Sunday, March 13, 2016

வாக்கு வாக்குறுதி




மக்கள் நல்லுறவு பகிர்கிறது

சிந்தித்து வாக்களீப்பிர் வாக்குறுதிகளை நம்பி வாக்குகளை பணத்திற்க்காக விற்று விடாதிர்கள் கட்சிகளிடையே குழப்பம்,  உண்மையில் அவர்களுக்கே நம்பிக்கையில்லை, மக்களின் மன நிலையை ஒர் அளவு தான் கணிக்க முடியும், பணத்தை கொடுத்து சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கை வளர்ச்சி கண்ட கட்சிகளிடையே, மயங்கி விடாதிர்கள் மக்களே!

கட்சியினால் வாய்ப்பு கிடைத்த அமைச்சர்கள்  தமக்கு கிடைத்த வாய்ப்பை உரிய  நேரத்தில் மக்கள் மனதில் பதியும் படி நன்மை செய்து இருந்தால் மிண்டும் வாய்ப்பு கிடைக்கும்
அப்படி செய்தார்களா, சிந்தித்து பாருங்கள் மக்களே, மந்திரிகளே அப்படி நன்மைகள் நடந்ததா? 

போட்டியிடும் கட்சிகளுக்கு கலக்கம், குழப்பம், காட்சி கடைசி நிமிடம் வரை மாறும்
மக்களின் தீர்ப்பில் தான் கட்சிகளின் எதிர்காலம் அடங்கியுள்ளது, அது போலத்தான் மக்களின் எதிர்காலமும் தேர்தலில் அடங்கியுள்ளது எனவே வாய்ப்பு உண்மையிலேயே நம்மிடம் தான் உள்ளது தவறு செய்து விடவேண்டாம், வீண் ஆக்க வேண்டாம்.

நமக்கு என்ன நினைத்து வாக்களிக்க மறந்து வீட்டில் இருந்து விடவேண்டாம், உரிமையை விட்டுக்கொடுத்து விடவேண்டாம்.

சிந்தனை செய்

தேர்தலினால் பாதிப்பு மக்களுக்கே பணப்புழக்கம் கிடையாது, தொழில் மந்தம், மக்களுக்கு பொருட்களை வாங்க விற்க்க முடியாது,  நிம்மதியாக வியாபாரம் செய்யமுடியாது
பயம் தேர்தல் காரணம் காட்டி பணம் பிடுங்கப்படும் என்ற அச்சம், உண்மையில் எந்த அரசியல்வாதியும் இதில்  மாட்ட மாட்டான், மாறாக  ஆஸ்பத்திரிக்கு பணம் கட்டுபவர்கள், திருமணத்திற்க்கு நகைவாங்குபவர்கள், இடம் வாங்குபவர்கள், அத்தியாவசிய தேவைக்கு பொருட்களை வாங்குபவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பதித்தவர்கள் இப்படி அதிகமாக  நடுத்தர குடும்பம், Business செய்பவர்கள் அதிகமாக பாதிப்படைவார்கள்.

இதற்க்கு காரணம் யார்?
ஒட்டுக்கு பணபட்டுவாடா இது தேவையா?  சிந்தனை செய் அரசியலில் உள்ளவர்கள் செயல்கள் தற்போது  அடுத்தவனை மட்டம் தட்டி, அசிங்கமாக திட்டி, தப்பை சுட்டிக் காட்டி, அதை ஊரெல்லாம் காட்டி, தெருவெல்லாம் சுவரொட்டி, பேட்டி, இது தான் ஆரோக்கிய அரசியலா?
கட்சி, கொள்கை, இலட்சியம்,மக்கள் சேவை, தொண்டு, மறைந்து லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, வந்துவிட்டது,அரசியல் என்பது  பணத்தை முதலிடு இட்டு சாம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது, இதில் இலவசம் மக்களுக்கு தரும் லஞ்சம், முதலில் மக்களே இந்த லஞ்சம் நமக்கு தேவையா?

சிந்தனை செய்,
முதலில் சரியான பாதையை தேர்ந்தெடு, முடிந்த முயற்சி செய், உழைப்பை கொடு,
உன் உழைப்பை நம்பு, உன் மீது நம்பிக்கை வை, அது என்றும்  நிலைக்கும்,  உன்னையும் உன் குடும்பத்தையும் வாழ வைக்கும், கடமையை செய்  பலன் கிடைக்கும், இது உனக்கு மட்டும்

மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment