Friday, March 11, 2016

மனிதா மனிதா

மக்கள் நல்லுறவு

மனிதா!  மனிதா ' மனிதனாக மனிதனை மனிதாபிமானம் கொண்டு மண்ணில் வாழ கற்றுக்கொள் ..

இறைவன் நம்மை இம் மண்ணால் படைத்தார் அதனால் தான் மண்ணாசை கொண்டு வாழ்கிறோம், அதனால் தான் நம் பெயர் மன் நி தன் மனிதன்

தன்னை போல் உள்ளவர்கள் மிது அன்பை காட்டாமால் மண் மிது ஆசை கொண்டவன் மனிதன், இறுதியில் மண்ணைவிட்டு மண்ணுக்குள் உறங்கும் மனிதனே! உம்மை போன்ற மனிதனிடம் மனசுவிட்டு பேசு, மானத்தோடு வாழ், மனிதாபிமானத்தோடு பழகு'

நம்மை தாங்கி வாழ வைக்கும் மண்ணை காலால்  மிதித்து தான் வாழ்க்கையை நாம் நகர்த்துகிறோம், நன்மை செய்யும் மண்ணிற்கே இந்த நிலை என்றால் நி செய்தசெய்யப் போகும் செயல்களை சிந்தித்துப் பார்

ஒவ்வொரு மனிதனும் நல்ல மனிதன் (இம் மண்ணில் பிறக்கும்போது) ஒவ்வொரு மனிதனும் மா மனிதனாக இருக்க வேண்டும் இம் மண்ணை விட்டு செல்லும்போது, இருக்கும் போதும், இறக்கும் போதும்  இவர் போல யார் என்று சக மனிதன் சொல்லும் படி ஒவ்வொரு செயலும் இருக்க வேண்டும்.

நம்மை மண்ணில் படைத்துஇம் மண்ணில் மனிதனாய் பிறந்து, மண்ணில் விளைந்ததை உண்டு வளர்ந்து, மன்னவளை மணந்து மன்னானக உயர்ந்து, மண்ணை ஆண்டு, மாண்டு,மண்ணுக்குள் செல்பவன் மனிதன்.

மணிக்கு (பணம்) ஆசைப்படமால்  மனிதநேயம், சொல்செயல்  மக்களுக்கு நன்மை, சேவை மணப்பான்மை உள்ளவர்கள் தான் மக்களின் மனதில் மாமனிதனாக காட்சி அளிப்பார்கள் , முதலில் நல்ல மனிதனாக வாழ முயற்சி செய்வோம்.

மக்கள் நல்லுறவு


No comments:

Post a Comment