Thursday, July 7, 2016

சளியால் தொல்லை

மக்கள் நல்லுறவு  பகிர்கிறது

சளியால் தொல்லை
உடலுக்கு இயற்கையாக வரும் நோய்களை விட, செயற்கையாக வரும் நோய்கள் இன்று அதிகரித்துள்ளன. அதற்கு நாம் சாப்பிடும் உணவும், வாழ்வியல் முறையும் முக்கிய காரணமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, ஆட்டிப்படைக்கும் நோய் எது என்றால், அது சளித்தொல்லை மட்டுமே.

சனி விட்டாலும், சளி விடாது என்று கிராமங்களில் பழமொழி சொல்வதுண்டு. சளியை பொருத்த வரை, எந்த மருந்து சாப்பிட்டாலும் அது தற்காலிக நிவாரணம்தான். முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் போது, சிகிச்சை எடுத்துக் கொள்ளாமலேயே நோய் நீங்கி விடும். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது, சளி பிடித்தால் விடாது.

சளியை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்ற பாதிப்பு உண்டாகிவிடும். சளி உண்டாக பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை முக்கிய காரணமாகிறது. மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளி, மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை.

நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருக்க, உடலில் இயற்கையாக உண்டாகும் சளி, அளவுக்கு மீறி, அதிகரித்து வேதனையை உண்டாக்குகிறது. பெருகிய சளியை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

சளி, இயற்கையாக கிடைக்கும் மூலிகை மருந்துகளுக்கு கட்டுப்படும். மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுகள். இவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்தால், சளியை கட்டுப்படுத்தலாம். சளியை கட்டுப்படுத்தி முழுமையாக குணப்படுத்தும் இயற்கை மருந்தாக, கருந்துளசி பயன்படுகிறது. இவை சளித் தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பால், தயிர் போன்ற உணவுகளையும் நன்கு சாப்பிடும் அளவுக்கு, வலு தரும் மூலிகையாக கருந்துளசி பயன்படுகிறது.

கருந்துளசியின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. சளிக்கு இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடித்தால், பாலின் ஒவ்வாமையால் ஏற்படும் கபம் நீங்கும். இதை நீரில் போட்டு, கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க, ஐந்து  அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.

தினமும் அதிகாலையில், இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளி நீங்கும்.


மக்கள் நல்லுறவு  

Monday, July 4, 2016

கோவை வடக்கு கவுண்டம்பாளையம் 44 வார்டு பகுதி பொதுமக்களின் புகார் :

கோவை மக்கள் நல்லுறவு

கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் கோவை வடக்கு 44 வார்டு பகுதி பொதுமக்களின் புகார் :

இங்கு குடிதண்ணிர் 8 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது, அதுவும் முறையாக இல்லை குறிப்பிட்ட நேரம் இல்லை, தண்ணிர் திறந்து விடுபவர் வசதிக்கேற்ப்ப விடப்படுகிறது.

போதக்குறைக்கு வாரம் ஒருமுறை திறந்துவிட வார்டுக்குள் விடு வீடாக கலெக்சன் செய்து கொடுக்கிறார்கள், இருப்பினும் விநியோகம் இல்லை.

மாநகராட்சியில்  குடிநீர் கட்டணத்தொகை மட்டும் மாதம் மூன்று முறை மட்டும் தண்ணிர் சப்ளை செய்து விட்டு ஆயிரக்கணக்கில் பில் தொகை வருகிறது, இது மாநகராட்சியின் நூதன வசூல்.

குறைகள் :
குடிநீர் மீட்டர் ரீடிங் சரியாக பார்பது இல்லை,  அதிகமான தொகை வசூல்,
சீரான விநியோகம் இல்லை, பண வசூல், மாமன்ற உறுப்பினர் 44 ம் வார்டு இதை கண்டுகொள்வதில்லை, வார்டுகளில் இது போன்ற குறைகளை எடுத்து சொல்ல  முதலில்  ஒன்று சேருவதில்லை, என புகார் தெரிவித்தனர். .

இதற்க்கு பதில் அளிப்பவர்கள் யார்?

மாநாகராட்சி நடவடிக்கை எடுக்குமா? 
ஒன்றுபட்டால் தான் உண்டு தீர்வு

மக்கள் நல்லுறவு

பகிரவும் ...

Blood


மக்கள் நல்லுறவு  பகிர்கிறது

இரத்தத்தை சுத்தமாக வைக்க எளிய வழிகள் :-

நமது உடம்பில் ஒரு சுரப்பி உள்ளது. அது சுரக்கும் ஒரு நீரைக் கொண்டு உலகத்தில் உள்ள அனைத்து நோய்களைக் குணப்படுத்தலாம். அந்த சுரப்பியின் பெயர் எலும்பு மஜ்ஜைகள். அது சுரக்கும் நீரின் பெயர் சுத்தமான "இரத்தம்". இரத்தத்தில் எல்லாப் பொருளும் நல்ல பொருளாக தேவையான அளவு வைப்பதே இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி.

இரத்தத்தில் எத்தனை பொருள் இருக்கிறது? அவை என்னனென்ன என்பதைப் பார்ப்போம். இரத்தத்தில் மொத்தம் நிறைய பொருள் இருக்கிறது. ஆனால் அதை ஐந்து வகையாக சுலபமாகப் பிரிக்கலாம். அவை நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்.

1. நிலம் [உணவு] [மண்]
நாம் சாப்பிடும் உணவு இரத்தமாக மாறுகிறது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அப்படிக் கிடையாது. சாப்பிடுகிற உணவு வாயில், வயிற்றில் குடலில் ஜீரணமாகி அதில் உள்ள சத்து பொருட்கள் இரத்தத்தில் கலக்கின்றன. இரத்தம் என்பது உணவு மட்டும் கிடையாது. உணவு நேரடியாக இரத்தமாக மாறுவது கிடையாது. உணவு இரத்தத்தில் சில பொருட்களைக் கலக்கிறது. இது மண் சம்பந்தப் பட்ட பொருள்கள். நாம் சாப்பிடுகிற உணவில் சர்க்கரை, புரோட்டீன், விட்டமின், மினரல் போன்ற பொருள்கள் உள்ளது. இவை மண் சம்பந்தப்பட்ட பொருள்கள் எனப்படும்.

2. காற்று
உணவே மருந்து, மருந்தே உணவு என்று கூறுவார்கள். உண்மை. உணவு மருந்தாகச் செயல்படும். ஆனால் உணவு மட்டுமே மருந்தாகச் செயல்படாது. உணவை சரியான முறையில் ஜீரணம் செய்வதால் நோய்கள் குணப் படுத்தலாம். ஆனால் முழுமையாகக் குணப்படுத்த முடியாது. உணவு மட்டுமே மருந்து என்று கூறினால் உணவை மட்டும் சரியாக சாப்பிட்டு விட்டு மூக்கை அடைத்து வைத்துக் கொண்டால் உயிரோடு இருக்க முடியுமா? உணவு மூன்று வேளைதான் சாப்பிடுகிறோம். ஆனால் காற்று 24 மணி நேரமும் சுவாசிக்கிறோம். எனவே காற்றும் ஒரு மருந்து தான். காற்றில் உள்ள ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற காற்று சம்பந்தப்பட்ட பொருள்கள் மூக்கின் வழியாக நுரையீரலுக்குச் சென்று நுரையீரலின் வழியாக இரத்தத்தில் கலக்கின்றன. எனவே இரத்தத்தில் காற்று சம்பந்தப்பட்ட பொருள்கள் காற்று வழியாக கலக்கின்றன.

3. நீர்
நாம் குடிக்கும் நீரில் உள்ள சத்துப் பொருள்கள் சிறுநீரகம் பிரித்து இரத்தத்தில் கலக்கிறது. இவை நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் என்று பெயர். எனவே குடிக்கும் தண்ணீரின் மூலமாக இரத்தத்தில் நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் கலக்கின்றன. தண்ணீர் குடிக்காமல் நாம் உயிர் வாழ முடியுமா? எனவே தண்ணீரும் மருந்துதான். அதைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.

4. ஆகாயம் [தூக்கம்]
நான்கு நாள் தூங்காமல் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியுமா? எனவே தூக்கமும் ஒரு மருந்து. தூக்கத்தின் மூலமாக ஆகாய சக்தி எனப்படும் காலியிடம் இரத்தத்தில் கலக்கிறது. உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களிலும் காலி இடம் இருக்கும். இரும்பில் கூட காலியிடம் இருக்கும். ஆனால் அது கண்ணுக்குத் தெரியாது. அதே போல் ஆகாய சக்தி என்ற காலியிடம் இரத்தத்தில் இருக்கிறது. இது குறையும் பொழுது நமக்கு தூக்கம் வரும். தூங்கினால் இது அதிகரிக்கும். அதிகரித்தால் நமக்கு சக்தி கிடைக்கும். எனவே தூக்கமும் ஒரு மருந்து. தூங்காமல் உலகத்தில் யாரும் உயிரோடு இருக்க முடியாது. எனவே தூக்கத்தின் மூலமாக இரத்தத்திற்கு ஆகாய சக்தி என்கிற சக்தி கிடைக்கிறது.

5. நெருப்பு [உழைப்பு]
இரத்தத்திற்கு சூடு தேவைப்படுகிறது. இரத்தம் சூடாக இருந்தால் தான் வீரியம். நாம் கை, கால் அசைப்பதன் மூலமாக உடலில் உள்ள தசைகளுக்கும் எலும்புகளுக்கும் அசைவுகள் என்ற உடல் உழைப்பைக் கொடுப்பது மூலமாக அது இயக்க சக்தியாக மாறி வெப்பசக்தியாக மாறி இரத்தத்தில் கலக்கிறது. நாம் உடலில் எந்த அசைவும் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் உடல் முழுவதும் கொப்பளங்களும் புண்களும் வரும். உடலில் அசைவுகள் இருக்க வேண்டும். நாம் உழைக்க வேண்டும். உழைப்பு என்ற இயக்கம் இரத்தத்திற்கு உஷ்ணத்தைக் கொடுக்கிறது. நாம் குழந்தையாக இருக்கும் போது ஏன் ஒரு இடத்தில் அமராமல் ‘துரு துரு’ வென ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டேயிருக்கிறோம். இரத்தத்தில் சூடு இருந்தால் நம்மால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்போம். இரத்தத்தில் உள்ள சூடுதான் ஒருத்தருடைய சுறுசுறுப்புக்கு ஆதாரம். சிலர் கூறுவார்கள் நீ சின்ன பையன், இள இரத்தம். இரத்தம் சூடாக இருக்கிறது. அதனால் தான் நீ வேகமாக இருக்கிறாய். அமைதியாக இரு என்று கூறுவார்கள். நமக்கு 80 வயது 100 வயது ஆனாலும் இரத்தத்தை சூடாக வைத்திருப்பது எப்படி என்ற இரகசிய வித்தை தெரிந்திருந்தால் 100 வயதிலும் நாம் குழந்தையைப் போல சுறுசுறுப்பாக இருக்கலாம். எனவே உடல் உழைப்பு மூலமாக நமது இரத்தத்திற்கு நெருப்பு சக்தி கிடைக்கிறது.

சாப்பிடும் உணவு மூலமாக இரத்தத்திற்கு மண் சம்பந்தப்பட்ட பொருள் கிடைக்கிறது, குடிக்கும் நீர் மூலமாக நீர் சம்பந்தப்பட்ட பொருள் கலக்கிறது. சுவாசிக்கும் மூச்சுக்காற்று மூலமாக காற்று சம்பந்தப்பட்ட பொருள் கலக்கிறது. தூக்கத்தின் மூலமாக ஆகாயம் சம்பந்தப்பட்ட பொருள் கலக்கிறது. உழைப்பின் மூலமாக நெருப்பு சம்பந்தப்பட்ட பொருள் கலக்கிறது. ஆக மொத்தம் இரத்தத்தில் மொத்தம் ஐந்து வகையான பொருள்கள் உள்ளது. அவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகும்.

எனவே நாம் சாப்பிடும் சாப்பாட்டை எப்படி நல்ல முறையில் ஜீரணம் செய்து நல்ல பொருள்களாக இரத்தத்தில் கலக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்வது முதல் இரகசியம். குடிக்கும் நீரை எப்படிக் குடித்தால் நீரில் உள்ள பொருள்கள் நல்ல முறையில் ஜீரணமாகி இரத்தத்தில் கலக்கும் என்பதைத் தெரிந்து கொள்வது இரண்டாவது இரகசியம். சுவாசிக்கும் காற்றை எப்படி சுவாசித்தால் காற்றில் உள்ள பொருள்கள் நல்ல பொருளாக இரத்தத்தில் கலக்கும் என்பதைக் கற்றுக் கொள்வது மூன்றாவது இரகசியம். நமது தூக்கத்தை எப்படி ஒழுங்கு செய்தால் தூக்கம் மூலமாகக் கிடைக்கும் ஆகாய சம்பந்தப்பட்ட பொருள்கள் நல்ல பொருள்களாக இரத்தத்தில் கலக்கும் என்பதை கற்றுக் கொள்வது நான்காவது இரகசியம். உடல் உழைப்பு நமக்கு எவ்வளவு தேவை எப்படி உழைக்க வேண்டும் என்பது, உழைப்பின் மூலமாக இரத்தத்திற்கு, நெருப்பு சம்பந்தப்பட்ட பொருளை நல்ல முறையில் எப்படிக் கலப்பது என்பதைத் தெரிந்து கொள்வது ஐந்தாவது இரகசியம்.

இப்படி உணவு, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பொருள்களையும் இரத்தத்தில் தேவையான அளவு தரமான பொருளாகக் கலப்பது என்ற ஐந்து இரகசியங்களைத் தெரிந்து கொண்டு அதைக் கடைப்பிடித்தால் இரத்தத்தில் எல்லாப் பொருளும் நல்ல பொருளாக தேவையான அளவு இருக்கும்.

இரத்தத்தில் எல்லாப் பொருளும் தேவையான அளவு தரமான பொருளாக இருந்தால் இரத்தம் தானாக ஊறும். நமது உடம்பில் உள்ள எலும்பு மஜ்ஜைகள் அதற்குத் தேவையான எல்லாப் பொருளும் கிடைத்தவுடன் 48 மணி நேரத்தில் முதல் சொட்டு இரத்தத்தை உருவாக்கும். இப்படி ஒவ்வொரு சொட்டாக உருவாக்க ஆரம்பித்து 120 நாட்களில் உடலில் உள்ள அனைத்து இரத்தத்தையும் மொத்தமாக புதிதாக மாற்றி விடும். இப்படி நமது உடலில் உள்ள இரத்தத்தை முற்றிலுமாக தூய்மையான வீரியமுள்ள நல்ல இரத்தமாக மாற்றி வைத்தால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் தன் நோயைத்தாமாகவே குணப்படுத்திக் கொள்ளும். தன் உறுப்புகளைத் தாமாகப் புதுப்பித்துக் கொள்ளும்.


மக்கள் நல்லுறவு

Saturday, July 2, 2016

எதுவும் இல்லை

மக்கள் நல்லுறவு பகிர்கிறது
வாழ்க்கை வாழ்வதற்க்கே :
( மகிழ்ச்சி + ஒழுக்கம் = வாழ்க்கை )

[ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்.,  அவன் அதை உணரும் போது, கையில் ஒரு பெட்டியுடன்கடவுள் அவன் அருகில் வந்தார்..]

கடவுள் : "வா மகனே....  நாம் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது.."

மனிதன் : "இப்பவேவா?  இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"

கடவுள் : "மன்னித்துவிடு மகனே.... உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.."

மனிதன் : "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"

கடவுள் : "உன்னுடைய உடைமைகள்....."

மனிதன்: "என்னுடைய உடைமைகளா!!! என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,....எல்லாமே இதில் தான் இருக்கின்றனவா?"

கடவுள் : "நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல.. அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு தேவையானது.."

மனிதன் : அப்படியானால்,  "என்னுடைய நினைவுகளா?"

கடவுள் : "அவை காலத்தின் கோலம்...."

மனிதன் :"என்னுடைய திறமைகளா?"

கடவுள் : "அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது...."

மனிதன் : "அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?"

கடவுள் : "மன்னிக்கவும்....... குடும்பமும் நண்பர்களும்  நீ வாழ்வதற்கான வழிகள்...."

மனிதன் : "அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா?"

கடவுள் : "உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல,
அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்...."

மனிதன் : "என் உடலா?"

கடவுள் : "அதுவும் உனக்கு  சொந்தமானதல்ல.... உடலும் குப்பையும் ஒன்று...."

மனிதன் : "என் ஆன்மா?"

கடவுள் : "அதுவும் உன்னுடையது அல்ல..., அது என்னுடையது......."

மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன், காலி பெட்டியைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்..

கண்ணில் நீர் வழிய கடவுளிடம், "என்னுடையது என்று எதுவும் இல்லையா?"  எனக் கேட்க,

கடவுள் சொல்கிறார்: "அதுதான் உண்மை.. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது..

வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்..

ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்..

எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே........"

-- ஒவ்வொரு நொடியும் வாழ்

-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்

-- மகிழ்ச்சியாக வாழ்

அது மட்டுமே நிரந்தரம்..

-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது


வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்., அதே நேரம் ஒழுக்கத்துடன் வாழ்வோம்..

மக்கள் நல்லுறவு

கோழை அல்ல

மக்கள் நல்லுறவு!

ஓங்கி அடித்தால் ஆம்பளை
ஒதுங்கிபோறவன் கோழை!

உண்மையில் ஒதுங்கிப்போறவன்
கோழை அல்ல நடைமுறைகளை அறிந்தவன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தைரியம், வீரம், மனிதநேயம்,  இரக்ககுணம் அது இறக்கும் வரை இருக்கும், கால சூழ்நிலை, குடும்ப சூழ்நிலைகளை கருதி
அவனது குணம் பொது இடத்தில் அந்த இரக்ககுணம் தைரியம் எளிதில் வெளிவருவதில்லை காரணம்.

நம் சட்டம் - காவல் துறை மற்றும்  நீதிமன்றம் - இங்கு குற்றத்திற்க்கு
தண்டனை கடுமையாக இல்லை, சாட்சி சொன்னால் வீண் வம்பு வந்துவிடும், அலைச்சல் மற்றும்  பயம்.

சாட்சி சொல்லி தண்டனை வாங்கி தந்தாலும் சில மாதத்தில் பண பலத்தால் குற்றவாளி  வெளியே எளிதில்  வந்துவிடுகிறார்கள்.

சாட்சி சொன்னவர்களை தேடி பழி தீர்த்து கொள்வார்கள் என்ற பயம்,
காவல் துறை சாட்சி சொல்லும் வரை நண்பனாக இருக்கும், சாட்சி  அளித்தவுடன் வேலையை முடித்துவிடும், சாட்சி கதி அம்போ!

சுவாதியின் கொலையை நேரில் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கொலைகாரனுக்குப் பயந்தவர்கள் அல்ல. காவல்துறையினருக்குப் பயந்தவர்கள்.

ஒன்று சாட்சி சொல்ல தைரியாமாக முன் வருபவர்களை பாராட்டி  பாதுகாப்பாக மறைமுகமாக கடைசி வரை வைக்கமாட்டார்கள்,

மீடியாவும் இதற்க்கு காரணம், மேற்கொண்டு கிடைக்கும் ஆதாரம் சாட்சிகளை வைத்து குற்றாவாளிகளுக்கு எளிதில் தண்டனை வாங்கித்தர மாட்டார்கள்,  பல ஆண்டுகள் வாய்தா வாங்கி வழக்கு நிதிமன்றத்தில் நடக்கும், இதில் சாட்சி சொல்ல வந்தவனுக்கு பாதி வாழ்க்கை நிம்மதி  போய்விடும் " நல்லதை செய்ய வீண் தண்டனை காவல் துறையால் சட்டத்தால் இவனுக்கு" காவல் துறையும் கிடைத்த சாட்சியை கடைசி வரைக்கும் விடாது, எதற்கு சாட்சி சொல்ல வந்தோம் என என்னும் மன நிலை ஏற்பட்டுப்போகும்.

கடைசியில் குற்றாவாளியை எளிதில் நீதிமன்றம்  விட்டுவிடும், முதலில்
சட்டத்தை கடுமையாக ஆக்கினால் தான் குற்றங்கள் குறையும், சாட்சிகள் பெருகும்.

இன்றைய கால கட்டத்தில் கால் தவறி விழுந்தாலும் வீடியோ எடுத்து விடுகிறார்கள், அதை வாட்ஸ் அப், முகநூலில் போட்டு விடுகின்றனர், வலியும், வேதனையும் அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.

ஆதாரம் உண்மை அருகிலேயே இருக்கும் எனவே நன்றாக அலசிப் தேடிப் பார்த்தால்  நிச்சயம் கிடைக்கும், போதிய பாதுகாப்பு,  உத்திரவாதம் காவல் துறையினால் பொதுமக்களுக்கு, (சாட்சிக்கு) ஆபத்து காலத்தில் உதவுபவர்களுக்கு அளிக்கப்படவேண்டும்.

பொதுமக்களுக்கு  நம்பிக்கை, வீழிப்புணர்வு எற்படுத்தினால் தைரியாமாக உண்மை வெளிவரும் "தட்டிக்கொடு " அவன் தட்டிக்கேட்பான், தோள்கொடு அவன் நெஞ்சை நிமிர்த்துவான்.
எளிதில்!
குற்றம் குறையும்,
சிந்தனை செய்

பொதுமக்கள் சார்பாக மக்கள் நல்லுறவு.