Thursday, May 5, 2016

ஏணி

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்த கதை உதாரணம் :

அண்ணா தி மு க யாரால் தொடங்கப்பட்டது, எந்த சூழ்நிலையில் தொடங்கப்பட்டது, யார்பெயரில் தொடங்கப்பட்டது என்பதை நினைத்து பாருங்கள், MGR நினைத்து இருந்தால் 
தன் பெயரில் தொடங்கி இருக்கலாம், செய்யவில்லை, ஆட்சியில்  தொடங்கிய திட்டங்கள் அண்ணா பெயரிலும்  வரலாற்று நாயகர்கள் பெயரிலும்   தமிழக அரசு பெயரிலும் தொடங்கினார், அரசு பெயரில் விளம்பரம் வந்தன.

அப்படியிருக்க அவரால் கட்சிக்குள் வந்தவர், Jj தலைவரை மறந்து  அவரது பெயரை பிறந்தநாள், இறந்தநாள்,  தேர்தல்  நேரங்களில், மட்டும்  பயன் படுத்துகின்றனர், மற்ற நேரங்களில் பெட்டியில் வைத்து பூட்டிவிடுகின்றனர், தேர்தல் இரட்டை இலை சின்னத்தில்  MGR நிற்பதாகவே நினைத்து இன்றும் கிரமங்களில் வாக்களிக்கின்றனர், ஆனால் அம்மா MGR, தமிழகஅரசு என்பதை மறந்து தனது பெயரிலேயே அனைத்து திட்டங்களையும் அறிவிக்கிறார்.

அம்மா ஆட்சி, அம்மா தி மு க ஆகிவிட்டது, ஏணியில் இறங்கும் காலம் வந்து விட்டது, இப்போது ஏணி தேவைப்படுகிறது, இறங்க அல்லது ஏற ஏணி வேண்டும், 

இப்போது புரிகிறதா 
உண்மையான விசுவாசி யார்? உண்மையான தொண்டர்கள் யார்,?
இல்லை  இடைப்பட்ட நேரத்தில் MGR பெயர் பயன்படுத்தக்கூடாது என சொல்லப்பட்டுள்ளதா? 
சுயநலம், சுயவிளம்பரம், இது மக்கள் நலனுக்கா? அல்லது மன நலனுக்கா?  அமைச்சர்களும் தமிழக அரசு ஊழியர்கள் என்பதை மறந்து,அம்மாவுக்கு பயந்து அம்மாவின் ஆணைப்படி செய்ய, சொல்ல பழகி கொண்டனர்.


அம்மாவின் தொண்டர்கள் சேவர்களாக மாறி காலடியில் கிடக்கின்றனர், மக்களின் சேவைக்கு மக்களால் தேர்தெடுக்கப்பட்டதை மறந்து விட்டனர்,

தேர்தல் வந்தால் மிண்டும்(ஏணி)  மக்களை தேடி வந்துவிடுகின்றனர்.


சிந்தித்துபாருங்கள்!
உண்மையை உரக்க சொல்ல பழகிக்கொள்ளுங்கள்.

மக்கள் நல்லுறவு 

No comments:

Post a Comment