Tuesday, July 12, 2016

மனிதஇயல்பு இதில் நீந்தி வருவது சாதனை

மனிதஇயல்பு இதில் நீந்தி வருவது சாதனை

ஒருவன் ஒரு  பொது வேலையை செய்தால் அதன் பிரதிபலன் பிரதிபலிப்பு இந்த சமூகத்தில் பலமுகங்களாக காணப்படுகிறது.
அவற்றில் சில துளிகள்...

முதலில் இணைந்து செய்ய யாரும் முன் வரமாட்டார்கள்! மேலும் சும்மா இருக்க மாட்டார்கள், விமர்சனம் அதிகம் செய்வார்கள், பாராட்டமாட்டார்கள் ஆனால் கேள்வி மட்டும் நிறைய கேட்பார்கள்.

ஒரு சிலர் இவர் எதற்க்கு சேவை செய்யவேண்டும்?
என்ன நோக்கம்?
பிற்காலத்தில் அரசியல் குதிக்கவா?
பரவாயில்லை இவர் நல்லதை  செய்தார், மகிழ்ச்சி! சூப்பர் உங்கள் பணி தொடரட்டும்,! வாழ்த்துக்கள்.

ஒரு சிலர் இவனுக்கு எதுக்கு இந்த வேலை,?
வேறு வேலை இல்லையோ?
நல்ல காரியம் நன்றி!

ஒரு சிலர் இவருக்கு ஆதாரவாய் நாமும் துணையாய் இருப்போம்! இந்த மாதிரி வேலைக்கு நான் வரமுடியாது நேரம் இல்லைவேண்டுமென்றால் செலவுக்கு பணத்தை வைத்துக்கொள்.

ஒரு சிலர் என்னால் பணம் தரமுடியாது, உடல் உழைப்பை தருகிறேன், தோள் கொடுப்பேன், நேரத்தை சேவைக்கு ஒதுக்கி தருகிறேன்.

ஒரு சிலர் இதை வைத்து காசு சம்பாதிக்கவா நிறைய காசு வருமா?
வருமானம் வருமா?
என்ன லாபம்?

ஒரு சிலர் சேவைக்கு சென்றால்
சாப்பாடு வாங்கித்தருவாரா?
மது வாங்கித் தருவாரா?

ஒரு சிலர் சேவையினால் விளம்பரம் தேடல்
சேவையினால் வீண் விரயம்?
சேவையினால் மனத்திருப்தியோ?
இப்படி எதுவாய் இருக்கும்?

புறம் பேசுவது? அவதூறு பேசுவது, இப்படி மனிதரில் பலவகை.
சரி
இதில் நீங்க எந்த வகை?

நல்ல மனதோடு சேவை செய்ய வரும் மனிதர்களை இப்படி பல கேள்விகளை கேட்டால் எவன் வருவான்?
பொதுசேவைக்கு?

ஒரு சிலர் ஒதுங்கிப்போக ஒரு சிலர் தான் காரணம்.
சிந்தனை செய்து பார்!

முதலில்!
தட்டிக்கொடு!
தோள்கொடு! 
நம்பிக்கை கொடு!
நல்லதை சொல்லு, ஒன்றுபடு! ஆதரவு கொடு "

வெற்றி அடைந்தவர்கள் நிச்சயம் இதை கடந்து வந்தவர்கள் தான்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மக்கள் நல்லுறவு

இ.சுக்குர்லா பாபு

No comments:

Post a Comment