Saturday, July 2, 2016

கோழை அல்ல

மக்கள் நல்லுறவு!

ஓங்கி அடித்தால் ஆம்பளை
ஒதுங்கிபோறவன் கோழை!

உண்மையில் ஒதுங்கிப்போறவன்
கோழை அல்ல நடைமுறைகளை அறிந்தவன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தைரியம், வீரம், மனிதநேயம்இரக்ககுணம் அது இறக்கும் வரை இருக்கும், கால சூழ்நிலை, குடும்ப சூழ்நிலைகளை கருதி
அவனது குணம் பொது இடத்தில் அந்த இரக்ககுணம் தைரியம் எளிதில் வெளிவருவதில்லை காரணம்.

நம் சட்டம் - காவல் துறை மற்றும்  நீதிமன்றம் - இங்கு குற்றத்திற்க்கு
தண்டனை கடுமையாக இல்லை, சாட்சி சொன்னால் வீண் வம்பு வந்துவிடும், அலைச்சல் மற்றும்  பயம்.

சாட்சி சொல்லி தண்டனை வாங்கி தந்தாலும் சில மாதத்தில் பண பலத்தால் குற்றவாளி  வெளியே எளிதில்  வந்துவிடுகிறார்கள்.

சாட்சி சொன்னவர்களை தேடி பழி தீர்த்து கொள்வார்கள் என்ற பயம்,
காவல் துறை சாட்சி சொல்லும் வரை நண்பனாக இருக்கும், சாட்சி  அளித்தவுடன் வேலையை முடித்துவிடும், சாட்சி கதி அம்போ!

சுவாதியின் கொலையை நேரில் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கொலைகாரனுக்குப் பயந்தவர்கள் அல்ல. காவல்துறையினருக்குப் பயந்தவர்கள்.

ஒன்று சாட்சி சொல்ல தைரியாமாக முன் வருபவர்களை பாராட்டி  பாதுகாப்பாக மறைமுகமாக கடைசி வரை வைக்கமாட்டார்கள்,

மீடியாவும் இதற்க்கு காரணம், மேற்கொண்டு கிடைக்கும் ஆதாரம் சாட்சிகளை வைத்து குற்றாவாளிகளுக்கு எளிதில் தண்டனை வாங்கித்தர மாட்டார்கள்பல ஆண்டுகள் வாய்தா வாங்கி வழக்கு நிதிமன்றத்தில் நடக்கும், இதில் சாட்சி சொல்ல வந்தவனுக்கு பாதி வாழ்க்கை நிம்மதி  போய்விடும் " நல்லதை செய்ய வீண் தண்டனை காவல் துறையால் சட்டத்தால் இவனுக்கு" காவல் துறையும் கிடைத்த சாட்சியை கடைசி வரைக்கும் விடாது, எதற்கு சாட்சி சொல்ல வந்தோம் என என்னும் மன நிலை ஏற்பட்டுப்போகும்.

கடைசியில் குற்றாவாளியை எளிதில் நீதிமன்றம்  விட்டுவிடும், முதலில்
சட்டத்தை கடுமையாக ஆக்கினால் தான் குற்றங்கள் குறையும், சாட்சிகள் பெருகும்.

இன்றைய கால கட்டத்தில் கால் தவறி விழுந்தாலும் வீடியோ எடுத்து விடுகிறார்கள், அதை வாட்ஸ் அப், முகநூலில் போட்டு விடுகின்றனர், வலியும், வேதனையும் அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.

ஆதாரம் உண்மை அருகிலேயே இருக்கும் எனவே நன்றாக அலசிப் தேடிப் பார்த்தால்  நிச்சயம் கிடைக்கும், போதிய பாதுகாப்புஉத்திரவாதம் காவல் துறையினால் பொதுமக்களுக்கு, (சாட்சிக்கு) ஆபத்து காலத்தில் உதவுபவர்களுக்கு அளிக்கப்படவேண்டும்.

பொதுமக்களுக்கு  நம்பிக்கை, வீழிப்புணர்வு எற்படுத்தினால் தைரியாமாக உண்மை வெளிவரும் "தட்டிக்கொடு " அவன் தட்டிக்கேட்பான், தோள்கொடு அவன் நெஞ்சை நிமிர்த்துவான்.
எளிதில்!
குற்றம் குறையும்,
சிந்தனை செய்

பொதுமக்கள் சார்பாக மக்கள் நல்லுறவு.

No comments:

Post a Comment