மக்கள் நல்லுறவு பகிர்கிறது
அரசியலில் சிந்திக்க
இன்றைய அரசியல் பிரமுகர்களின் அறிவுத்திறன் பற்றிய ஒரு குட்டிக் கதை...
Mr MLA
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மனைவி அவரிடம் வந்து ....
"என்னங்க...நானும் எல்லார்கிட்டையும் நாலு வருஷத்துக்கு மேலா நான் எம்.எல்.ஏ பொண்டாட்டி, நான் எம்.எல்.ஏ பொண்டாட்டின்னு சொல்லிகிட்டு இருக்கேன்..
எப்பதான் நான் மந்திரி பொண்டாட்டின்னு சொல்றது..? உடனே சி எம் ஐப் பார்த்து, அதான் நம்ம தலைவரைப் பார்த்து, மந்திரியாகர வேலையைப் பாருங்க..
"அதுவும் நீங்க போலீஸ் மந்திரியாதான் ஆகனும்" என்றாள் மனைவி..
"அதென்ன வேற துறை மந்திரியா ஆக்க் கூடாதா ? கேட்டார் எம்.எல்.ஏ...
முடியாது...நீங்க போலீஸ் மந்திரியாகத்தான் ஆகனும், ஏன்னா என் பிரண்ட்ஸ் பல பேர் இன்ஸ்பெக்டர் மனைவி, எஸ்.பி மனைவி, கலெக்டர் மனைவின்னு பெருமை பட்டுக்கொள்கிறார்கள்.
நான் போலீஸ் மந்திரியின் மனைவின்னு ஆயிட்டா...அதான் எனக்கு கெத்து...
சரி...சரி... கிளம்புங்க உடனே ! தலைவரைப் பார்த்து போலீஸ் மந்திரி ஆகுற வேலையைப் பாருங்க...
என விரட்ட, சட்ட மன்ற உறுப்பினர் முதல்வரைச் சந்திக்க முதல்வரின் வீட்டிற்கு வருகிறார்...
முதல்வர் தன் வீட்டில் பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டு இருக்கையில் எம்.எல்.ஏ வந்துள்ள செய்தியை சொல்கிறார் உதவியாளர்.
"ஜாதி ஓட்டிற்காக உங்க எல்லாரோட பேச்சைக் கேட்டு இவனை எம்.எல்.ஏ ஆகிட்டு நான் அனுபவிக்கும் கொடுமை கொஞ்சமா நஞ்சமா... சரி அவனை உள்ளே வரச்சொல்" என்றார் முதல்வர் வேதனையுடன்.
"வணக்கம் தலைவரே! நான் வந்த நேரம் எல்லாருமே இருக்காங்க.."
" என்ன விஷயம் ? " கேட்டார் முதல்வர்..
" தலைவரே ! நேரா விஷயத்துக்கு வரேன். என்ன பண்ணுவிங்களோ, ஏது பண்ணுவிங்களோ, எனக்குத் தெரியாது, என்னை உடனடியா போலீஸ் மந்திரியா ஆக்கிடுங்க" என்றார்...
கோபம் கொண்ட முகத்துடன் பொதுச் செயலாளரைப் பார்த்து முறைத்தார் முதல்வர்.
உடனே பொதுச் செயலாளர், எம்.எல்.ஏ விடம் அவருடைய பொது அறிவுத்திறன் பற்றி அவருக்கு உணர்த்த ஒரு கேள்வி கேட்டார்.
"ஆபிரகாம் லிங்கனை சுட்டுக் கொண்றவன் யார்?" எனக் கேட்டார்.
பொதுச் செயலாளர் அருகில் வந்து " அடுத்த வாரம் இதே நாளில் வந்து சொல்கிறேன் " என்று சொல்லி முதல்வருக்கு வணக்கம் சொல்லி கிளம்பினார் எம்.எல்.ஏ. இதைக் கண்ட முதல்வர், அவன் கோபமா போயிட்டான் போல என்று சொன்னார்.
வீட்டிற்கு வந்த எம்.எல்.ஏ மனைவியிடம், என்ன சாப்பாடு என்று கேட்டார்.
" முதல்ல போன விஷயத்தச் சொல்லுங்க" என்றாள்.
"ஏறக்குறைய முடிவு ஆன மாதிரிதான். அடுத்த வாரம் அறிவிப்பு வரும்"
"எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க? எனக் கேட்டாள் மனைவி.
" இல்லன்னா எடுத்த உடனேயே ஒரு கொலை கேசை எங்கிட்ட ஒப்படைப்பாங்களா ?
யாரோ ஆப்ரகாம் லிங்கனாம், எவனோ போட்டுத் தள்ளிட்டு இருக்கான், பெரிய இடம் போல, அதான் நியூஸ் இன்னும் வெளியில் வரலே, நான் ஒரு வாரம் டைம் கேட்டுகிட்டு வந்திருக்கேன்.
அந்த ஆப்ரகாம் லிங்கனை கொலை செய்தவனை கண்டுபிடுச்சி அவங்க முன்னாடி ஒப்படைத்து, நான் போலீஸ் மந்திரின்னு எல்லோருக்கும் காட்ரேன்" என்று சொல்ல, "உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க முடியலேன்னா யாரையாவது சும்மாவாவது ஒத்துக்க வச்சிருங்க, அதுக்கு எவ்வளவு செலவு ஆனாலும் பரவால்ல" என்றாள் மனைவி.
ஆம் தோழர்களே !
இப்படிப்பட்ட பல அரசியல் பிரமுகர்கள்தான் நம்முடைய வேட்பாளர்களாக உள்ளனர்.
இவர்களில் பலர் வெற்றி பெற்று, மந்திரியாகப் போவதும் உறுதி.
தேர்தலில் நிற்க பணம்.
பணம் கொடுத்து செய்திகள், கருத்து கணிப்புகள்...
ஓட்டு போட பணம் கொடுப்பது...
இதில் சிறந்த நபர்கள் தேர்தலில் போட்டி போடுவதே சிறமம்.
இந்நிலை மாற வேண்டும் !
100 சதம் அனைவரும் வாக்களித்து, தரமான, தகுதியான, தன்மானமுள்ள, தன்னலமற்ற,தியாக உள்ளம் கொண்ட தலைவர்களைத் தேர்ந்தெடுப்போம்.
இந்த தேர்தலில் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறவர்கள், புதிய வாக்காளர்களே !
நல்ல அறிவும், சுயசிந்தனை, சேவை உள்ளம், நாட்டின் வளர்ச்சி, மனசாட்சியுடன் மக்களின் பணியை மேற்கொள்ளும் மனிதர்களை கண்டறியுங்கள், வாய்ப்பை கொடுங்கள், வாக்களிக்கும் கடமையை செய்யுங்கள், எதிர்கால பலனை எதிர்பார்த்து,
மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment