Friday, May 6, 2016

புகார்

கோவை மக்கள் நல்லூறவு
புகார் பெட்டி


குடியிருப்புக்கு நடுவே குப்பைமேடு என்ற தலைப்பில் கடந்த 8-4-16, 9-4-16 அன்று கோவை கண்ணப்பநகர் To நல்லாம்பாளையரோடு, நேதாஜி நகர் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான பகுதியில் குடியிருப்புக்கு நடுவே குப்பைகள், கட்டிட கழிவுகள், மாமிச கழிவு,  கொட்டப்படுவதும், நெருப்பு பற்ற வைத்து புகைமண்டலம், சமுக விரோதிகள் நடமாட்டம் பற்றி செய்தி, புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது, இது சம்மந்தமாக, மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், காவல் துறை ஆணையாளர், 44/வார்டு Mc அவர்களுக்கும், மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகவல் தரப்பட்டு புகார் மனு அளிக்கப்பட்டு இருந்தது.

இது சம்மந்தமாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மட்டும்  நேரில் பார்த்து விசாரணை செய்தனர், 44 வார்டு மாமன்ற உறுப்பினர் பாலு அவர்கள் தேர்தல் முடிந்து செய்து தருவதாக கூறினார்.


ஏற்கனவே கோவை மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில்  அளித்த புகார் பதியப்பட்டதாக எண் அளிக்கப்பட்டது (54493) 9/4/16.
 
ஆனால் மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இன்று குப்பைகள் அகற்றப்பட்டு விட்டதாகவும், குறை திர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Complaint petition Close 6/5/16 இன்று செய்தார்கள்,(enclosed)  ஆனால் உண்மையில் மாநகராட்சி தரப்பில் எந்த நடவடிக்கை இன்று வரை எடுக்கப்படவில்லை.


நிர்வாகத் திறமை சூப்பர்!!!.

மக்கள் நல்லூறவு

அரசியல்

மக்கள் நல்லுறவு

தொழில் வளர்ச்சி, தொழிற்சாலை முன்னேற்றம், ரியல்எஸ்டேட், ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்ததா, முன்னேற்றம் அடைந்ததா? என்பதை மனசாட்சிப்படி பதில் சொல்லுங்கள், அரசியல் வட்டாரம் அதிக முன்னேற்றம் அடைந்தது உண்மை, மறுப்பவர்கள் உண்டா?

மிண்டும் சிற்றின்பத்திற்க்காக ஜந்து வருடம் கஷ்டம்  அனுபவிக்க ரெடியா?


அம்மா ஆட்சியில் கஷ்டங்கள் உள்ளதை உணர்ந்து தற்போழுது சலுகைகளாக அறிக்கை வெளியிடபட்டுள்ளது,

அதில் 

மின்சாரத்துறை, பதிவுத்துறையில் செய்யப்படும் மாற்றம் ஒரு உதாரணம்,

மேலும் மதுவிலக்கு 
டாஸ்மாக் இருக்குமா?


எப்படியாவது ஆட்சியைபிடித்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது இந்த அறிவிப்பு,
ஆட்சிக்கு வந்த பின் செய்யப்படாவிட்டாலும் மக்களால் ஒன்றுமே செய்ய முடியாது, ஆட்சி அமைந்துவிட்டால் அசைக்கமுடியாது, என்று கருதும் அரசியல்வாதிகள்,

திரும்ப திரும்ப வாக்குகளை அள்ளி வீசுகின்றனர்,

என்ன செய்யப் போகிறாய்?
வாக்குகளை அள்ளித்தருகிறாயா?
கிள்ளித்தருகிறாயா?

நிலக்கடலை

மக்கள் நல்லுறவு பகிர்கிறது


"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்".
தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???
1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது
2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்
3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்
4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது
5. ஆயில் புல்லிங்
6. காம்பிளான் குடித்தால் வளரலாம்
7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா
8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா
9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி
10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்

வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயில்வதால் என்ன பயன் ????

நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின, அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மை விட்டு பிரிந்து சென்றது.

அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்.

அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமையம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச் சென்றது.

பின்விளைவு

பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளி நாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று

சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ண விடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்
பின்விளைவு

அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது

உண்மையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா மைதா தான்.

சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல்...

டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவ குணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது.

இப்படியே ஒவ்வொன்றையும் இழந்து கொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று உணராமல் இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள், நாளை நம்மையும் இழந்து விடுவோம்.

மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல 
மருத்துவமனைகள்  அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..

படித்தேன்.. பிடித்தது...... பகிர்ந்தேன்.....

மக்கள் நல்லுறவு

Thursday, May 5, 2016

ஏணி

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்த கதை உதாரணம் :

அண்ணா தி மு க யாரால் தொடங்கப்பட்டது, எந்த சூழ்நிலையில் தொடங்கப்பட்டது, யார்பெயரில் தொடங்கப்பட்டது என்பதை நினைத்து பாருங்கள், MGR நினைத்து இருந்தால் 
தன் பெயரில் தொடங்கி இருக்கலாம், செய்யவில்லை, ஆட்சியில்  தொடங்கிய திட்டங்கள் அண்ணா பெயரிலும்  வரலாற்று நாயகர்கள் பெயரிலும்   தமிழக அரசு பெயரிலும் தொடங்கினார், அரசு பெயரில் விளம்பரம் வந்தன.

அப்படியிருக்க அவரால் கட்சிக்குள் வந்தவர், Jj தலைவரை மறந்து  அவரது பெயரை பிறந்தநாள், இறந்தநாள்,  தேர்தல்  நேரங்களில், மட்டும்  பயன் படுத்துகின்றனர், மற்ற நேரங்களில் பெட்டியில் வைத்து பூட்டிவிடுகின்றனர், தேர்தல் இரட்டை இலை சின்னத்தில்  MGR நிற்பதாகவே நினைத்து இன்றும் கிரமங்களில் வாக்களிக்கின்றனர், ஆனால் அம்மா MGR, தமிழகஅரசு என்பதை மறந்து தனது பெயரிலேயே அனைத்து திட்டங்களையும் அறிவிக்கிறார்.

அம்மா ஆட்சி, அம்மா தி மு க ஆகிவிட்டது, ஏணியில் இறங்கும் காலம் வந்து விட்டது, இப்போது ஏணி தேவைப்படுகிறது, இறங்க அல்லது ஏற ஏணி வேண்டும், 

இப்போது புரிகிறதா 
உண்மையான விசுவாசி யார்? உண்மையான தொண்டர்கள் யார்,?
இல்லை  இடைப்பட்ட நேரத்தில் MGR பெயர் பயன்படுத்தக்கூடாது என சொல்லப்பட்டுள்ளதா? 
சுயநலம், சுயவிளம்பரம், இது மக்கள் நலனுக்கா? அல்லது மன நலனுக்கா?  அமைச்சர்களும் தமிழக அரசு ஊழியர்கள் என்பதை மறந்து,அம்மாவுக்கு பயந்து அம்மாவின் ஆணைப்படி செய்ய, சொல்ல பழகி கொண்டனர்.


அம்மாவின் தொண்டர்கள் சேவர்களாக மாறி காலடியில் கிடக்கின்றனர், மக்களின் சேவைக்கு மக்களால் தேர்தெடுக்கப்பட்டதை மறந்து விட்டனர்,

தேர்தல் வந்தால் மிண்டும்(ஏணி)  மக்களை தேடி வந்துவிடுகின்றனர்.


சிந்தித்துபாருங்கள்!
உண்மையை உரக்க சொல்ல பழகிக்கொள்ளுங்கள்.

மக்கள் நல்லுறவு 

உண்மை ஒரு நாள் வெல்லும்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது      
படித்ததில் பிடித்தது...

ஒரு நாட்டின் தளபதி இறந்து போனார். அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜா பல இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார். 

பல கட்டங்களாக நடந்த தேர்வில் இறுதியாக இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இதில் ஜெயிப்பவன் தளபதியாவான். அது மட்டுமின்றி ஒரு மூட்டை பொற்காசும் அவனுக்குப் பரிசுப் பொருளாக வழங்கப்படும்.

இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பாகவே இருவரும் வரவழைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தனித் தனியாகத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அதிகாலையிலேயே போட்டி ஆரம்பிக்கப்படும் என்பதால் நேரத்துடனேயே உணவருந்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களில் ஒருவனின் அறைக்குள் தலைமை சமையல்காரன் திடீரென்று நுழைந்தான். அவனிடம் ரகசியமான குரலில் , "தம்பி. நாளை நடக்கும் போட்டியில் நீ மட்டுமே கலந்து கொள்ளப் போகிறாய் . எனவே போட்டியே இல்லாமல் நீதான் ஜெயிப்பாய்" என்றான். அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.

சமையல்காரன் மீண்டும் சொன்னான். "இதோ பார். நான் பக்கத்து அறையிலுள்ள உன் போட்டியாளனுடைய உணவில் தூக்கத்திற்கான மருந்தைக் கலந்து விடுவேன். அவனால் காலையில் எழுந்திருக்கவே முடியாது. ராஜா சோம்பேறியை ஏற்றுக் கொள்ளவே மாட்டார். அப்புறம் நீதான் தளபதி. இதற்குப் பிரதிபலனாக , நீ பரிசாகப் பெறும் தங்கத்தை எனக்குத் தந்துவிட வேண்டும். சம்மதமா?"  என்றான்.

சமையல்காரன் சொல்லி முடித்தவுடனேயே அவன் அவசரமாய்ச் சொன்னான், "ஐயா. இது நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய பதவி . தகுதியுள்ளவன் வென்றால் மட்டுமே நாட்டுக்குப் பாதுகாப்பு. எனவே எனக்குத் தகுதி இருந்தால் நான் வெற்றி பெறுவேன். தயவு செய்து குறுக்கு வழி வேண்டாம். அதே நேரத்தில் என் போட்டியாளனிடம் பேரம் பேசி என் உணவில் மருந்தைக் கலந்து விடமாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள்" என்றான்.

சமையல்காரன் புன்னகைத்தபடி, "கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும். நீ புத்திசாலி. சத்தியமாக நான் உனக்கு நல்ல உணவை மட்டுமே பரிமாறுவேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் சமையல்காரனின் உதவியாளன், மற்றுமுள்ள போட்டியாளனிடம் அதே பேரத்தைத் தொடங்கியிருந்தான். ஆனால் அங்கே நடந்ததோ வேறொன்று. அவன் பேரத்திற்கு ஒப்புக் கொண்டான்.

போட்டியில் கிடைக்கும் தங்கப் பரிசு மட்டுமன்றி இன்னும் கொஞ்சம் அதிக தங்கமும் சேர்த்துக் கொடுப்பதாக வாக்களித்தான். உதவி சமையல் காரனும், "காரியத்தை சிறப்பாக முடிப்பேன். நீங்கள் தான் இந்நாட்டின் தளபதி" என்றான்.

இரவு உணவு முடிந்து இருவரும் உறங்கினார்கள். பேரத்துக்கு ஒப்புக் கொள்ளாத வீரன் அதிகாலையில் எழுந்து போட்டிக்குக் கிளம்பினான். அங்கே போய்ப் பார்த்தால், அவனோடு போட்டியிட யாருமே வந்திருக்கவில்லை.

மன்னர் திடீரென அந்த இடத்தில் பிரவேசித்து, "புதிய தளபதியாருக்கு வாழ்த்துகள் என்று சொல்லித் தன்னுடைய வீர வாளைப் பரிசளித்தார். அவனுக்கோ ஒரே ஆச்சரியம். போட்டியாளன் இல்லாமல் தேர்வான அதிர்ச்சி. மன்னரை நேருக்கு நேராய்ப் பார்த்துவிட்ட மகிழ்ச்சி. தன்னையறியாமல் கண்களில் நீர் கசிந்தது.

மன்னர் அவனை அணைத்துக் கொண்டார்.

"மகனே! நடப்பதெல்லாம் கனவு போலத் தோன்றுகிறதா? உங்களுக்கான இறுதிப் போட்டி நேற்றிரவே முடிந்து விட்டது. காசைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப் பதவியைக் கொண்டு மேலும் சம்பாதிக்கத்தான் முயல்வார்கள். தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில் அவனைப் போன்ற புல்லுருவிகள் இருந்தால் நாட்டையே கூட விற்றுவிடுவார்கள். எனவே அவன் அதிகாலையிலேயே விரட்டப்பட்டான். அந்தச் சூழலிலும் உண்மையாய் நடந்து கொண்ட நீ தேர்ந்தெடுக்கப்பட்டாய்" என்றார்.

உண்மை ஒரு நாள் வெல்லும்
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதைதானே இது...

மக்கள் நல்லுறவு

வாக்களர்களே!

மக்களே சற்று சிந்தியுங்கள்!
வாக்களர்களே! 


உடம்பு சரியில்லாதவங்கள், நடக்க முடியாதவங்க, வயதான பெரியவர்கள், நோயாளிகள் இவங்க ஆசைப்பட்டு தேர்தலில் போட்டி போட்டு  நிற்பதை பாராட்டலாம், வெற்றி பெற்றால் மிண்டும் தொகுதிபக்கம்  இவர்களால் வர முடியாது இதை கேரண்டியா சொல்லலாம்.


உட்கார்ந்த இடத்திலேயே முடிந்தால்  எல்லாம் செய்வார்கள், செய்யாமல் போகலாம்,  தொகுதியில் உள்ள குறைகளை  பற்றி யார் சொல்வார்கள், அதற்க்கு குறைகளை எடுத்து சொல்ல நீங்கள் பழகிக்கொள்ளுங்கள், ஐந்து வருடம் தொகுதிக்கு வரலை ஒன்னும் செய்யவில்லை அப்படின்னு  பின்னர் குற்றம் சொல்லக்கூடாது, ஏனென்றால் அவர்களை (நோயாளிகளை)  தேர்ந்தெடுத்தது நம்மதான் அவர்களை குற்றம் சொல்லி என்ன பயன்?


சரியான நபர்களை சிந்தனை செய்து முதலில்  தேர்ந்தெடு!
நல்லதை கொடு, முதலில்  உண்மையை எடுத்து சொல்ல பழகுங்கள். 
தப்பை உடனுக்குடன் எடுத்து சொல்லுங்கள். 
அரசியலில், அரசியல்வாதிகளிடம் மாற்றம் காணலாம், மாற்றம் உண்டாகும்.

நம்பிக்கையுடன் நல்லுறவு

Sunday, May 1, 2016

அரசியல்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது
அரசியலில் சிந்திக்க

🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
இன்றைய அரசியல் பிரமுகர்களின் அறிவுத்திறன் பற்றிய ஒரு குட்டிக் கதை...

Mr MLA

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மனைவி அவரிடம் வந்து ....

"என்னங்க...நானும் எல்லார்கிட்டையும் நாலு வருஷத்துக்கு மேலா நான் எம்.எல்.ஏ பொண்டாட்டி, நான் எம்.எல்.ஏ பொண்டாட்டின்னு சொல்லிகிட்டு இருக்கேன்..

எப்பதான் நான் மந்திரி பொண்டாட்டின்னு சொல்றது..? உடனே சி எம் ஐப் பார்த்து, அதான் நம்ம தலைவரைப் பார்த்து, மந்திரியாகர வேலையைப் பாருங்க..
"அதுவும் நீங்க போலீஸ் மந்திரியாதான் ஆகனும்" என்றாள் மனைவி..
"அதென்ன வேற துறை மந்திரியா ஆக்க் கூடாதா ? கேட்டார் எம்.எல்.ஏ...

முடியாது...நீங்க போலீஸ் மந்திரியாகத்தான் ஆகனும், ஏன்னா என் பிரண்ட்ஸ் பல பேர் இன்ஸ்பெக்டர் மனைவி, எஸ்.பி மனைவி, கலெக்டர் மனைவின்னு பெருமை பட்டுக்கொள்கிறார்கள்.

நான் போலீஸ் மந்திரியின் மனைவின்னு ஆயிட்டா...அதான் எனக்கு கெத்து...

சரி...சரி... கிளம்புங்க உடனே ! தலைவரைப் பார்த்து போலீஸ் மந்திரி ஆகுற வேலையைப் பாருங்க...

என விரட்ட, சட்ட மன்ற உறுப்பினர் முதல்வரைச் சந்திக்க முதல்வரின் வீட்டிற்கு வருகிறார்...

முதல்வர் தன் வீட்டில் பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டு இருக்கையில் எம்.எல்.ஏ வந்துள்ள செய்தியை சொல்கிறார் உதவியாளர்.

"ஜாதி ஓட்டிற்காக உங்க எல்லாரோட பேச்சைக் கேட்டு இவனை எம்.எல்.ஏ ஆகிட்டு நான் அனுபவிக்கும் கொடுமை கொஞ்சமா நஞ்சமா... சரி அவனை உள்ளே வரச்சொல்" என்றார் முதல்வர் வேதனையுடன்.

"வணக்கம் தலைவரே! நான் வந்த நேரம் எல்லாருமே இருக்காங்க.."
" என்ன விஷயம் ? " கேட்டார் முதல்வர்..


" தலைவரே ! நேரா விஷயத்துக்கு வரேன். என்ன பண்ணுவிங்களோ, ஏது பண்ணுவிங்களோ, எனக்குத் தெரியாது, என்னை உடனடியா போலீஸ் மந்திரியா ஆக்கிடுங்க" என்றார்...

கோபம் கொண்ட முகத்துடன் பொதுச் செயலாளரைப் பார்த்து முறைத்தார் முதல்வர்.
உடனே பொதுச் செயலாளர், எம்.எல்.ஏ விடம் அவருடைய பொது அறிவுத்திறன் பற்றி அவருக்கு உணர்த்த ஒரு கேள்வி கேட்டார்.

"ஆபிரகாம் லிங்கனை சுட்டுக் கொண்றவன் யார்?" எனக் கேட்டார்.


பொதுச் செயலாளர் அருகில் வந்து " அடுத்த வாரம் இதே நாளில் வந்து சொல்கிறேன் " என்று சொல்லி முதல்வருக்கு வணக்கம் சொல்லி கிளம்பினார் எம்.எல்.ஏ. இதைக் கண்ட முதல்வர், அவன் கோபமா போயிட்டான் போல என்று சொன்னார்.

வீட்டிற்கு வந்த எம்.எல்.ஏ மனைவியிடம், என்ன சாப்பாடு என்று கேட்டார்.
" முதல்ல போன விஷயத்தச் சொல்லுங்க" என்றாள்.
"ஏறக்குறைய முடிவு ஆன மாதிரிதான். அடுத்த வாரம் அறிவிப்பு வரும்"
"எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க? எனக் கேட்டாள் மனைவி.

" இல்லன்னா எடுத்த உடனேயே ஒரு கொலை கேசை எங்கிட்ட ஒப்படைப்பாங்களா ?
யாரோ ஆப்ரகாம் லிங்கனாம், எவனோ போட்டுத் தள்ளிட்டு இருக்கான், பெரிய இடம் போல, அதான் நியூஸ் இன்னும் வெளியில் வரலே, நான் ஒரு வாரம் டைம் கேட்டுகிட்டு வந்திருக்கேன்.

அந்த ஆப்ரகாம் லிங்கனை கொலை செய்தவனை கண்டுபிடுச்சி அவங்க முன்னாடி ஒப்படைத்து, நான் போலீஸ் மந்திரின்னு எல்லோருக்கும் காட்ரேன்" என்று சொல்ல, "உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க முடியலேன்னா யாரையாவது சும்மாவாவது ஒத்துக்க வச்சிருங்க, அதுக்கு எவ்வளவு செலவு ஆனாலும் பரவால்ல" என்றாள் மனைவி.


ஆம் தோழர்களே !
இப்படிப்பட்ட பல  அரசியல் பிரமுகர்கள்தான் நம்முடைய வேட்பாளர்களாக உள்ளனர்.
இவர்களில் பலர் வெற்றி பெற்று, மந்திரியாகப் போவதும் உறுதி.
தேர்தலில் நிற்க பணம்.
பணம் கொடுத்து செய்திகள், கருத்து கணிப்புகள்...
ஓட்டு போட பணம் கொடுப்பது...
இதில் சிறந்த நபர்கள் தேர்தலில் போட்டி போடுவதே சிறமம்.
இந்நிலை மாற வேண்டும் !

100 சதம் அனைவரும் வாக்களித்து, தரமான, தகுதியான, தன்மானமுள்ள, தன்னலமற்ற,தியாக உள்ளம் கொண்ட தலைவர்களைத் தேர்ந்தெடுப்போம்.

இந்த தேர்தலில் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறவர்கள், புதிய வாக்காளர்களே !
நல்ல அறிவும், சுயசிந்தனை, சேவை உள்ளம், நாட்டின் வளர்ச்சி,  மனசாட்சியுடன் மக்களின் பணியை மேற்கொள்ளும் மனிதர்களை கண்டறியுங்கள், வாய்ப்பை கொடுங்கள், வாக்களிக்கும் கடமையை செய்யுங்கள்,  எதிர்கால பலனை எதிர்பார்த்து, 
🎤🎤🎤🎤🎤🎤🎤

மக்கள் நல்லுறவு