Monday, April 4, 2016

அரசியலுக்கு வருபவர்களே!!! தேவை அரசியல் நாகரிகம்

மக்கள் நல்லூறவு

அரசியலுக்கு வருபவர்களே, வந்தவர்களே, நொந்து போனவர்களே - கவனியுங்கள்
அரசியலில்  தேவை நாகரிகம்.

இன்று எப்படி ஒரு பார்வை.
.
தமிழக அரசியலில் இன்று

அதிமுக தலைவர்  தரக்குறைவாக, கேவலமாக எதிர் போட்டியாளர்களை பற்றி மேடையில் பேசுவது இல்லை, அது போல திமுக தலைவர் இழிவாக பேசுவது இல்லை, தவறை சுட்டி காட்டுவதும், அதை நாசூக்காக கேள்வி எழுப்பி, கவிதையாகவும், குட்டி கதையாகவும் மக்களிடம் எடுத்து சொல்கின்றனர், இதுவும் ஒரு வகையில் ஆரோக்கிய அரசியல்தான் ,ஆனால் இப்போதைய புதுப்புது கட்சிகள் மேடைக்கு மேடை தனக்கு வாக்காளித்தால் செய்ய போகும் செயல்களை, கொள்கைகளை, லட்சியங்களை பற்றி சொல்லாமல், அடுத்தவர்களை அசிங்கமாக மேடையில் பேசி, கைதட்டல் வாங்குவது பெருமை என நினைத்து செயல்படுகின்றனர், ஆட்சி செய்யும், செய்து முடித்த கட்சியை பற்றி இப்போது விமர்சனம் செய்வதால்  நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என்ன பயன்?

எதிர்கட்சி அந்தஸ்து பெற்று எதோ காரணத்தை சொல்லி தேர்ந்தெடுத்த மக்களை மறந்து வெளியே சுயநலம் கருதி வந்து விடுகின்றனர்.

இது மக்கள் நலச்செயலா?
செத்தவன் ஜாதகம் பார்த்து ஒரு பலனும் எதிர்காலத்தில் நடக்கபோவது இல்லை நடக்கும் ஆட்சியில் தப்பு நடக்குது என தெரிந்தால் சுட்டீக்காட்டு,  அதுவே மக்களுக்கு நல்லது என்றால் தட்டிக்கொடு.

இந்த செயல்
வருங்கால இளைஞர்கள் அரசியலில் ஈடுபட முன்மாதிரியாய் இருக்கும் நீ வாழ அடுத்தவனை, தாழ்த்தி பேசி,  கேவலப்படுத்தும் விதமாகவும் அவர்களது தனிப்பட்ட விசயங்களையும், அடுத்தவர்கள் வயது  உடல்நலம் குறித்து விமர்சனம் செய்வதையும், கேலியாக  மேடையில் பேசுவதும்  குறிக்கோளாக வைக்காதே! 

வருங்கால அரசியலுக்கு இதை கற்று தராதே
நாளை உனது நாள் மறவாதே!
மக்களால் உனக்கு வாய்ப்பு கிடைத்தால் வரலாறு படை சரித்திரத்தில் பாடமாக இரு
அதிக
வாய் பேச்சு வாய்ப்பு இழக்கும்,

மக்கள் நல்லுறவு
கோவை மக்கள் நல்லூறவு

No comments:

Post a Comment