Monday, June 25, 2018

மாற்றம் வேண்டும்...


ஒரு மாநிலத்தில் மொழி சார்ந்து  எடுக்கப்படும் திரைபடங்கள் அதன் கதாநாயகர்களின் செயல்பாடுகள் தான் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக ஈர்க்கப்படுகிறதுபிரதிபலிக்கின்றது!

தமிழ்படம், தெலுங்கு படம், கன்னடப்படம் மலையாளம் படம் அதன் வரிசைப்படி அந்தந்த மாநிலத்தில் அந்த மக்களின் அனுகுமுறை, செயல்பாடு, இளைஞர்களை  வைத்து கணக்கிட்டு பாருங்கள்! கிட்டத்தட்ட ஒன்றிபோயிருக்கும்,

நாட்டு மக்களை நல்வழிப்படுத்த நாட்டை வழி நடத்தி செல்ல திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் பெரும் பங்களிக்கிறது, முக்கியமாக திரைக்கதைகள், திரைநட்சத்திரங்களின் செயல்பாடுகள் இளைஞர்களை எளிதாக தொற்றிக்கொள்கிறது.

அன்பு, பாசம், நட்பு, நல்ல பண்பு, கல்வி,குடும்பம்,  எதார்த்தம், தர்மம், நீதி, நேர்மை,  நாணயம், நல்ல அரசியல், விஞ்ஞானம், விளையாட்டு, இன்னும் பல நல்ல விசயங்களுக்கு எதிர்காலத்தில் திரைப்படங்களை பயன்படுத்தினால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது!

முயற்சி செய்து பாருங்கள் ஒன்று நாடு நல்ல இருக்கும் இல்லையென்றால் வீடு நல்லாய் இருக்கும்.

தேசத்தை காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை!

மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment