் சரியான பாதையை தேர்ந்தெடு, முடிந்த முயற்சி செய், உழைப்பை கொடு,
உன் உழைப்பை நம்பு, உன் மீது நம்பிக்கை வை, அது என்றும்  நிலைக்கும்,  உன்னையும் உன் குடும்பத்தையும் வாழ வைக்கும், கடமையை செய்  பலன் கிடைக்கும், இது உனக்கு மட்டும்

மக்கள் நல்லுறவு

பணப்பட்டுவாடா

 மக்கள் நல்லுறவு

தேர்தல் ஆணையம் உண்மையிலேயே பணம் பட்டுவாடாவை தடுக்க நினைக்கும் எனில் பொதுமக்கள் பணத்தை சாலையில் நின்று சோதனை என்ற பெயரில் வியாபாரிகள் பணத்தை கைப்பற்றுவதை தவிர்த்து, பணம் கைம்மாறும் தகவலை, பணப்பட்டுவாடா தகவலை அளிக்கும் மக்களுக்கு கைப்பற்றும் பணத்தில் 25% கொடுக்கப்படும்,  தகவல் ரகசியமாக வைக்கப்படும், பணத்தை  வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிப்பு செய்தால் பல பேர் காட்டிக் கொடுப்பதில் போட்டி போடுவார்கள், மக்கள் பயனடைவார்கள், தேர்தல் வேலை நிம்மதியாக நடக்கும்.

பணம் அளிக்கும் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவு அமூல்படுத்த வேண்டும்.

மக்கள் நல்லுறவு

Friday, March 11, 2016

Pan card




மக்கள் நல்லுறவு பகிர்கிறது 
      
நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. 
பான் கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.

1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number (PAN) என்பதின் சுருக்கமே.


2. அதன் முக்கியதுவம் என்ன?
வங்கி கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தையில் முதிலீடு செய்வ தற்கும் அடிப்படைத் தேவை ஆகி விட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம் கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.


3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பி க்க முடியும்.


4. அதற்கு என்ன செலவாகும்?
இதற்காக ரூபாய் 94/-,  NRIகளுக்கு ரூபாய் 744/-மட்டுமே செலவாகும். புரோக்கர் மூலமாக பெறுவதற்கு ரூபாய் 250/-முதல் செலவாகும்.

5. PAN CARD – ன் அவசியம்:
1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.

2) வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)
3) ரூ.50,000/-க்குமேல் வங்கியில் Fixed Deposit செய்யும்போது அவசிய ம்.
4) அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கி ல் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000 தாண்டும் போது அவசிய ம்.
5) ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணை யங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.
6) வங்கி கணக்கு துவங்கும் போது.
7) தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது.
8) தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதி க்கு செலுத்தும் கட்டணம் ரூ. 25,000/- மிகும் போது அவசியம்.
9) ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிக மாக செலுத்தும் போது அவசியம்.
10) வருமான வரி ரிட்டன தாக்கல் செய்ய அவசியம்.
11) சேவை வரி மற்றும் வணிக வரி துறையில் பதிவு சான்று பெற Pan Card கட்டயமாகும்.
12) முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடுசெய்யும் போதுதான் பான்கார்டு அவசிய மிருந்தது. ஆனால், தற்போது எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.

மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.

இதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 

பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினை க்கின்றனர். 

சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையை விட அதிக மான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்தும் வருகின்றனர்.

“மத்திய அரசு 2007 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக் கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கியுள்ளது.

மேலும், இந்தக் கார்டை வாங்கினால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமான வரி செலுத்த வேண்டி யிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. 

அனைவரையும் வருமானவரம்புக்குள் கொண்டு வருவதற் காகவே இந்த பான்கார்டு
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பான்கார்டு பெறுவதற்கான நடை முறைகள் தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.
பான்கார்டு பெற விரும்புவோர்:



வருமான வரித்துறையின் Form 49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான்றிதழை இணைக்க வேண்டும்.


இந்த விண்ணப்பப் படிவத்தை

http://www.myutiitsl.com/PAN_ONLINE/PANApp






(or)



ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம்.


அப்ளை செய்யப்பட்ட கார்டி-ன் Status அறிய

இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.
விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.



01. பள்ளி டிசி 
02. பிளஸ் டூ சான்றிதழ் 

03. தொலைபேசி கட்டண ரசீது
04. கல்லூரி் சான்றிதழ்

05. வங்கிக் கணக்கு விவரம்
06. வங்கிக் கணக்கு விவரம் 
07. வாட்டர் பில் 

08. பாஸ்போர்ட்
09. ரேசன் கார்டு
10. வீட்டு வரி ரசீது 

11. வாக்காளர் அடையாள அட்டை
12. பாஸ்போர்ட் 

13. வீட்டு வரி ரசீது
14. வாக்காளர் அட்டை 

15. ஓட்டுனர் உரிமம்
16. பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்

17. மின் கட்டண ரசீது
18. வீட்டு வாடகை ரசீது

விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.


உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற என்ற இணையத்தளத்தை நாடலாம்.

சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.


ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான்கார்ட் உதவுகிறது.
பான் கார்டில் உள்ள எண்- எழுத் துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். 


அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் ACHPL456B என்று வைத்துக் கொள்வோம்.


முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப் பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டாஎன்பதை குறிக்கிறது.


C – Company
P – Person
H – HUF(Hindu Undivided Family)
F – Firm
A – Association of Persons (AOP)
T – AOP (Trust)
B – Body of Individuals (BOI)
L – Local Authority
J - Artificial Juridical Person
G – Government



5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும். 

அடுத்துவரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையதுதான்

மத்திய வருமான வரித்துறை அலுவ லகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்கப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம். 

எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமினேட்கார்டை பெறவேண்டும் என விரும்பினால் மட்டும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். 

இவ்வாறு பெறும்போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதே போல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றாலோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

இனி வரும் காலங்களில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. 

எனவே, அதை (PAN CARD) இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்,,

மக்கள் நல்லுறவு 

மனிதா மனிதா

மக்கள் நல்லுறவு

மனிதா!  மனிதா ' மனிதனாக மனிதனை மனிதாபிமானம் கொண்டு மண்ணில் வாழ கற்றுக்கொள் ..

இறைவன் நம்மை இம் மண்ணால் படைத்தார் அதனால் தான் மண்ணாசை கொண்டு வாழ்கிறோம், அதனால் தான் நம் பெயர் மன் நி தன் மனிதன்

தன்னை போல் உள்ளவர்கள் மிது அன்பை காட்டாமால் மண் மிது ஆசை கொண்டவன் மனிதன், இறுதியில் மண்ணைவிட்டு மண்ணுக்குள் உறங்கும் மனிதனே! உம்மை போன்ற மனிதனிடம் மனசுவிட்டு பேசு, மானத்தோடு வாழ், மனிதாபிமானத்தோடு பழகு'

நம்மை தாங்கி வாழ வைக்கும் மண்ணை காலால்  மிதித்து தான் வாழ்க்கையை நாம் நகர்த்துகிறோம், நன்மை செய்யும் மண்ணிற்கே இந்த நிலை என்றால் நி செய்த,  செய்யப் போகும் செயல்களை சிந்தித்துப் பார்

ஒவ்வொரு மனிதனும் நல்ல மனிதன் (இம் மண்ணில் பிறக்கும்போது) ஒவ்வொரு மனிதனும் மா மனிதனாக இருக்க வேண்டும் இம் மண்ணை விட்டு செல்லும்போது, இருக்கும் போதும், இறக்கும் போதும்  இவர் போல யார் என்று சக மனிதன் சொல்லும் படி ஒவ்வொரு செயலும் இருக்க வேண்டும்.

நம்மை மண்ணில் படைத்து,  இம் மண்ணில் மனிதனாய் பிறந்து, மண்ணில் விளைந்ததை உண்டு வளர்ந்து, மன்னவளை மணந்து மன்னானக உயர்ந்து, மண்ணை ஆண்டு, மாண்டு,மண்ணுக்குள் செல்பவன் மனிதன்.

மணிக்கு (பணம்) ஆசைப்படமால்  மனிதநேயம், சொல்,  செயல்  மக்களுக்கு நன்மை, சேவை மணப்பான்மை உள்ளவர்கள் தான் மக்களின் மனதில் மாமனிதனாக காட்சி அளிப்பார்கள் , முதலில் நல்ல மனிதனாக வாழ முயற்சி செய்வோம்.

மக்கள் நல்லுறவு


Tuesday, March 1, 2016

நாளைய தேவை சிந்தனை

மக்களே சிந்தனை கானும் இடம் எல்லாம் காகிதம் கால்தடம் எல்லாம் கட்டிடம்

நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உண்ணகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....

நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....

பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....

iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது
Windows
ஐ'யும் Vistaவை'யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....
விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?

விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பிட முடியாது _
-உண்மை இன்று புரியாது.
விவசாயத்தை நேசித்தால் பகிருங்கள்......
விவசாயத்தை நேசித்தால் பகிருங்கள்......🌿🌾🍀🌾🌾🏃🏇