Wednesday, January 27, 2016

சண்முகா நகர் 44/45 வார்டு மக்களின் 40 வருட கனவு

கோவை மக்கள் நல்லுறவு
கோவை மக்கள் நல்லுறவு சங்கத்தின் முயற்சியால் சண்முகா நகர் 44/45 வார்டு மக்களின் கோரிக்கை ( 40 வருட கனவு)  சாலை (வழித்தடம்) பெற்றுத்தந்து அந்த தடத்தில் மின் விளக்கு பொருத்தப்பட்டது, இடைவிடாமல் செய்த கோரிக்கை மற்றும் முயற்சியால் இன்று வழித்தடத்தில் கான்கீரிட் சாலை பணி தொடங்கப்பட்டது.
மக்கள் மகிழ்ச்சி
நன்றி.நன்றி உதவிய அரசு அதிகாரிகள், ஆனையாளர், மேயர்,  மற்றும் கவுன்சிலர்கள் "44/45 வார்டு
அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி
கோவை மக்கள் நல்லுறவு






Kovai makkal nalluravu
Shanmuga nager 44 ward road work completed
Thanks for all cbe corporation staffs, Counsler,and corporation commissior.






எல்லாம் நன்மைக்கே

மக்கள் நல்லுறவு
எல்லாம் நன்மைக்கே

உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.

நான் : கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா?

கடவுள் : தாரளமாக கேள்

நான் : பொறுமையா கோபப்படாமல் பதில் சொல்வீர்களா?

கடவுள் : சத்தியமாக!

நான் : இன்னைக்கு ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளை கொடுத்தீங்க?

கடவுள் : என்னப்பா சொல்லுற நீ?

நான் : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட்

கடவுள் : ஆமாம்! அவசரத்துல என்னை கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டாய்.

நான் : கிளம்பினதே லேட் இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது.

கடவுள் : ஆமாம் எனக்கு தெரியும்.

நான் : சரி! பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு ஒரு மணிநேரம் லேட்.

கடவுள் : ஆமாம்! தெரியும்.

நான் : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆகிடிச்சு அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிடுச்சு கடைசீயில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.
கடவுள் : ஆமாம் அதுவும் தெரியும்.

நான் : வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர் கிட்டே ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர் கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.

கடவுள் : ஆமாம் தெரியும்.

நான் : அதை பிடிச்சி! இதை பிடிச்சி! முட்டி மோதி வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் ஆகி வேலை செய்யல இன்னைக்கு எனக்கு எதுவுமே சரியில்லையே ஒரு நாள் உங்களை கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா?

(கடவுள் பலமாக சிரிக்கிறார். சில வினாடிகள் கழித்து! பேச ஆரம்பிக்கிறார்)

கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின் படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன்.

நான் : (அதிர்ச்சியுடன்) ஓ

கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா! நீ ஆபீஸ் போகும்போது நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்.

நான் : (அடக்கத்துடன்) ஓ

கடவுள் : மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம் கடைசியா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு! யாரும் அதை கவனிக்கல அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாகியிருக்கும்?

நான் : (கண்கலங்கியபடி) ம்ம்

கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்கு காரணம்! அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி உன் ஃபோனை செயலிழக்கச் செய்துவிட்டேன்.

நான் : ம்ம்

கடவுள் : அப்புறம் அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிச்சை தொட்டிருந்தால் அந்த கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய், ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன்.

என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை.

நான் : இப்போ புரிகிறது இறைவா! என் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பும் அக்கறையும். இது புரியாமல் உங்களை ரொம்பவும் நிந்தித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.

கடவுள் : மன்னிப்பு கேட்காதே! என்னை நம்பு, எப்போதும் எந்த சூழ்நிலையிலும். அது போதும்!

நான் : நிச்சயமாக

கடவுள் : நீ திட்டமிடுவதை விட உனக்காக நான் திட்டமிடுவது எப்போதும் சரியாகவே இருக்கும்.

நான் : இனி நிச்சயம் உங்களை சந்தேகப்படமாட்டேன். உங்கள் அருளை சந்தேகப்படமட்டேன். கண்ணை இமை காப்பது போல ஒவ்வொரு கணமும் நீங்கள் என்னை காப்பதை புரிந்துகொண்டேன்.

கடவுள் : என்னை நம்பியிருப்பவர்களை நான் என்றும் கைவிடுவதில்லை!

Mks

வணக்கம்,

              ஒவ்வொரு நகரில் உள்ள தெருக்களில், முக்கிய வீதிகளில் மக்களுக்கு சேவை செய்யும் ஆர்வமுள்ள் இளைஞர்கள், அனுபவமிக்கவர்களை இணைத்து ஒருங்கிணைப்பாளர்களை (குறைந்தபட்சம் பத்துபேர்களை) நியமிக்கவும், மக்களின் குறைகளை கேட்கவும், ஆலோசனை வழங்கவும், மக்களிடம் தொடர்பு கொண்டு நட்புடன்  இருந்தால் என்றும் வெற்றி


மக்கள் நல்லுறவை விரும்பும் மக்கள் நல்லுறவு.

நமக்கு நாமே

வணக்கம்,   
          கட்சி வளர,  மக்கள் மத்தியில் மனதில் என்றும் நிலைக்க தங்கள் முயற்சி எடுக்கவேண்டும்,  பொறுப்பை எற்க்க வேண்டும், இளைஞர்களை ஈடுபடுத்தவேண்டும், நன்றாக வேலைசெய்யும் மக்களுக்கு சேவை செய்யும் ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து இனைந்து செயல்படவேண்டும், பணம் சாம்பாதிக்கும் நோக்கத்தோடு வருபவர்களையும், குறிக்கோளாக இருப்பவர்களையும் அகற்ற வேண்டும், கட்சிக்கு பெயர் வாங்கி தரும் உண்மையான தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், உங்கள் தலைமையில் கிழ் செயல்பட காத்திருக்கும்  இளைஞர்களை சேர்க்க முதலில் முயற்சி எடுங்கள், நகரங்களில் வார்டுகளில் மக்கள் நல்லுறவை விரும்பும், சேவை மணப்பான்மை கொண்ட 10 பேர்களை தேர்ந்து எடுங்கள், கட்சியின் கொள்கைகள், நோக்கம், செயல்பாடுகளை விளக்கி சொல்லுங்கள், வார்டில் உள்ள குறைகளை கண்டறிந்து அந்த பத்து பேரில் யாரோ இருவர் பெற்று மக்களுக்காக கட்சி சார்பில் தீர்த்து வைக்க வேண்டும், முயற்சி செய்ய வேண்டும், பொதுப்பிரச்சனைகளை வார்டுகளில் ஏற்படுவதை பத்து பேரில் யாராக இருந்தாலும் எழுத்துமுலமாக பெற்று நகலை தலைமைக்கு அனுப்பவேண்டும், பின்பு அதன் மிது எடுத்த நடவடிக்கை பிரச்சனையின் முடிவு குறித்து தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பத்து  பேர் வார்டுகளில்  உள்ள தெருக்களில் குறை நிறைகளை கண்டறிய மாதம் ஒரு முறை கூட்டம் ,, அல்லது மக்களிடம் கேட்டறிய வேண்டும்,

வீடுகளில் விருப்பமுள்ளவர்களை, ஆர்வம் உள்ளவர்களை பேசி இணைக்க வேண்டும்,இணைந்து செயல்பட அவர்களுக்கு   அடையாள அட்டை உடனுக்குடன் கொடுத்துவிடவேண்டும், செயல்பாடுகள் மக்கள் உடனுக்குடனே தீர்த்து வைத்தால்  மக்கள் மாறமாட்டார்கள், கட்சியை மறக்கமாட்டார்கள், மனிதனை மனிதனாக மதிக்கும் கட்சி, மக்களின் மனங்களில் ஆட்சி செய்யும் கட்சியாக மாற வாழ்த்துக்கள்.

அம்மா அம்மா

படித்தது
அம்மா அம்மா
56 மாதமாக எதிர்கட்சிகள் என்னையும் எனது அரசைபற்றியும் பொய் பிரச்சாரம் செய்கின்றன ... ஜெயலலிதா
1, வெற்றி பெற்ற முதல் நாள் உங்கள் அரசு என்ற வார்த்தை மறுநாள் நான், எனது அரசு என்றானதே ..
2 , சமச்சீர்கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது.
3 , பாட புத்தகங்களை அச்சடித்து 450 கோடியை வீணடித்தது.
4, அண்ணா நூலகத்தை நாசபடுத்தியது .
5, கூடங்குளம் மக்களை ஏமாற்றியது -
6, பஸ் கட்டணம் உயர்தியது.
7, பால் விலையை உயர்த்தியது.
8, மின்சார கட்டணத்தை உயர்த்தியது.
9, கடுமையான மின் தட்டுபாடை ஏற்படுத்தியது.
10, ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காது.
11, தொழில் வளர்ச்சியை முடக்கியது .
12, தொழில் நிறுவணங்கள் தமிழகத்தை விட்டே ஒடியது.
13, சட்டசபையை " பெஞ்ச் தட்டும் சபையாக " மாற்றியது.
14, கரும்பு விவசாயிகளை கதற விட்டது .
14, நெல் விவசாயிகளை நெம்பியெடுத்தது.
15, கெயில் விவகாரத்தில் விவசாயிகளை வாட்டியது.
16, முல்லை பெரியாரில் மக்களின் முட்டியை உடைத்தது.
17, வில்லேஜ் & தாலுக் அலுவலங்களில் இலவசமாக வழங்கபட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.
18, சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.
19, உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்து '
20, அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.
21, தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.
22, எதிர்கட்சியை உடைத்தது.
23, கொடநாட்டில் உல்லாச வாசம்.
24, அரசு ஊழியர்களை தற்கொலை செய்ய வைத்தது.
25, பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.
26, மீனவர்களை ஜெயிலில் தவிக்க விட்டது.
27, கச்சதீவு மீட்பை கனவாக்கியது.
28, படகுகளை பறிகொடுக்க வைத்தது.
29, மாற்றுதிரணாளிகளுக்கு மரண பயம் காட்டியது.
30, மக்கள் நல பணியாளர்களை மரணத்தை நோக்கி உந்தியது.
31, இலக்கு வைத்து மது விற்றது.
32, தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.
33, காவல் துறையை ஏவல் துறையாக்கியது.
34, ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.
35, நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.
36, மந்திரிகள் மண் சோறு தின்றது.
37, ஊழலில் திளைப்பது.
38, தாது மணலை கொள்ளையடித்தது.
39, ஆவின் ஊழல் .
40, கமல்ஹாசனை கலங்கடித்தது.
41, விஜயை வியர்க்க வைத்தது .
42, சினிமா விழாவை சின்னாபின்னாமாக்கியது.
42, சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.
43, கனிமவளத்தை களவாடியது.
44, அப்துல் கலாமை அவமதித்தது.
45, ஊழல் IAS அதிகாரிகள் பட்டியல் வெளியானது.
46, 25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.
47, முட்டை, பருப்பு என அனைத்திலும் ஊழல்.
48, மின்சாரத்தில் கமிஷன் .
49, மணல் கொள்ளை.
50, லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது .
51 , பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.
52, நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது .
55, ஜல்லிகட்டை ஜடமாக்கியது.
56, தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.
57, திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர் .
58, பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.
59, செவிலியரை சொல்லியடித்தது.
60, உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம் .
61, ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.
62 ,RK நகரில் இமாலய கள்ள ஓட்டு.
63, செம்பர பாக்கத்தம்மா என விருது வாங்கியது.
64, ஸ்டிக்கர் ஒட்டியது.
65, கோவனை கைது செய்தது.
66, பேனர் கிழிப்பில் விஜயகாந்திடம் ஜகா வாங்கியது.
67, மிடாஸில் மிதக்கும் தமிழகம்.
68, ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.
69, வெற்று வார்தைகளில் வர்ணஜாலம் காட்டியது.
70, விஷன் 2023 வெளியே வராமலே போனது .....
71, உபி சகோதரி உலகையே வாங்கி குவிப்பு .
இது எல்லாம் பொய்யா ??????

Sunday, January 24, 2016

இலவச இருதய பரிசோதனை முகாம், சித்த மருத்துவ முகாம், மூலிகை கண்காட்சி

கோவை மக்கள் நல்லுறவு

வரும் 30/31 தேதி ஜனவரி மாதம் இலவச இருதய பரிசோதனை முகாம், சித்த மருத்துவ முகாம், மூலிகை கண்காட்சி நடத்த உள்ளது உறுப்பினர்கள், பொதுமக்கள், நண்பர்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி தர தங்களின் ஆதரவை தரவும், மேலும் உங்களை எங்களுடன் இனைந்து செயல்பட வரவேற்கிறது..




Friday, January 22, 2016

கோரிக்கை மனு

கோவை மக்கள் நல்லுறவு
கோரிக்கை மனு

நெரிசல் மிக்க சாலை பகுதி, பாதுகாப்பு இல்லாத பகுதி , வாகனம் நிறுத்தும் வசதிகள் இல்லாமல்  பதிவு செய்ய வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரியான படி செய்யப்படாமல் அமைக்கப்படாமல், அரசுக்கு (பதிவு துறை)  அதிக வருவாய் தரும் காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகம் City to 15 Km தள்ளி அமைத்ததினால் எற்படும் பாதிப்புகள்,  அவதிப்படும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அதன் பேரில் தந்த மனு,