Monday, June 25, 2018

கட்சிகள் செய்வது சரியா?


மக்களின் கருத்துக்கள் :

மிகுந்த நம்பிக்கை எதிர்பார்புகளுடன் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரச்சனைகளை பற்றி  பேசாமால், தீர்க்காமல் ஒவ்வொரு தனிநபர்  பேச்சுக்கு குற்றம் தேடி கண்டுபிடிப்பதும்,மாறி மாறி அவதூறு பேசிக்கொள்வதும், சுயலாபத்திற்க்காக மக்கள் குரலை சட்டசபையில் பேசாமல் வெளியேறுவதும், தொடர்கதையாகி விட்டது.

ஆட்சியை கவிழ்க்க ஒரு கூட்டம், ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஒரு கூட்டம், ஆதரவு ஒரு கூட்டம், கட்டளை போட ஒரு கூட்டம், இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளும் இவர்களை சுற்றியே உள்ளதால், மக்களை மறந்து கஷ்டத்தை கொடுத்து விடுகின்றனர்.

உண்மையில் மக்களின் தேவைகளை கண்டு கொள்வதில்லை,உள் நோக்கம் வேறு, செயல் வேறு, அரசியல் கட்சிகள் மாறி மாறி எதோ ஒரு செய்திகளை மட்டும் கையிலெடுத்து பேசி, காலத்தை வீண் விரயம் செய்கிறது, நிரந்திர தீர்வுகள் இல்லை.

நல்லது நடக்கும் என நம்பிக்கையில் தேர்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களும், அரசும் ஒன்றும் மக்களுக்கு செய்யாமல் தினந்தோறும் பத்திரிக்கைக்கு மாறி பேட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தொடர்ந்து மத்திய மாநில அரசுகளால் ஏதோ ஒரு வகையில் சட்டம் போட்டு கட்டம் கட்டி பிரச்சனைகளை தருகின்றன.

மக்களும் தொடர்ந்து தங்களது தேவைகளுக்கு  பிரச்சனைகளுக்காக எதோ ஒரு வகையில் போராட்டங்கள் செய்து இழப்புகளை சகித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள், எப்படி பார்த்தாலும் இறுதியில் பாதிப்பு  மக்களுக்குத் தான் இருக்கும், அரசியல், அரசியல்வாதிகள் மேல் மெல்ல மெல்ல வெறுப்பு வந்து கொண்டிருக்கிறது, யாரை நல்ல தலைவராக ஏற்றுக்கொள்வது, யாரை நம்புவது என்ற குழப்பம் மக்களிடையே நிலவுகிறது.

No comments:

Post a Comment