மக்கள் நல்லுறவு
தெரிந்தே தப்பு செய்கின்றவர்களுக்கு மன்னிப்பு (கருணை
கொண்ட இறைவனிடத்தில் கூட) கிடையாது,
இதற்க்கு தண்டனை நிச்சயம் உண்டு (கண்ணேதிரே)
ஒரு சில உதாரணம்
:
நோய் வரும் என்று
தெரிந்து மதுவை தொடர்ந்தது குடித்து கொண்டு இருப்பவர்கள், நோய் வரும் என்று அறிந்து விலை மாது விடம் செல்பவர்களுக்கும் மன்னிப்பு
கிடையாது.
எது வந்தாலும்
மருந்து உள்ளது என நினைத்து தொடர்ந்து தவறு செய்தால் அந்த மருந்தே உன்னை
உலகிற்க்கு எடுத்து காட்டி கேவலப் படுத்தும்.
முதலில்
மகிழ்ச்சியாய் இருக்கும் இறுதியில்
துன்பத்தில் முடியும் அதானால் தான் அதன் பெயர் மது.
எனவே துன்பம் வரும் என தெரிந்து எச்சரிக்கையாய்
இல்லாமல் சுய இன்பத்தை தேடி, உடல் நலத்தை
இழந்து தன்னை நம்பினவர்களையும், நம்பி உள்ளவர்களையும் (குடும்பத்தை) ஏமாற்றுகிறார்கள்.
இது மதுவையும்,
விலை மாதுவையும் ஆதரிக்கும் அரசுகளுக்கும் இது
பொருந்தும், மதுவை தொடங்கி
மெல்ல மெல்ல ஆசையை தூண்டி, மக்களை அடிமையாக்கி, நோய்களை பரப்பி
அழிவை உண்டாக்கி பல குடும்பங்களை நடுத்தெருவில் கொண்டு நிறுத்தும் செயல், நம்பிக்கை துரோகம், இந்த செயலை
செய்யும் அரசு, தலைவன், தலைவி,
நிம்மதி இல்லாமல் நோய்களை
பெறுவார்கள், தீயதினால் வரும் வருமானத்தால் நாடு வளர்ச்சி
அடையாமல், நாட்டை கடனுக்கு கொண்டு சென்று குழப்பத்தில்
தவிக்கவைப்பார்கள்.
இது உண்மை, வரலாறு நமக்கு உணர்த்துகிறது (கண்ணேதிரே).
எனவே சிந்தித்து
பாருங்கள்.
இதற்க்கு யார் காரணம்? யார் பொறுப்பு? யாருக்கு இழப்பு? தேவையா இந்த பொழப்பு?
தயவு செய்து விட்டு விடுங்கள்.
நீங்களாகவே மெல்ல
மெல்ல இது போன்ற தீய பழக்கங்களில் இருந்து
மீண்டு வாருங்கள்!
உங்கள்
குடும்பத்துடன்
வாழ்க வளமுடன்!
அன்புடன் மக்கள் நல்லுறவு!
No comments:
Post a Comment