கோவை மக்கள் நல்லூறவு
புகார் பெட்டி
குடியிருப்புக்கு நடுவே குப்பைமேடு என்ற தலைப்பில் கடந்த 8-4-16, 9-4-16 அன்று கோவை கண்ணப்பநகர் To நல்லாம்பாளையரோடு, நேதாஜி நகர் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான பகுதியில் குடியிருப்புக்கு நடுவே குப்பைகள், கட்டிட கழிவுகள், மாமிச கழிவு, கொட்டப்படுவதும், நெருப்பு பற்ற வைத்து புகைமண்டலம், சமுக விரோதிகள் நடமாட்டம் பற்றி செய்தி, புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது, இது சம்மந்தமாக, மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், காவல் துறை ஆணையாளர், 44/வார்டு Mc அவர்களுக்கும், மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகவல் தரப்பட்டு புகார் மனு அளிக்கப்பட்டு இருந்தது.
இது சம்மந்தமாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மட்டும் நேரில் பார்த்து விசாரணை செய்தனர், 44 வார்டு மாமன்ற உறுப்பினர் பாலு அவர்கள் தேர்தல் முடிந்து செய்து தருவதாக கூறினார்.
ஏற்கனவே கோவை மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் அளித்த புகார் பதியப்பட்டதாக எண் அளிக்கப்பட்டது (54493) 9/4/16.
ஆனால் மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இன்று குப்பைகள் அகற்றப்பட்டு விட்டதாகவும், குறை திர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
Complaint petition Close 6/5/16 இன்று செய்தார்கள்,(enclosed) ஆனால் உண்மையில் மாநகராட்சி தரப்பில் எந்த நடவடிக்கை இன்று வரை எடுக்கப்படவில்லை.
நிர்வாகத் திறமை சூப்பர்!!!.
மக்கள் நல்லூறவு
No comments:
Post a Comment