Monday, July 4, 2016

கோவை வடக்கு கவுண்டம்பாளையம் 44 வார்டு பகுதி பொதுமக்களின் புகார் :

கோவை மக்கள் நல்லுறவு

கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் கோவை வடக்கு 44 வார்டு பகுதி பொதுமக்களின் புகார் :

இங்கு குடிதண்ணிர் 8 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது, அதுவும் முறையாக இல்லை குறிப்பிட்ட நேரம் இல்லை, தண்ணிர் திறந்து விடுபவர் வசதிக்கேற்ப்ப விடப்படுகிறது.

போதக்குறைக்கு வாரம் ஒருமுறை திறந்துவிட வார்டுக்குள் விடு வீடாக கலெக்சன் செய்து கொடுக்கிறார்கள், இருப்பினும் விநியோகம் இல்லை.

மாநகராட்சியில்  குடிநீர் கட்டணத்தொகை மட்டும் மாதம் மூன்று முறை மட்டும் தண்ணிர் சப்ளை செய்து விட்டு ஆயிரக்கணக்கில் பில் தொகை வருகிறது, இது மாநகராட்சியின் நூதன வசூல்.

குறைகள் :
குடிநீர் மீட்டர் ரீடிங் சரியாக பார்பது இல்லை,  அதிகமான தொகை வசூல்,
சீரான விநியோகம் இல்லை, பண வசூல், மாமன்ற உறுப்பினர் 44 ம் வார்டு இதை கண்டுகொள்வதில்லை, வார்டுகளில் இது போன்ற குறைகளை எடுத்து சொல்ல  முதலில்  ஒன்று சேருவதில்லை, என புகார் தெரிவித்தனர். .

இதற்க்கு பதில் அளிப்பவர்கள் யார்?

மாநாகராட்சி நடவடிக்கை எடுக்குமா
ஒன்றுபட்டால் தான் உண்டு தீர்வு

மக்கள் நல்லுறவு

பகிரவும் ...

No comments:

Post a Comment