Friday, August 5, 2016

கோவை மாநகராட்சி பற்றி ஓர் அலசல் : லஞ்சம்

லஞ்சம்
கோவை மக்கள் நல்லுறவு நலசங்கம் மற்றும்
மக்கள் நல்லுறவு பத்திரிக்கை
வழங்கும்
இது மக்களின் கருத்து, மக்களின் புகார்...
 


கோவை மாநகராட்சி பற்றி ஓர் அலசல்:

                தற்போழுது கோவை மாநகராட்சியில் அப்ருவல் (கட்டிட அனுமதி) வாங்க, குடிநீர் இணைப்பு வாங்க அதிகாரிகள், அலுவலகப் பணியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என போட்டி போட்டு பண வசூல் (லஞ்சம்) பணத்தையும் வாங்கிக் கொண்டு வேலை ஒழுங்காக செய்வதில்லை, வீண் காலதாமதம், அலைக்கழிப்பு இது மக்களின் கருத்து.

                பணி நேரங்களில் அலுவலர்கள், அதிகாரிகள் அலுவலகத்தில்  இருப்பதில்லை, சொல்லும் காரணம் தேர்தல் பணி, அடையாள அட்டை வழங்குவது, வரி வசூலிக்க மேலிடம் நீர்பந்தம், வரி வசூல், வரி கட்டதவர்களை மிரட்டி வாங்குவது, கடைகள் முன் குப்பைத்தொட்டி வைத்து வசூல் செய்வது, சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாவர்கள் இணைப்பை துண்டிக்க செல்வது போன்ற பணி, நாங்கள் என்ன செய்வது, (Tension Target) நிம்மதியாக வேலை செய்ய முடிவதில்லை, இது ஊழியர்களின் கருத்து.

மக்கள் குறைகள் :

                தெருக்களில் சரியாக குப்பை அள்ள வருவதில்லை, வருபவர்களுக்கு பணம் தந்தால் சுத்தமாகிறது, இல்லையென்றால் குப்பை மேலும் குப்பையாகிறது.

                சாக்கடை தூர் வாருவது இல்லை அடைப்பு, தூர்நாற்றம், மழை வந்தால் சாக்கடை ரோட்டிலும், வீட்டிலும் புகுந்து விடும்.

                குடிநீர் சீரான விநியோகம் இல்லை, சரியான நேரத்தில் விடுவதில்லை, கட்டணம் அதிகம் கடைக்காரர்கள் புலம்பல்.

                விடு விடாக கொசு மருந்து அடிப்பதில்லை, கொசுப்புகை என்று புகை வண்டி வருடம் ஒரு முறை இருமுறை மட்டும்  வார்டில்  வந்து செல்லும்.

                அதிகாரிகள், அமைச்சர்கள், ஆட்சியாளர், மேயர் போன்றோர் பகுதிக்கு, பள்ளிகளுக்கு வருகை புரிந்தால் முதல் நாள்  சாலை சுத்தமாக்கி முத்திரை குத்தி வைப்பார்கள், ஒரு சில நிமிடம் வந்து போகும் இவர்கள் மீது இருக்கும் அக்கறை வாழ்ந்து வரும் மக்கள் மிது காட்டப்படுவதில்லை இது ஏன்?

                ஆனால் மக்களிடையே, நோய் தடுப்பு வீழிப்புணர்வு என்று அம்மா பெயரில் விடுவிடாக நோட்டிசு மட்டும்  வரும்.

                சில வார்டுகளில் பிறப்பு இறப்பு பதிவு செய்ய வசதியில்லை, ஆட்கள் இல்லை, இரண்டு சான்றிதழ் வழங்க அலைக்கழிப்பு, காலதாமதம், கெடுபிடி, சுகாதாரம் துறை கெடுபிடி, பணத்தை கொடுத்தால் இதையெல்லாம் தவிர்க்கலாம்.

                மாநகராட்சி நில அளவை நிலசர்வேயர்கள் முறைப்படி விண்ணப்பம் கொடுத்தாலும் வருவதில்லை.

                தற்பொழுது பத்திரபதிவில் TSLR அவசியம் என ஆணை ஆனால் இதை இவர்களிடம் அவ்வளவு எளிதாக முறைப்படி பெறமுடியாது, எளிதில் தரமாட்டார்கள், அலைக்கழிப்பு மக்கள் கேட்டால் பதில் களப்பணி, உயர் அதிகாரிகள் கூட்டம், தேர்தல் பணி, டாஸ்மார்க் பிரச்சினை, இப்படி தாமதத்திற்க்கு பலகாரணங்கள்.

                ஆனால் பணம் அதிகமாக கொடுத்தால் ஒருமணி நேரத்தில் கிடைத்து விடுகிறது, சிலர் கேள்வி கேட்டால், விண்ணப்பம் கொடு, பணத்தை கட்டு, வரிசைப்படி வந்த பிறகு கடிதம் வரும் விட்டிற்க்கு நாலாபுறம் உள்ளவர்களுக்கு தகவல் தந்த பின்பு, நேரம் கிடைத்தால் வந்து அளந்து பார்த்த பின்பு Tslr தருகிறேன் என பதில் தரப்படுகிறது.

                இந்த அலைச்சலை தாமதத்தை தவிர்க்க பணம் படைத்தவர்கள் தேவைக்கேற்ப்ப பணத்தை கொடுத்து வாங்கிச்செல்கின்றனர்.

                அப்பாவி மக்களிடம் பத்திர பதிவு, இடத்தின் அளவு, அமைந்துள்ள பகுதியை கணக்கில் கொண்டு வசூல் செய்யப்படுகிறதுஅவசரத்தேவை கருதி மக்களும் கொடுத்து பெற்று செல்கிறார்கள்.

                லஞ்சம், தவீர் என விளம்பரம் அரசு போடும் சட்டம் எல்லாம் அப்பாவி மக்கள் பாதிப்படைவதற்க்கும், அரசு ஊழியர்கள் ஆளும் அரசியல் கட்சியாளர் பயன்பெறுவதற்க்கு மட்டும் என பொதுமக்கள் கருதுகிறார்கள்.

நான்கு பக்கமும், நாலு மண்டலமும் லஞ்சத்தால் சூழப்பட்டுள்ளது,

இது ஒரு துளி..,",

                மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், மாமன்ற உறுப்பானர்கள் நேர்மையாக நடப்பவர்கள் யாராவது உங்கள் பகுதியில், வார்டில் இருந்தால் தெரிவிக்கலாம், வாழ்த்து சொல்லலாம்.

மக்களால் நான், மக்களுக்காக நான் இது தான் அது (லஞ்சம்)

நன்றி மக்கள் நல்லுறவு


முடிந்தால் பகிரவும்,

No comments:

Post a Comment