Friday, August 19, 2016

முயற்சி

கண்ணா !
கண்ணுள்ள திருடனும் சாமியை கும்பிடுகிறான், கண்ணில்லா குருடனும் சாமியை கும்பிடுகிறான், நல்லவனும், கெட்டவனும் கும்பிடுகிறான், இப்படி
யாராய் இருந்தாலும் சாமியை கும்பிட்டுப் பாடு படவேண்டும்.


படைத்த சாமி பாத்துக்கொள்ளும் என்று படுத்துக்கொண்டால் வாழ்க்கையில் படாதபாடு படவேண்டும், முயற்சி செய்தால் முன்னேற்றம்
காணலாம்! இது எல்லோருக்கும் பொருந்தும்.

உழைக்காத மனிதன், முயற்சி செய்யாத மனிதன், பதவி வாங்கி படுத்துக்கொள்பவர்,  இப்படி  கஷ்டப்படதவர்களுக்கு வாழ்க்கையில் எதும் நிலைக்காது.


நேர்மை, நம்பிக்கை, உழைப்பு, துய்மை, முயற்சி இவை உன்னிடம் உண்மையாக இருந்தால் தெய்வ அருள் உரிமையாகும்.

No comments:

Post a Comment