Monday, July 18, 2016

மது வருமானம்


மக்கள் நல்லுறவு

தெரிந்தே தப்பு செய்கின்றவர்களுக்கு மன்னிப்பு கிடையாது, இதற்க்கு  தண்டனை நிச்சயம் உண்டு (கண்ணேதிரே).

ஒரு சில உதாரணம் :

நோய் வரும் என்று தெரிந்து மதுவை  தொடர்ந்தது  குடித்து கொண்டு இருப்பவர்கள், நோய் வரும் என்று அறிந்து விலைமாது விடம் செல்பவர்களுக்கும் மன்னிப்பு கிடையாது.

நோய்க்கு
மருந்து உள்ளது என நினைத்து தொடர்ந்து தவறு செய்தால் அந்த மருந்தே உன்னை உலகிற்க்கு எடுத்து காட்டி கேவலப்படுத்தும்.

துன்பம் வரும் என தெரிந்து எச்சரிக்கையாய் இல்லாமல் சுய இன்பத்தை தேடி தன்னை நம்பினவர்களையும்,  நம்பி உள்ளவர்களையும், தமது குடும்பத்தையும் ஏமாற்றுகிறார்கள்.

இது மதுவையும், விலை மாதுவையும் ஆதரிக்கும் அரசுகளுக்கும் பொருந்தும்.

மக்கள் பணத்தில்
மதுவை தொடங்கி மெல்ல மெல்ல மனிதனின் ஆசையை தூண்டி, அடிமையாக்கி,  நோய்களை பரப்பி அழிவை உண்டாக்கி குடும்பங்களை நடுத்தெருவில் கொண்டு நிறுத்தும் செயல், உண்மையில்  நம்பிக்கை துரோகம்,  இந்த செயலை செய்யும் அரசு, தலைவன், தலைவி,  நிம்மதி இல்லாமல் நோய்களை தான் பெறுவார்கள், நிம்மதியின்றி தவிப்பார்கள்,
விற்று சம்பாதிப்பவனுக்கும் அதே நிலமைதான்.

தீயதினால் வரும் வருமானத்தால் நாடு வளர்ச்சி அடையாமல்,   நாட்டை கடனுக்கு கொண்டு சென்று தவிக்கவைப்பார்கள், உண்மை  வரலாறு இது  நமக்கு உணர்த்துகிறது (கண்ணேதிரே).

எனவே சிந்தித்து பாருங்கள்

நமது மறைமுக அழிவிற்க்கு
யார் காரணம்? யார் பொறுப்பு? யாருக்கு இழப்பு? தேவையா இந்த பொழப்பு?

தீய பழக்க வழக்கங்களை விட்டு விடுங்கள் நீங்களாகவே மெல்ல மெல்ல இது போன்ற தீய பழக்கங்களில் இருந்து  மீண்டுவாருங்கள்!

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்!

வாழ்க வளமுடன்!

அன்புடன் மக்கள்நல்லுறவு!

Sunday, July 17, 2016

பணிகள்

மக்கள் நல்லுறவு

உறுப்பினர்களுக்கு வணக்கம்.

இது உங்களூக்காக தொடங்கப்பட்ட சங்கம், கோவை மாநகராட்சி வார்டில் உள்ள பொது  பிரச்சனைகளை, மக்கள் குறைகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு எடுத்து கூறி தீர்வு காண்பது நோக்கமாகும்.

மக்களுக்கு மனித நேயத்துடன் எங்களால் (நம்மால்) முடிந்த உதவிகள் செய்வது செயல்பாடாகும்.

அதற்க்கு முடிந்தால் முகநூல் நண்பர்கள் பிரச்சனைகளை எடுத்து கூறும் போது எங்களுடன் ஒன்றுபட்டு களத்தில் இணைந்து பணியாற்ற வாருங்கள், ஆதரவு கொடுங்கள்,  நம்பிக்கை கொடுங்கள்.
அல்லது
ஒரு விசயம் "தகவல் நல்லது என உன் மனதிற்க்கு பட்டால் Like, comments செய்வதை தவிர்த்து Share செய்யுங்கள், அது உபயோகம் அளிக்கும், சம்பந்தப்பட்டவர்கள் கண்களில் பட்டு, காதுகளில் கேட்டு பிரச்சனை தீரும், நடவடிக்கை எடுக்கப்படும், பயம் வரும், திருத்திக் கொள்வார்கள், தீர்வு காணலாம்.

ஜாதி, மதம், கட்சி பார்க்காதீர்கள்,இதில்  கட்சி நமக்கு ஒரு Extra support! கட்சிப் பணியிலும் மக்கள்பணி தான் உள்ளது, சுயநலம் கிடையாது.

நமது நோக்கம் மக்கள் பணி! மக்கள் சேவை எந்த வித பிரதிபலன் பாராமல் ஒன்றுபட்டு இணைந்து செய்வது!

நகரத்தின் மிது, மக்கள் மிது, மனிதன் மிது உங்களுக்கு உண்மையான அக்கறை "அன்பு  இருந்தால் இனி நல்ல பதிவுகளை பொது பிரச்சனைகள் பற்றி பதிவு செய்யும்போது அதை Share செய்யுங்கள், தட்டிக்கொடுங்கள், பயம் வேண்டாம், நாளை பாதிப்பு யாருக்கும் வரலாம்!

அதற்க்காக
ஒன்றுபடுவோம் நம்மை காக்க,!
ஒன்றுபட்டால் தான் உண்டு தீர்வு!
வாழ்க வளமுடன்

கோவை மக்கள் நல்லுறவு "

மின் கட்டண தள்ளுபடி கண் துடைப்பா?

மக்கள் நல்லுறவு

வணக்கம்!

100 யுனிட் மின்சாரம் இலவசம் என்பது ஏமாத்து வேலை:

மாதக் கணக்கீடு ஏன் ஏடுப்பதில்லை?
இதை யாரும் தட்டி கேட்பாதில்லை.

முதலில் அவரவர் மின் அட்டையை சரிபாருங்கள், குழப்பம் தான் வரும்,

முதல்ல கணக்க கேட்டா சரியா சொல்வதில்லை, மின்சார ஊழியர்களுக்கே குழப்பம்,கோபம்,   'சில பேர் முழிக்கிறார்கள், பதில் தெரியாமல் மொபைல், கம்பியுட்டர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்,

அல்லது Chartல் உள்ளது பாருங்கள் என சொல்லி நகர்ந்து விடுகிறார்கள், Chartல் பார்த்தால் அதிர்ச்சி பழைய 2014 Tariff

மக்கள் ரொம்ப பேசினா, கேள்வி கேட்டா, அதை மனதில் வைத்து பீஸ் போன கூப்பிட்ட உடனே  வரமாட்டான் என்கிற பயம், வீட்டுக்கு வந்து சோதனை என்ற பெயரில்  தேவையில்லாத குற்றம் குறை  சொல்லுவாங்க "Fine போடுவாங்க, எதுக்கு "தேவையில்லாத பிரச்சனை,

அரசை தனியாளக எதிர்த்து கேட்க முடியாது,  லஞ்சம் வேறு, (லைன் வேண்டுமென்றாலும் வேண்டாம் என்றாலும்)  எதுங்கு வம்பு நினைத்து மக்கள் ஒதுங்கி போகிறார்கள் இது தான் உண்மை,

பாதிப்பு தனக்கு வரும் வரை இதை உணரமாட்டார்கள், அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடமாட்டார்கள்.

ஒன்று பட்டு கேள்வி கேட்கும் தைரியம் இல்லாத புத்திசாலிகள் தான்  நம் தமிழ்நாட்டு மக்கள்.

ஆசைப் பட்ட எல்லாத்தையும் காசு இருந்தால் வாங்கலாம் அம்மாவை வாங்கமுடியுமா?
முடியும். அம்மாவால் இலவசமாக தாய்பால் வழங்கப்படும் என்று சொன்னால் கூட நம்பி வாக்களிக்கும் உலகம், ஆக மொத்தம் ஏமாந்த தமிழக மக்கள்!

மக்கள் நல்லுறவு

Tuesday, July 12, 2016

அரசிற்க்கு ஒரு வேண்டுகோள்!




அரசிற்க்கு ஒரு வேண்டுகோள்!

எனது கடமை மற்றும் என் தேவையை பூர்த்தி செய்து கொள்ளத்தெரியும், என்னால் உழைத்து சம்பாதித்து கரன்ட்பில் கட்ட முடியும், வீட்டிலுள்ள பெண்களுக்கு தேவைப்பட்டால் இரு சக்கர வாகனம் வாங்கித்தர முடியும், செல்போன் வாங்க முடியும், வாங்கிய கடனையும் கட்டமுடியும் இது என் கடமை!

மக்களுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட  நீங்கள் நாட்டுக்கு செய்ய வேண்டிய  கடமைகள் பல,...

விலைவாசியை கட்டுப்படுத்துவது,
தரமான சாலைகள் போடுவது,
தட்டுபாடற்ற குடிநீர் வழங்குவது,
பாலங்கள் கட்டுவது,
ஊழலை லஞ்சத்தை ஒழிப்பது,
தரமான பேரூந்துகள் பராமரிப்பது,
தடையில்லா மின்சாரம் தருவது உற்பத்தி செய்து தருவது,
அரசாங்க அலுவலகங்கள் சிறப்பாக இயங்குவது,
சிறந்த கல்வி இலவசமாக தருவது,
சிறந்த மருத்துவத்தை இலவசமாக வழங்குவது,
ஆறுகளை இணைப்பது,
ஏரி,குளங்களை தூர்வாருவது,
அணைகள் கட்டுவது, காவல்துறையை நவீனப்படுத்துவது,
தொழிற்துறைகளுக்கு முதலீடுகள் கவர்வது,
தொழிற்துறைக்கு. அடிப்படை கட்டமைப்புக்கள் அமைப்பது,
தொழிற்வளர்ச்சிக்கு திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல்,
மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்றுவது... இதுபோல் அரசாங்காத்தால் மட்டும் செய்யகூடிய வேலைகள் ஆயிரம் இருக்கிறது.

இதையல்லாம் செய்ய நம்மால்  செய்ய முடியுமா?
இதையெல்லாம் செய்வதற்கு அரசு  நிதியை பயன்படுத்தாமல் தேவையில்லாமல் நான் கேட்காமல் எனக்கு எதற்க்கு இலவசமா கொடுக்கிறிர்களே...

உங்கள் வேலை கடமையை செய்யாமல் என்னை, எங்களை திசைதிருப்ப இந்த இலவசதிட்டங்களா?

என் வேலையை அரசாங்கம் செய்தால், அரசாங்க வேலையை யார் செய்வது?

என் வீட்டுச்செலவுகளை அரசாங்கம் செய்தால், அரசாங்க செலவுகளுக்கு என்ன செய்வார்கள்? கடன் வாங்குவார்களா? இன்னும் அதிகமா வரிவசூல் செய்வார்களா?

அவர்கள் செய்ய வேண்டிய பெரிய கடமைகளை மறைக்க தட்டிக்கழிக்க எனக்கு நல்லதை செய்வதாக கூறி என் கடமையில் தலையிட்டு, என்னை தூங்க வைக்க இலவசம் என்ற போர்வையை போர்த்தி தூங்க விடுவது சரியா? அம்மா,எங்களை  சோம்பேறியாக்க வேண்டாம்,

நாங்கள் விழித்துக் கொண்டேன்
விழித்திடு மனிதா!

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எங்கள் சேவையை மட்டும் பார்!

பெயரைக் கேட்டாலே சும்மா அதிரும்!
உள்ளாட்சி தேர்தலில் எங்கள் பணி தொடரும்!


மக்கள் நல்லுறவு, மக்கள் பணியில்...

மனிதஇயல்பு இதில் நீந்தி வருவது சாதனை

மனிதஇயல்பு இதில் நீந்தி வருவது சாதனை

ஒருவன் ஒரு  பொது வேலையை செய்தால் அதன் பிரதிபலன் பிரதிபலிப்பு இந்த சமூகத்தில் பலமுகங்களாக காணப்படுகிறது.
அவற்றில் சில துளிகள்...

முதலில் இணைந்து செய்ய யாரும் முன் வரமாட்டார்கள்! மேலும் சும்மா இருக்க மாட்டார்கள், விமர்சனம் அதிகம் செய்வார்கள், பாராட்டமாட்டார்கள் ஆனால் கேள்வி மட்டும் நிறைய கேட்பார்கள்.

ஒரு சிலர் இவர் எதற்க்கு சேவை செய்யவேண்டும்?
என்ன நோக்கம்?
பிற்காலத்தில் அரசியல் குதிக்கவா?
பரவாயில்லை இவர் நல்லதை  செய்தார், மகிழ்ச்சி! சூப்பர் உங்கள் பணி தொடரட்டும்,! வாழ்த்துக்கள்.

ஒரு சிலர் இவனுக்கு எதுக்கு இந்த வேலை,?
வேறு வேலை இல்லையோ?
நல்ல காரியம் நன்றி!

ஒரு சிலர் இவருக்கு ஆதாரவாய் நாமும் துணையாய் இருப்போம்! இந்த மாதிரி வேலைக்கு நான் வரமுடியாது நேரம் இல்லை,  வேண்டுமென்றால் செலவுக்கு பணத்தை வைத்துக்கொள்.

ஒரு சிலர் என்னால் பணம் தரமுடியாது, உடல் உழைப்பை தருகிறேன், தோள் கொடுப்பேன், நேரத்தை சேவைக்கு ஒதுக்கி தருகிறேன்.

ஒரு சிலர் இதை வைத்து காசு சம்பாதிக்கவா நிறைய காசு வருமா?
வருமானம் வருமா?
என்ன லாபம்?

ஒரு சிலர் சேவைக்கு சென்றால்
சாப்பாடு வாங்கித்தருவாரா?
மது வாங்கித் தருவாரா?

ஒரு சிலர் சேவையினால் விளம்பரம் தேடல்? 
சேவையினால் வீண் விரயம்?
சேவையினால் மனத்திருப்தியோ?
இப்படி எதுவாய் இருக்கும்?

புறம் பேசுவது? அவதூறு பேசுவது, இப்படி மனிதரில் பலவகை.
சரி
இதில் நீங்க எந்த வகை?

நல்ல மனதோடு சேவை செய்ய வரும் மனிதர்களை இப்படி பல கேள்விகளை கேட்டால் எவன் வருவான்?
பொதுசேவைக்கு?

ஒரு சிலர் ஒதுங்கிப்போக ஒரு சிலர் தான் காரணம்.
சிந்தனை செய்து பார்!

முதலில்!
தட்டிக்கொடு!
தோள்கொடு! 
நம்பிக்கை கொடு!
நல்லதை சொல்லு, ஒன்றுபடு! ஆதரவு கொடு "

வெற்றி அடைந்தவர்கள் நிச்சயம் இதை கடந்து வந்தவர்கள் தான்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மக்கள் நல்லுறவு

இ.சுக்குர்லா பாபு

Monday, July 11, 2016

நமது மக்கள் நல்லுறவு ஜூலை மாத இதழ்

 நமது மக்கள் நல்லுறவு ஜூலை மாத இதழ்





 மக்கள் நல்லுறவு

Sunday, July 10, 2016

Health Tips



மக்கள் நல்லுறவு
1. தண்ணீர் ஒரு நாளை குறைந்தபட்சம் 3 - 5 லிட்டர் வரைக்கும் குடித்தால் நல்லது.

2. குளிர்ந்த தண்ணீர் (ஃபிரிஜ் வாட்டர்) குடிப்பதைவிடவும், சாதாரண தண்ணீர், பானையில் ஊற்றி வைத்த தண்ணீர் அல்லது சுடுத்தண்ணீர் குடிப்பது நல்லது.

3. சாப்பாட்டிற்கு பிறகு அல்லது எப்போதுமே சுடுத்தண்ணீர் குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் எளிதாக வெளியேற்றப்படும்.

4. FAST FOOD சாப்பிடுவதை நிறுத்திவிடலாம், அல்லது குறைத்துக்கொள்ளலாம்.

5. பலகாரங்கள் சாப்பிடுவதை விட பழங்களை சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ளலாம்.

6. ஐஸ் கிரிம், பேக்கரி ஐடம்ஸ் எல்லாம் மாதம் ஒரு முறை சாப்பிடலாம், அல்லது நிறுத்திவிடலாம். (இது பெரியவர்களுக்கு மட்டும்)

7. இரவில் சாப்பிடவுடன் தூங்கக்கூடாது.

8. கண்டிப்பாக உடற்பயற்சி செய்ய வேண்டும், ஒரு குட்டி வாக் போகலாம். குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி உடம்புக்கு தேவை.


9. உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், நல்ல குத்து பாட்டு போட்டு விட்டு, 15-20 நிமிடம் நன்றாக டான்ஸ் ஆடலாம். ஆடத்தெரியவில்லை என்றாலும் கையை காலை ஆட்டி ஏதாவது செய்தால் போதும் அதுவும் உடற்பயற்சியே.

10. முடிந்தவரை நம் வேலையை நாம் செய்ய பழகிக்கொள்ளலாம், வீட்டு வேலைகளிலும் சரி, அலுவலக வேலையிலும் சரி. நம்மை நாம் ஆக்ட்டிவாக வைத்துக்கொண்டால் நம் உடலுக்கு நல்லது.


மக்கள் நல்லுறவு