Wednesday, April 6, 2016

வீட்டுக் கடன்



மக்கள் நல்லூறவு
வீட்டுக்கடன் விஷயத்தில் கவனிக்க வேண்டியவை:

சொந்த வீட்டு கனவுக்கு கரம் கோர்ப்பதாக அமைவதால் பல தரப்பினரும் வீட்டுக்கடன் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். பொதுவாக வீட்டுக்கடனுக்கு இரண்டு விதமான வட்டி விகிதங்கள் நடைமுறையில் இருக்கின்றன. நிலையான வட்டி விகிதம்(பிக்சட்), மாறுபடும் வட்டி விகிதம் (பிளோட்டிங்) என்ற இந்த இரண்டு விதமான வட்டி முறைகளில் எது சாதகமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

வட்டி விகித மாறுபாடு
நிலையான வட்டி விகிதம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் மாறுதலுக்கு உட்படாமல் இருக்கும். அந்த காலக்கட்டத்தில் வீட்டுக்கடனை திருப்பி செலுத்துவதற்கான மாத தவணை தொகை (இ.எம்.ஐ.) மாறாமல் இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட ஒரே தொகையை திரும்ப செலுத்துவது பட்ஜெட் போட்டு செலவீனம் செய்பவர்களுக்கு சிரமமின்றி இருக்கும். அதற்குபின் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படக்கூடும். அதற்கு ஏற்ப மாதத்தவணை தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் மாறுபடும் வட்டி விகிதம் அடிக்கடி மாறுதலுக்கு உட்பட்டதாக அமையும். அதனால் திருப்பி செலுத்தும் மாதத்தவணை தொகை வித்தியாசப்படும். சில மாதம் குறைந்த தொகையை செலுத்த வேண்டியிருக்கும். சில மாதங்கள் சற்று அதிகரிக்கும். இதில் எது சாதகமாக இருக்கும் என்பதை மதிப்பீடு செய்து வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமாக அமையும். முக்கியமாக வட்டி விகிதம் குறைவதற்கு அல்லது அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பதை உற்றுநோக்கி கவனித்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

திருப்பி செலுத்தும் காலம்
ஏனெனில் கடந்த சில ஆண்டுகளில் வட்டி விகிதம் குறைந்து பின்னர் அதிகரித்து இருக்கிறது. எனினும் இனிவரும் காலத்தில் வட்டி விகிதம் எப்படி அமையும் என்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். தற்போது 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் எந்த மாற்றமும் இன்றி மாதத்தவணை தொகை அமைந்திருக்கும்.

அதன் மூலம் வீட்டுக்கடனுக்கு என்று தனியாக தொகை ஒதுக்கி மாதம், மாதம் நிலையான தொகையை திருப்பி செலுத்தலாம். இது பட்ஜெட் போடுபவர்களுக்கு சாதகமான விஷயமாக இருக்கும். எனினும் இனிவரும் காலங்களில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் எப்படி அமையும்? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சாதகமான அம்சம்
ஒருவேளை அப்படி வட்டி விகிதம் குறையும்போது அது மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வாங்குபவர்களுக்கு சாதகமாக அமையும். வட்டிவிகிதம் எந்த அளவுக்கு குறைக்கப்படுகிறதோ அது உடனடியாக நடைமுறைக்கு வந்து விடும். அதனால் எந்த மாதத்தில் குறைகிறதோ, அந்த சமயத்தில் இருந்தே வட்டி விகிதமும் குறைய ஆரம்பிக்கும் என்பதால் மாறுபடும் வட்டிவிகிதத்தில் கடன் வாங்கியவர்களுக்கு ஆதாயம் கிட்டும்.

வட்டி விகிதம் குறையும்போது எந்த வங்கி மற்றும் வீட்டுவசதி நிறுவனத்தில் குறைவாக வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறதோ அங்கு மாறுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுவார்கள். அப்படி மாறும்போது செயல்பாட்டு கட்டணம் உள்பட ஒருசில கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். அந்த கட்டணங்களுக்கு ஆகும் தொகை லாபம் தருவதாக அமையுமா? என்றும் பார்க்க வேண்டும். ஏனெனில் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் சமயத்தில் அது வட்டி விகிதத்தில் எதிரொலிக்கும். ஒரு வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனங்களுக்கு இடையே வட்டி விகிதம் பெரிய அளவில் மாறுபாடு இல்லாதபோது இத்தகைய கட்டணங்கள் செலுத்த வேண்டியிருந்தால் அது சாதகமாகத்தான் இருக்குமா? என்று கணக்கீடு செய்து பார்க்க வேண்டும்.
வட்டி விகித மாற்றம்
வீட்டுக்கடனை எத்தனை ஆண்டுகளுக்கு வாங்கி இருக்கிறோமோ அதற்கு ஏற்ப வட்டி விகிதத்தை ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். வீட்டுக்கடனை திருப்பி செலுத்தும் இறுதி காலக்கட்டம் வரையில் கணக்கிடும்போது வட்டி விகிதத்தில் சிறு மாற்றம் இருந்தாலும் அது பெரிய தொகையாக மாறிவிடும். அந்த தொகையை தற்போது செலுத்தி வரும் வட்டி விகிதத்துடன் ஒப்பிடும்போது லாபம் தருவதாக இருந்தால் வீட்டுக்கடனை மாற்றம் செய்வது பலன் தருவதாக அமையும். இனிவரும் காலங்களில் வட்டிவிகித மாறுபாட்டை கவனத்தில் கொண்டு வீட்டுக்கடனை தேர்வு செய்வது புத்திசாலித்தனமாக அமையும்.


மக்கள் நல்லூறவு

என்ன செய்ய போகிறாய்?

மக்கள் நல்லுறவு
ஆட்சியாளர்கள் தரவேண்டிய விளக்கம்.

மக்களை பாதிக்கும் சில விசயம் :

விலைவாசி எதனால் உயர்ந்தது?
அமைச்சர்கள் எதனால் வளர்ச்சி அடைந்தனர்?
மின்சாரம் துறையில் நஷ்டம் எப்படி வந்தது? அதற்கான முயற்சி, வளர்ச்சியை சரி கட்டுகிறேன் என்று சொல்லி அன்றாடம் பயன்படுத்தும் மக்கள் மீது மறைமுக கட்டணம்? குழப்பம் மிக்க கட்டணம் வசூலிப்பது ஏன்?


விளக்கம் கொடு?
மின் கட்டணத்தால் பாதிப்படைந்து மாத மாதம் தனித்தனியா மனிதன் படும் கஷ்டங்களை, கட்டண தினிப்பை, கண்டுகொள்ளாது ஏன்?


இவற்றை ஒன்று கூடி எதிர்க்காமல் நமக்கு ஏன் தொல்லை என விலகி செல்லும் மக்கள், அடுத்து பதிவுத்துறையினால் மக்களுக்கு ஏகப்பட்ட தொல்லை, துன்பம், இதனை அந்த துறை சார்ந்த பணியில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள். 

G u. L v. இடத்தின் மதிப்பில் மாற்றம் என நில மதிப்புகளை உயர்த்தியது ஏன்? 
மக்களின் ஏமாற்றத்தை போலி பத்திரப் பதிவு தடுக்கிறேன் என, V.o, தாசில்தார், சர்வேயர், பதிவுத்துறை பதிவாளர்,இன்னும் கண்ணுக்கு தெரியாத நபர்கள் மற்றும் ,  மாநகராட்சி, வங்கிகள், கணினி, வரிகள், Income tax என பல பிரிவுகள் பயனடைகின்றனர், இப்படி  மக்களை அலைக்கழிதல் தொடர்கிறது.


ஒரே ஒரு பத்திர பதிவில் நாம் கஷ்டப்பட்டு சாம்பாதித்த பணத்தை கொண்டு வாங்கும் சொத்தில் இத்தனை பேர்களுக்கு வருமானம், அவர்களுக்கும் சேர்த்து தான் நாம் சம்பாதிக்கிறோம், பதிவு செய்வது எளிமை ஆக்குவதக்கு மாறாக அதிகாரிகளுக்கு வருமானம் வரும் வகையில் மாற்றியது யார்? மக்களின் தலையில் கல்லை வைத்தது யார் எதனால்? இவையெல்லாம் ஒரு துளியே (ஒரு துறைகளில் மட்டும்)  இதை உணராத மக்கள்,அறியாத மக்கள்,  ஓன்றுகூடாத மக்கள், ஒதுங்கிபோகும் மக்கள், ஒன்றும் செய்யாத மக்கள்,  சுயநலம் கொண்ட மக்கள், சிந்திக்காத மக்கள், அமைதியாக இருக்கும் வரை இந்த நாட்டில் மாற்றம் ஏற்பாடாது, ஆட்சிக்கு வந்தவர்கள் வசதியனவர்களாக மாறி விடுகிறார்கள் அப்பாவி மக்கள் தினம் தினம் வாழ்க்கையை நகர்த்துவது கடினம் ஏப்போதும் ஆட்சி மாற்றத்தை நம்பி எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து போகும் மக்கள் 

வாழ்க தமிழ்நாடு
இதற்க்கு பதில் கிடைக்குமா?
என்ன செய்ய போகிறாய்?

மக்கள் நல்லுறவு

Monday, April 4, 2016

அரசியலுக்கு வருபவர்களே!!! தேவை அரசியல் நாகரிகம்

மக்கள் நல்லூறவு

அரசியலுக்கு வருபவர்களே, வந்தவர்களே, நொந்து போனவர்களே - கவனியுங்கள்
அரசியலில்  தேவை நாகரிகம்.

இன்று எப்படி ஒரு பார்வை.
.
தமிழக அரசியலில் இன்று

அதிமுக தலைவர்  தரக்குறைவாக, கேவலமாக எதிர் போட்டியாளர்களை பற்றி மேடையில் பேசுவது இல்லை, அது போல திமுக தலைவர் இழிவாக பேசுவது இல்லை, தவறை சுட்டி காட்டுவதும், அதை நாசூக்காக கேள்வி எழுப்பி, கவிதையாகவும், குட்டி கதையாகவும் மக்களிடம் எடுத்து சொல்கின்றனர், இதுவும் ஒரு வகையில் ஆரோக்கிய அரசியல்தான் ,ஆனால் இப்போதைய புதுப்புது கட்சிகள் மேடைக்கு மேடை தனக்கு வாக்காளித்தால் செய்ய போகும் செயல்களை, கொள்கைகளை, லட்சியங்களை பற்றி சொல்லாமல், அடுத்தவர்களை அசிங்கமாக மேடையில் பேசி, கைதட்டல் வாங்குவது பெருமை என நினைத்து செயல்படுகின்றனர், ஆட்சி செய்யும், செய்து முடித்த கட்சியை பற்றி இப்போது விமர்சனம் செய்வதால்  நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என்ன பயன்?

எதிர்கட்சி அந்தஸ்து பெற்று எதோ காரணத்தை சொல்லி தேர்ந்தெடுத்த மக்களை மறந்து வெளியே சுயநலம் கருதி வந்து விடுகின்றனர்.

இது மக்கள் நலச்செயலா?
செத்தவன் ஜாதகம் பார்த்து ஒரு பலனும் எதிர்காலத்தில் நடக்கபோவது இல்லை நடக்கும் ஆட்சியில் தப்பு நடக்குது என தெரிந்தால் சுட்டீக்காட்டு,  அதுவே மக்களுக்கு நல்லது என்றால் தட்டிக்கொடு.

இந்த செயல்
வருங்கால இளைஞர்கள் அரசியலில் ஈடுபட முன்மாதிரியாய் இருக்கும் நீ வாழ அடுத்தவனை, தாழ்த்தி பேசி,  கேவலப்படுத்தும் விதமாகவும் அவர்களது தனிப்பட்ட விசயங்களையும், அடுத்தவர்கள் வயது  உடல்நலம் குறித்து விமர்சனம் செய்வதையும், கேலியாக  மேடையில் பேசுவதும்  குறிக்கோளாக வைக்காதே! 

வருங்கால அரசியலுக்கு இதை கற்று தராதே
நாளை உனது நாள் மறவாதே!
மக்களால் உனக்கு வாய்ப்பு கிடைத்தால் வரலாறு படை சரித்திரத்தில் பாடமாக இரு
அதிக
வாய் பேச்சு வாய்ப்பு இழக்கும்,

மக்கள் நல்லுறவு
கோவை மக்கள் நல்லூறவு

மக்கள் விழிப்புணர்வு

மக்கள் விழிப்புணர்வு

விமர்சனம், விளம்பரம் ஆட்சி செய்பவர்கள் மிது  தான் அதிகமாக வரும், மக்கள் ஆட்சியில் எற்படும் குறைகளை, தனது கருத்துக்களை,  எதிர்ப்புகளை,  எதிர்பார்ப்புகளை சொல்ல ஆறு மாதம் அவகாசம் அரசுக்கு கொடுத்து அதன் பின்பு  தீர்க்கப்படவில்லை என்றால், 

ஒன்று கூடி குறைகளை சுட்டிக்காட்டி,  எதிர்ப்பை  அவ்வோப்போது காண்பிக்கமால் அஞ்சு வருசம் கழித்து தான் மக்களுக்கும் அரசு செய்த தவறுகள், செய்யாத செயல்கள் பற்றி ஞாபகம் வருது, இந்த ஐந்து வருட ஆட்சியில் அவரவர் அனைத்து தேவைகளும் நிறைவேற்றிக் கொள்வார்கள் (மக்களை மறந்து) தேர்ந்தெடுத்த கட்சிகள் ஆட்சியில்  செய்த நல்ல செயல்களை தட்டி கொடுக்க மறந்தும், தப்பை தட்டிக்கேட்க மறுத்த மக்களும் ஆட்சியில் தப்பு  செய்தவர்கள் ஆவார்கள்.

ஒன்றுபட்டால் உண்டு தீர்வு
மக்கள் நல்லூறவு

Friday, April 1, 2016

சிந்தனை செய்து

 மக்கள் நல்லூறவு பகிர்கிறது 

நாட்டில் கட்சிகள் அதிகமாக தோன்றுகிறது
காட்சிகள் அடிக்கடி மாறுகிறது
அனைத்தையும் அலசிப் பார்த்தால் குழப்பமாக இருக்கிறது, மக்களுக்கு பிரச்சனை என்று வரும் போது உதவுவதற்கு ஓடோடி வந்தவர்கள் யார்?  யார் வருவார்கள்.??


யோசித்து பாருங்கள்,
உலகில் எல்லாவிதமான மனிதர்களூம் இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டவர்கள் நாம்,  மனிதர்களின் குணத்தை போலவே அவர்களது கட்சிகளும் அமைந்தது, செயல்பாடுகளும் இருந்தது, நாம் அனைவரும் இணைந்து கொடுக்கும் வாக்கு வெற்றி,  அந்த வெற்றி பல மடங்காக உயரும் போது யாருக்கு லாபம்?

நாம் தினந்தோறும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஏதாவது ஒரு முடிவை எடுக்கிறோம். வாக்களிக்கும் இந்த முடிவை...

நேற்று - இன்று - நாளை என யோசித்து பார்த்து முடிவு எடுக்கவும், 

நமது திறமை மற்றும் அனுபவத்தைச் சரியான விகிதத்தில் யோசித்து எடுக்கும் முடிவுகள்
நமது வாழ்வின் முக்கிய திருப்புமுனையாக அமையும். 
இவையே நமது வெற்றியின் வளர்ச்சியையும் நாட்டின் வளர்ச்சியையும் தூக்கிவிடும்.

எனவே சிந்தனை செய்து வாக்களியுங்கள், ஒவ்வொரு மனிதனின், மக்களின் எதிர்கால நன்மையை  தனது கடமையாக நினைத்து வாக்களிக்கவும்,

(100%) வெற்றி வாய்ப்பு பெற்றவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் இம்முறை மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்,

வளமான தமிழகம் அமைய வாழ்த்துக்கள்
மக்கள் நல்லூறவு

ஆறு குணம்

மக்கள் நல்லூறவு பகிர்கிறது வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்

1. பணிவு:
ஒரு துறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் நாலு விஷயங்களைப் பழகியவுடன், கர்வம் அவர்களூடைய தலைக்கு மேல் ஏறிக் கொள்கிறது.
என்னைப் போல் யார்? என்று நினைக்கிறார்கள். இதுதான் அவர்களின் சரிவுக்கான முதல்படி, முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை இதற்குப் பதிலாகத் துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்கு அது துணை நிற்கும்.



2. கருணை:
உங்களைச் சுற்றிள்ளவர்கள் துயரத்தை அனுபவிக்கும் போது, அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள்.
உங்களுக்குப் பிரச்சனை என்று வரும் போது அவர்கள் உதவுவதற்கு ஓடோடி வருவார்கள்.

3. பழகும் தன்மை:
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, உங்களூக்கு மேலே உள்ளவர்களிடமும், கீழே உள்ளவர்களிடமும் வெளிபடையாக நடந்து கொள்ளுங்கள்.
திறந்த புத்தகமாக வாழத் தொடங்குங்கள். பல புதிய வெற்றி வாசல்கள் திறப்பதை அறிவீர்கள்.

4. அரவணைக்கும் குணம்:
உலகில் எல்லாவிதமான மனிதர்களூம் இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டு அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களைப் பார்த்துப் புரிந்து கொண்டு, பழகத் தொடங்கினால் நட்பு வட்டம் பெருகும். வாழ்க்கை சிறகடிக்கும்.

5. இணைந்து பணியாற்றும் குணம்:
நாம் ஒவ்வொருவரும் பல தனிப்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்போம்.
நாம் அனைவரும் இணைந்து பணீயாற்றினால் அந்த வெற்றி பல மடங்காக உயரும்.

6. முடிவெடுக்கும் திறன்:
நாம் தினந்தோறும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஏதாவது ஒரு முடிவை எடுக்கிறோம்.
நமது திறமை மற்றும் அனுபவத்தைச் சரியான விகிதத்தில் யோசித்து எடுக்கும் முடிவுகள்
நமது வாழ்வின் முக்கிய திருப்புமுனையாக அமையும். இவையே நமது வெற்றியின் வளர்ச்சியைத் தூக்கிவிடும்.
மக்கள் நல்லூறவு

ஆட்சி மாற்றம், மக்கள் மனமாற்றம், எதனால்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

ஆட்சி மாற்றம், மக்கள் மனமாற்றம்,  
எதனால் 
தேர்தல் வந்தால், அண்ணா, காமராஜர், பெரியார், M G R வந்து விடுகிறார்கள்.

ஐந்து வருடத்திற்க்கு முன் அருமையான வாய்ப்பை கொடுத்தோம் அதற்க்கு பிறகும் (பாராளுமன்றம்) சந்தர்ப்பம் கொடுத்தோம் நன்மையை விட கஷ்டம் தான் வந்தது.

ஒரு வருடத்திற்க்கு முன்பு   (பெங்களுருக்கு முன்)  வாய்ப்பு  நிறைய இருந்தது, மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தது, பெங்களுரிலிருந்து திரும்பிய பின்பு இனி அம்மா மக்களுக்காக வாழ்வார், தமக்கு  வந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றுவார், இனி மக்களுக்கு நிறைய நல்லது செய்வார், மக்களின் மனங்களில் இடம் பிடிப்பார்,  என காத்து இருந்து பின்பு  ஏமாந்து போன மக்களில்  ஒருவன்,  இங்கு இரண்டாவது வாய்ப்பும் போனது, வெள்ளத்தில் முன்றாவது வாய்ப்பும் போனது.

தினம் தினம் விளம்பரம், போட்டோ, பத்திரிக்கை செய்தி அம்மாவிடம் நல்ல பெயர் வாங்கத்தான் பிள்ளைகள் முன்னுரிமை அளித்தன, இங்கு தனது வாய்ப்பை அமைச்சர்கள் அனைவரும் தவறவிட்டனர்,  கடமையை மறந்து, காசு பார்பதில் கவனமாக இருந்து விட்டனர் காரணம் 
அம்மாவின் கவனக்குறைவு, அம்மாவின் ஆணைப்படி என சொல்லி  சொல்லி அனைத்து தப்பையும் செய்து விட்டனர்.


அதிமுக வின் அலை சென்னை வெள்ளத்தோடு போனது, நல்ல உள்ளத்தோடு சிந்தித்து பாருங்கள் உண்மை புரியும்.


வாய்ப்பு கிடைத்தால் வரலாறு படைக்கவேண்டும்.

கஷ்டங்கள் நிறைந்த சோதனைக்காலம்.

மக்கள் நல்லுறவு