Monday, June 25, 2018

கட்சிகள் செய்வது சரியா?


மக்களின் கருத்துக்கள் :

மிகுந்த நம்பிக்கை எதிர்பார்புகளுடன் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரச்சனைகளை பற்றி  பேசாமால், தீர்க்காமல் ஒவ்வொரு தனிநபர்  பேச்சுக்கு குற்றம் தேடி கண்டுபிடிப்பதும்,மாறி மாறி அவதூறு பேசிக்கொள்வதும், சுயலாபத்திற்க்காக மக்கள் குரலை சட்டசபையில் பேசாமல் வெளியேறுவதும், தொடர்கதையாகி விட்டது.

ஆட்சியை கவிழ்க்க ஒரு கூட்டம், ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஒரு கூட்டம், ஆதரவு ஒரு கூட்டம், கட்டளை போட ஒரு கூட்டம், இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளும் இவர்களை சுற்றியே உள்ளதால், மக்களை மறந்து கஷ்டத்தை கொடுத்து விடுகின்றனர்.

உண்மையில் மக்களின் தேவைகளை கண்டு கொள்வதில்லை,உள் நோக்கம் வேறு, செயல் வேறு, அரசியல் கட்சிகள் மாறி மாறி எதோ ஒரு செய்திகளை மட்டும் கையிலெடுத்து பேசி, காலத்தை வீண் விரயம் செய்கிறது, நிரந்திர தீர்வுகள் இல்லை.

நல்லது நடக்கும் என நம்பிக்கையில் தேர்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களும், அரசும் ஒன்றும் மக்களுக்கு செய்யாமல் தினந்தோறும் பத்திரிக்கைக்கு மாறி பேட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தொடர்ந்து மத்திய மாநில அரசுகளால் ஏதோ ஒரு வகையில் சட்டம் போட்டு கட்டம் கட்டி பிரச்சனைகளை தருகின்றன.

மக்களும் தொடர்ந்து தங்களது தேவைகளுக்கு  பிரச்சனைகளுக்காக எதோ ஒரு வகையில் போராட்டங்கள் செய்து இழப்புகளை சகித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள், எப்படி பார்த்தாலும் இறுதியில் பாதிப்பு  மக்களுக்குத் தான் இருக்கும், அரசியல், அரசியல்வாதிகள் மேல் மெல்ல மெல்ல வெறுப்பு வந்து கொண்டிருக்கிறது, யாரை நல்ல தலைவராக ஏற்றுக்கொள்வது, யாரை நம்புவது என்ற குழப்பம் மக்களிடையே நிலவுகிறது.

ஜாதி மதம் அரசியல்...


தற்பொழுது ஜாதி, மதம் அரசியல் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது இவற்றை நல்ல விசயத்திற்க்கு மட்டும்  பயன்படுத்துங்கள்!

இதை முன்னுதாரணம் கொண்டு நாலு பேருக்கு நன்மை செய்ய யாராவது போட்டி போட்டது உண்டா?

உன்னால் உன் ஜாதிக்கும், மதத்திற்க்கும், அரசியலுக்கும் என்ன நன்மை கிடைத்தது, உன் மக்கள் என்ன பயன் அடைந்தார்கள் யோசி!

நீ நட்பை உண்டாக்கினாயா? பிரிவை உண்டாக்கி வருகிறாயா?

யாரால் எவரால்  மனிதர்களுக்கு நன்மை ஏற்படுகிறதோ அவர்களே மனிதர்களில் சிறந்தவர்

நீ!  நீங்கள் சிறந்தவரா?

சிந்தித்துப்பாருங்கள்!

மாற்றம் வேண்டும்...


ஒரு மாநிலத்தில் மொழி சார்ந்து  எடுக்கப்படும் திரைபடங்கள் அதன் கதாநாயகர்களின் செயல்பாடுகள் தான் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக ஈர்க்கப்படுகிறது,  பிரதிபலிக்கின்றது!

தமிழ்படம், தெலுங்கு படம், கன்னடப்படம் மலையாளம் படம் அதன் வரிசைப்படி அந்தந்த மாநிலத்தில் அந்த மக்களின் அனுகுமுறை, செயல்பாடு, இளைஞர்களை  வைத்து கணக்கிட்டு பாருங்கள்! கிட்டத்தட்ட ஒன்றிபோயிருக்கும்,

நாட்டு மக்களை நல்வழிப்படுத்த நாட்டை வழி நடத்தி செல்ல திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் பெரும் பங்களிக்கிறது, முக்கியமாக திரைக்கதைகள், திரைநட்சத்திரங்களின் செயல்பாடுகள் இளைஞர்களை எளிதாக தொற்றிக்கொள்கிறது.

அன்பு, பாசம், நட்பு, நல்ல பண்பு, கல்வி,குடும்பம்,  எதார்த்தம், தர்மம், நீதி, நேர்மை,  நாணயம், நல்ல அரசியல், விஞ்ஞானம், விளையாட்டு, இன்னும் பல நல்ல விசயங்களுக்கு எதிர்காலத்தில் திரைப்படங்களை பயன்படுத்தினால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது!

முயற்சி செய்து பாருங்கள் ஒன்று நாடு நல்ல இருக்கும் இல்லையென்றால் வீடு நல்லாய் இருக்கும்.

தேசத்தை காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை!

மக்கள் நல்லுறவு

சொல்ல துடிக்குது மனசு...


நாலு பேருக்கு நல்லது செய்ய பணம் குணம் முக்கியம்.

கொஞ்ச நாள் கழித்து அந்த இரண்டும் இருந்தால் போதது அடுத்து  பதவி இருந்தால் உதவியாய் இருக்கும்!

அந்த பதவியை பெற பணம், ஜாதி முக்கியம்! தப்பித் தவறி பதவி வந்தால் அமைதி சந்தோஷம்,  அனைத்தும் பறிபோகும்,

போட்டி, பொறமை கூட வரும்,உன்னை வீழ்த்த சதி நடக்கும்!

நல்லது செய்ய எதிர்ப்பு வரும், உன் குணம் மாறிப்போகும் 'உன் பணம் பறிபோகும், அல்லது உன்னை பணம் சம்பாதிக்க சொல்லும், உன் பெயர் கெட்டு விடும், உன் நிலை மாறும்.

பதவி இருக்கும் வரை பத்து பேர் கூடவே இருப்பான்! பதவி போனபின் பறந்து போயிடுவான்!

நேற்று வரை உன் விருப்பம் உன்  முடிவு! நீ எஜமான்! இன்று மற்றவனுக்கு நீ  அடிமை!

உன் ஆரம்ப நோக்கம் வீணாகும்!

இந்த அரசியல் நல்ல மனிதர்களை வீட்டுக்கு அனுப்பும்! வஞ்சம் கொண்டவனை நாட்டுக்கு கொடுக்கும்! தக்க வைக்கும்!

எதற்க்கு இந்த அரசியல்?

யாரை வாழவைக்க! யாரை அழவைக்க!

நாலுபேருக்கு நன்மை செய்ய அரசியல் தேவையா?

சிந்திக்க வேண்டிய விஷயம்!

குழந்தைகள் வளர்ப்பில் கவனம்!


மக்கள் நல்லுறவு பகிர்கிறது
உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா
தயவு செய்து, வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
கீரை வாரம் 3 முறை பருப்புக்கூட்டாகவும், ராகியை சேமியாவாக, கொழுக்கைட்டையாக, ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்!
ஆப்பிள், ஆரஞ்சை விட பப்பாளி, கொய்யாவில் சத்துக்கள் அதிகம்! தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்?
தயவு செய்து மண் சட்டியும், இரும்புக்கடாயும், மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் 5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
கருப்பு அரிசி, கருப்பு எள், கருப்பட்டி, கருப்பு உளுந்து, மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்!
உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்?
தயவு செய்து பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை, மாவு வகைகளை கொடுக்காதீர்கள்! ஃப்ரஷ்ஷான காய்கறிகளை,இறைச்சியை சமைக்கவும் சீரகத்தண்ணீர், சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்!
நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை எப்பொழுது கைவிட்டோமோ! அன்றே நாம் நோய்யின் பிடியில் சிக்கிக்கொண்டோம். இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் 50%  ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ் கையில் பயன்படுத்துவன் மூலம் சாத்தியமாகும்.
இன்றே! மீட்டெடுப்போம்! வாருங்கள்!

சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???

சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.

தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு.

அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.

பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம் சாப்பிடுகிறார்கள்.
கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும். அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.

சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும். கொதிக்கக்கொதிக்க சோறு சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.

முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது.

பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.

சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.

பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச்சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.

சிலர் சாம்பார், ரசம், வற்றல்குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல் எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல். மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

மாதாந்திர பிரச்சினை உள்ள பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது.

சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது.

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும், சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள். கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும். உணவை நன்றாக மென்று,  பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்; புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,  வாழ்நாளைக் குறைக்கும். குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம். மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள். மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது. உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கட்டாயம் உறங்க வேண்டும். 
வாழ்க நலமுடன்...